தேங்கி நிற்கும் மழை நீரில் காகிதக் கப்பல் செய்து விடுவதற்கே பல வீடுகளில் அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், ஆர்ப்பரித்து வரும் வங்கக் கடல் அலைகள் மீது பாய்மரப் படகு ரேஸில் நம்மை மாதிரி சுட்டீஸ் பங்கு பெறுகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் ஆச்சரியமாக இருந்தது.

தமிழ்நாடு படகோட்டிகள் சங்கம் (TNSA) நடத்திய, 'Indian International Regatta 3' என்னும் பாய்மரப் படகுப் போட்டி சென்னை துறைமுகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதைப் பார்க்கச் சென்றோம். செய்தித் தொடர்பாளர் கீதா ஆன்ட்டி எங்களை வரவேற்று, ஒரு விசைப் படகில் போட்டி நடக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்தார்.

அங்கே... நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய வண்ண வண்ணப் பாய்மரப் படகுகளில்... இந்தோனேசியா, மலேசியா, ஸ்லோவேனியா, அயர்லாந்து போன்ற வெளிநாட்டுச் சுட்டிகளோடு, நம் நாட்டுச் சுட்டிகளும் போட்டியிட்டனர். வேகமாக வீசும் காற்றின் போக்குக்கு ஏற்றபடி பாய்மரங்களைக் கட்டுப்படுத்தி, திசை திருப்பி போட்டியில் விரைந்தனர். நாங்கள் விசைப் படகில் இருந்தபடி கண்டு ரசித்தோம். ஒரு நாளைக்கு மூன்று ரேஸ் வீதம் மொத்தம் 12 போட்டிகள். இதில் கலந்துகொள்பவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் இலக்கை அடைந்த நேரத்தைக் கணக்கிட்டு, இறுதியில் வெற்றி பெற்றவர்களை அறிவிப்பார்கள்.

இந்த ஆண்டு வெற்றிபெற்றது... ஸ்லோவேனியாவின் பீட்டர் லின் ஜனேஸிக் என்ற 13 வயதான சுட்டி. இந்த வெற்றியைப் பற்றி கேட்டதற்கு சிரித்துக்கொண்டே... ''இங்கு வெயில்தான் தாங்க முடியவில்லை'' என்றார். போட்டியில் வென்றதற்கு அடுத்த நாள்... அவரது பிறந்த நாள் என்றதும், அவருக்கு வாழ்த்துச் சொன்னோம். இரட்டையர் பிரிவில் சென்னை, குட் ஷெப்பர்டு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா, நேஷ்னல் பப்ளிக் பள்ளியில் ஒன்பதாவது படிக்கும் வர்ஷா ஜோடி வெற்றி பெற்றது. இவர்கள், நான்கு ஆண்டுகளுக்கும் மேல் இதற்காகப் பயிற்சி பெற்று வருகிறார்களாம்.

இந்த ஆண்டு போட்டியின் ஹைலைட் நவீன் பிரபாகர்! போட்டியில் பங்கேற்றவர்களில் ரொம்பவும் சுட்டி. முகப்பேர் டி.ஏ.வி. பள்ளியில் மூன்றாவது படிக்கிறான். தைரியத் துடன் கடல் அலைகளைச் சமாளித்து, படகைச் செலுத்தும் அழகால்... சக போட்டியாளர்களும் நவீனை உற்சாகப்படுத்தினார்கள். நவீன் வெற்றி பெறவில்லை என்றாலும், பார்வையாளர்களின் சியர்ஸ் இந்த சுட்டிக்குத்தான். நவீன் வயதுப் பிரிவுக்கு போட்டிகள் இல்லாததால் தன்னைவிட அதிக வயது கொண்ட பிரிவில் கலந்து கொண்டான். ''கடல் அலையில் படகு ஓட்ட பயமாக இல்லையா?'' என்றால், ''பயமா... எனக்கா? சுனாமியிலேயே ஸ்விம்மிங் பண்றவன் நான்'' என்று சினிமா டயலாக்கை எடுத்துவிட்டபடியே தொடர்ந்தான், ''நாலு வருஷமா முஸ்டாக் அங்கிளிடம் பயிற்சி பெற்று வருகிறேன். என் அம்மா காந்திமதிதான் என்னை இதில் கலந்துகொள்ள ஆர்வமூட்டினார்.'' என்றபடியே... நமக்கு கையசைத்து விடைகொடுத்தான். நாமும் இந்த சூப்பர் அனுபவத்தை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்த டி.என்.எஸ்.ஏ அமைப்பைச் சேர்ந்த சாந்தா ஆன்ட்டியிடம் விடை பெற்றுக் கிளம்பினோம்!

படங்கள்: பொன்.காசிராஜன்