உன்னைப் பாராட்டி எடைக்கு எடை பொருள் கொடுக்கறதா இருந்தா நீ கேட்கக்கூடிய பொருள் என்னவா இருக்கும் ஜீபா?

-ஏ. திவ்யா, தேவனாங்குறிச்சி.

!புத்தகங்கள் கேட்பேன். ஏன்னா, அதுலதான் நிறைய 'பொருள்’ இருக்கும். அது என்னிக்குமே கெடாது... அதை எல்லாம் 'மை டியர் ஜீபா’ என்கிற பெயரில் அடிக்கடி சுட்டிகளுக்குக் கொடுப்பேன். இதுல ஒரு விசேஷம்... நான் அப்படி அந்தப் பொருள்களைக் கொடுத்த பிறகும் அது என்கிட்டேயும் இருக்கும், சுட்டிங்க கிட்டேயும் இருக்கும். சரி திவ்யா, பொருளை அப்புறம் கொடு... பாராட்றதும் அப்புறம் வெச்சுக்கலாம். முதல்லே என்னோட வெயிட்டைத் தாங்கற மாதிரி ஸ்ட்ராங்கான தராசுக்கு ஆர்டர் கொடு... ஓடு!

ஹாய் ஜீபா... கண்ணீர் உண்டாவது எப்படி என்று கொஞ்சம் சொல்லேன்?

-ரா.திலீப்குமார், காங்கேயம்.

!நம் கண்ணில் உள்ள 'லாக்ரிமல்’ என்ற சுரப்பி விடுகிற திரவம்தான் கண்ணீர். இந்த திரவத்தில் சோடியம் குளோரைடு, அமினோ அமிலம், புரதங்கள், லைஸோஜைல், எலக்ட்ரோலைட்... இப்படி பலதும் கலந்து ஒரு மருந்து மாதிரி இருக்கும். தூசி, புகைன்னு கண்ணில் பட்டால், உடனே இந்த மருந்துதான் கண்ணை 'க்ளீன்’ பண்ணி அவற்றை வெளியே அனுப்புது. அம்மா அடிச்சாலோ, டீச்சர் திட்டினாலோ வர்ற கண்ணீரும் இதேதான். ஆனா, இங்கே மிஸ்டர் மூளையோட பங்களிப்பு அதிகம். சோகமா இருந்தா அழணும்னு காலகாலமா உண்டான பழக்கம், இந்த மூளைகிட்டே பதிஞ்சு போச்சு. 'அம்மா அடிச்சுட்டாங்கன்னு திலீப்குமார் சோகமா இருக்கான்’ அப்படின்னு கண்ணீர் சுரப்பிக்கு மூளை மெசேஜ் அனுப்பும். உடனே அது கண்ணீரைச் சுரக்கும். இதைப் பார்த்து அப்பாவோ, தாத்தாவோ சமாதானம் செய்ய, சாக்லேட் வாங்கிக் கொடுப்பாங்க. நாக்கு குஷி ஆயிடும். 'ம்...கஷ்டப்பட்டு அழறது நானு... டேஸ்டா சாப்பிடறது இந்த நாக்கு பயலா?’ன்னு கண்ணு நினைச்சுக்கும்.

ஏன் ஜீபா... கழுகுகள் காலையிலயே வானில் சென்றுவிடுகிறது... மாலையில்தான் திரும்புது... அதுவரை உணவுக்கு என்ன செய்யும்?

-வி. ஸ்ருதி, கோவை.

! நீ என்ன நினைச்சுட்டு இருக்கே ஸ்ருதி... வானில் ஸ்கூல், ஆபீஸ் எல்லாம் இருக்கும்... அப்பா கழுகு ஆபீஸ்க்கும் பிள்ளை கழுகு ஸ்கூலுக்கும் கிளம்பறப்ப, லஞ்ச் பாக்ஸ் இல்லாம போகுதேன்னு கவலைப்படறியா? பறவைகள் வெளியே போறதே உணவைத் தேடித்தான். புறா, காகம், குருவி இதெல்லாம் தானியம் சாப்பிடும். அதுக்கெல்லாம் இங்கேயே ஈஸியா கிடைச்சுடும். அதனால, உன் வீட்டு மொட்டை மாடியிலோ, கோயிலிலோ சாப்பிடறதைப் பார்த்து இருப்பே. ஆனா, கழுகின் முக்கியமான சாப்பாடு... இறந்த உயிரினத்தோட உடம்பு. அது காட்டுப் பகுதிலேயும், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்கள்லேயும்தான் கிடைக்கும். அதைத் தேடிப் போய் சாப்பிட்டுட்டு வருது.

ஜீபா... நிழல் ஏன் கறுப்பு நிறத்தில் இருக்கு? எப்பூடி!

-டி.பிரபாகரன், பெரியாரியப்பட்டி

!இது என்ன டி.வியா... பிளாக் அண்ட் ஒயிட்ல வர ஆரம்பிச்சு... அப்புறம் கலர்ல வந்து... சிடிவி, எல்ஈடீ, பிளாஸ்மா, 3ஞி-ன்னு போய்கிட்டே இருக்கறதுக்கு?! இப்ப கலர்ல இருந்தா நல்லா இருக்கும்னு யோசிப்போம். அப்புறம் சில்லவுட்டா இல்லாம உருவமும் தெரிஞ்சா சூப்பரா இருக்கும்னு தோணும்... இப்படியே போய்கிட்டு இருந்தா, கடைசிலே... உனக்கும் உன் நிழலுக்குமே வித்தியாசம் தெரியாம கன்ஃப்யூஸ் ஆயிடும். அப்படி ஒரு நிலமையிலே, ''இது என்ன, நிழல் மட்டும் தனியா கீழே கிடக்கு... இந்த பிரபாகர் பயல் எங்கேன்னு உன்னை தேடியபடியே... படுத்துட்டு இருக்கிற உன்னை நான் (!) நிழல்னு நினைச்சு அலட்சியமா மிதிச்சுடலாம். (அய்யய்ய்யோ! நிழல் கறுப்பாவே இருந்துட்டுப் போவட்டும்னு தோணுது இல்லே?!) எப்பூடி?!

ஹாய் ஜீபா... யானைகளின் வால் நுனியில் முடிகள் இருப்பது ஏன்? (கோவிச்சுக்காதே ஜீபா! உன்னைச் சொல்லலை... பொதுவாத்தான் கேட்கறேன்)

-ரா. ராஜகுரு, நிலக்கோட்டை .

!அதென்ன குறிப்பா யானைகள்? உங்க வீட்டுல 'ம்ம்மா’ன்னு கத்துதே மாடு... அதுக்கும்தான் வால் நுனியில முடி இருக்கு. 'நான்தான் ராஜா’ன்னு சொல்லிகிட்டு காட்டுல சுத்துதே சிங்கம்... அதுக்கும்தான் வால் நுனியில முடி இருக்கு. அதுங்ககிட்டே எல்லாம் போய் கேட்க வேண்டியதுதானே இந்தக் கேள்வியை. இதுல கோவிச்சுக்காதேன்னு ஒரு நக்கல் வேற! (ரொம்பவே கோவிச்சுக்கிட்டாலும் அக்கறையோடு உனக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க... எங்க மேலே உட்கார்ற பூச்சிகளை விரட்டத்தான் அப்படி இருக்கு. அதே மாதிரி, 'யானை முடிக்கு பவர் இருக்கு’ன்னு சொல்லி விற்கிற தாயத்தை யாரும் வாங்காதீங்க. அதுல எந்த மந்திரமும் இல்லே... அவங்களை நீங்க விரட்டி அடிங்க!)

'நாட்டுச் சர்க்கரை’ன்னு ஒண்ணு இருக்காமே... அது எந்த நாட்டுச் சர்க்கரை ஜீபா?

-ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

!அது சர்க்கரையே இல்லை மஞ்சரி... அது பனை வெல்லம். இதைத்தான் 'இட் ஈஸ் நாட் சர்க்கரை. இட் ஈஸ் நாட் சர்க்கரை’ன்னு சொல்லிச் சொல்லி... கடைசிலே சுருங்கி இப்படி 'நாட் சர்க்கரை’யா ஆயிடுச்சு போல! (ஸ்ஸ்ஸ்.... யப்பா... இன்னாமா கேள்வி கேக்கறாங்க... ஏதாவது சொல்லி சமாளிக்கணுமில்லே!) அம்மா தாயே... உடனே, நாட்டுத் தக்காளி, நாட்டுக் கோழி, நாட்டு வெடின்னு அடுத்த கேள்விகள கேட்க ஆரம்பிச்சுடாதே... நாம சமாதானமா போயிடுவோம். ஓகே!?