Published:Updated:

எங்கள் பள்ளி!

எங்கள் பள்ளி!
பிரீமியம் ஸ்டோரி
எங்கள் பள்ளி!

எங்கள் பள்ளி!

எங்கள் பள்ளி!

எங்கள் பள்ளி!

Published:Updated:
எங்கள் பள்ளி!
பிரீமியம் ஸ்டோரி
எங்கள் பள்ளி!

ழ்கடல் அமைதியாகவே இருக்கும். ஆனால், அந்த அமைதியில்தான் லட்சக்கணக்கான முத்துக்களும் கோடிக்கணக்கான கடல் செல்வங்களும் உள்ளன. அதுபோல, குழந்தைகளின் ஆழ்மனதில் உள்ள திறமைகளை முத்துக் குளிப்பதுபோல மூழ்கி எடுத்து, உலகின் சொத்தாக மாற்றுவதுதான் இந்தப் பள்ளியின் குறிக்கோள்’’ என அழகாகச் சொல்கிறார் பள்ளியின் தாளாளர் எஸ்.நமச்சிவாயம்.

எங்கள் பள்ளி!

காஞ்சிபுரம் மாவட்டம், போலச்சேரியில் அமைதியான இடத்தில், அழகாக அமைந்திருக்கிறது எங்கள் ‘மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி’. 2012-ம் ஆண்டு 189 மாணவர்களோடு உருவான இந்தப் பள்ளியில், தற்போது 1,250 மாணவர்கள் படிக்கிறார்கள்.

‘‘ ‘தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்’


- என்கிறார் வள்ளுவர். அதாவது, தான் இன்பமாக இருப்பதற்குக் காரணமான கல்வியை, இந்த உலகமும் பெற்று இன்பமாக இருக்க வேண்டும் என நினைத்து, கற்றவர்கள் அதையே மேலும் மேலும் அளிப்பார்கள். இந்தப் பொருளுக்கு ஏற்ப வாழ்ந்த மகரிஷி மகேஷ் யோகி அவர்களின் ஆசியோடு இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. குழந்தைகளிடம் தன்னம்பிக்கை வளர்த்து, கல்வி என்னும் கடலில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் தோணியாக நாங்கள் செயல்படுகிறோம்’’ என்கிறார் பள்ளியின் முதல்வர் கே.உமா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்கள் பள்ளி!

மாணவர்கள் மனதை ஒருங்கிணைத்துக் கற்பதன் மூலம், அவர்களின் சிந்தனையும் செயலாற்றலும் நன்கு விரிவடையும். இதை உணர்ந்தே தினமும் காலையிலும் மாலையிலும் தியானப் பயிற்சியை எங்களுக்கு அளிக்கிறார்கள். ‘‘ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு விஷயத்தில் கறாராக இருக்கும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் பழகுவதில் நண்பர்களாகவும் இருப்பார்கள். எங்கள் வகுப்பறை எப்போதும் கலகலப்பாக இருக்கும்’’ என்கிறார் துணை முதல்வர் கீதா பாஸ்கர்.

எங்கள் பள்ளி!

‘‘தனித்திறன் ஆற்றலுக்கு O.S.L.A., தன்னலம் இல்லா தொண்டுக்கு J.R.C., உடலை உறுதிப்படுத்தும் ‘ஸ்போர்ட்ஸ் கிளப்,’ தெளிவான ஆங்கில அறிவுக்கு ‘இங்கிலீஷ் கிளப்,’ தித்திக்கும் செந்தமிழுக்கு ‘தமிழ் கிளப்,’ நமது கலாசாரம் மற்றும் பண்பாட்டை உணர்த்தும் பயிற்சி வகுப்புகள் என ஒவ்வொரு விஷயத்திலும், அன்பையும் அக்கறையையும் கலந்து எங்கள் மாணவச் செல்வங்களை வழிநடத்திச்செல்கிறோம். தன்னம்பிக்கை, துணிவு, தெளிவு... இதுதான் எங்களது மகரிஷி வித்யா மந்திரின் வெற்றிப்படிகளுக்கான அஸ்திவாரம்’’ எனப் புன்னகைக்கிறார், முதல்வர் உமா.

எங்கள் பள்ளி!

அந்த வெற்றிப்படிக்கட்டுகளில் நாங்கள் ஒவ்வொரு நாளும் உற்சாகமாக நடைபோடுகிறோம்!

- பி.நந்தினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism