இ.கார்த்திகேயன்

குழந்தைகளின் ஆளுமை மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் விதத்திலும்... பள்ளிச் சுட்டிகளுக்கு இன்றைய சமூக நிலையை உணர்த் தவும் தொடங்கப் பட்டதுதான்... 'குழந்தை கள் பாராளுமன்றம்’. அந்த வகையில், விளாத்தி குளத்தில் 'வேம்பு மக்கள் சக்தி இயக்க’த்தின் கீழ் செயல்படும் மாமுறையினார்புரம் கிராமத்து சுட்டிகளின் பார்லிமென்ட் மூலம், கிராமத்துக்கு மின் வசதியை அளித்து ஒளியேற்றி இருக்கிறார்கள் சுட்டிகள்.

''ரமேஷ், கண்ணன், லெட்சுமி... பார்லிமென்ட் மீட்டிங் ஸ்டார்ட் ஆகப் போகுது... வட்டமா உட்காருங்க. அவைத் தலைவரா உள்துறை அமைச்சரான ஆனந்தராஜை முன் மொழிகிறேன்'' என்று பிரதமரான 9-ஆம் வகுப்பு சுட்டி முத்துமாரி சொல்ல, 'நாங்கள் வழி மொழிகிறோம்’னு எல்லா அமைச்சர்களும் சொன்னார்கள். ''இந்த மாச கூட்டத்துல கிராமத்துத் தெரு ஓரம் இருக்கிற குப்பைக் கழிவுகளை சுத்தம் செய்யணும்னு தீர்மானம் நிறைவேற்றுவோம்''என்று அவைத் தலைவரான சுட்டி தீர்மானம் நிறைவேற்றினார்.

''ஒவ்வொரு மாசமும் 17-ந்தேதி மீட்டிங் போடுவோம். உறுப்பினர் களோட சம்மதத்தோட, அவைத் தலைவரை செலக்ட் பண்ணுவோம். ஒவ்வொரு கூட்டத்திலும் முந்தைய மாத அறிக்கையை உள்துறை அமைச்சர் வாசித்ததும், கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அயன்விருசம்பட்டி ஊராட்சியில இருந்து எங்க மாமுறையினார்புரம் கிராமத்துக்கு 3 கி.மீ. பஸ் வசதி கிடையாது. அறுபது வருஷமா லைட் வசதி கிடையாது. இரவில் கையில சிமினி விளக்கு அல்லது... டார்ச் லைட் அடிச்சிட்டேதான் போகணும். வழியில பூரான், பாம்பு, கீரின்னு கிடக்கும். பாம்பு கடிச்சி நிறைய பேரு இறந்திருக்காங்க. இதனால, ஆறு மணிக்கு மேல டியூசனுக்கே போக முடியாது. இதுக்காக போன வருஷம் மார்ச் மாத பார்லிமென்ட் மீட்டிங்ல தீர்மானம் நிறைவேற்றி, முதல் மனுவை பஞ்சாயத்துத் தலைவரிடம் கொடுத்தோம்''.

''சின்னப் புள்ளைங்க எப்படி பவர் கொண்டுவரப் போறீங்கன்னு ஐயா சொன்னாங்க... அப்புறம், கையெழுத்து போட்டுக் கொடுத்தாங்க. ஊரக வளர்ச்சி இயக்குநர், எம்.எல்.ஏ, கலெக்டர்னு எல்லோருக்கும் ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு மனு கொடுப்போம். இதுக்காக ரொம்பவே அலைஞ்சோம். இப்போ அயன்விருசம்பட்டியில் இருந்து மாமுறையினார்புரம் வரை 30 விளக்குக் கம்பங்கள் நட்டு லைட் போட்டிருக்காங்க! ரொம்பவே சந்தோஷமா இருக்கு. எங்க கிராமத்துல மொத்தமே ரெண்டு தண்ணீர் குழாய்தான் இருந்துச்சி. இப்போ தெருவுக்கு ஒரு பைப் இருக்குது, குப்பை கொட்டுற இடங்களை சுத்தம் செய்து, அதுல மரக்கன்று நட்டு, தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிச்சிட்டு வர்றோம்'' என்றார் உள்துறை அமைச்சர் ஆனந்தராஜ்.

கல்வித்துறை அமைச்சரான தமிழ்ச்செல்வன், ''எங்க ஊரில் 'நூலகப் பெட்டி’ செய்து வச்சிருக்கோம். உறுப்பினர் களிடம் மாதம் ஒரு ரூபா சந்தா வசூல் செய்து, இதுவரை 85 புத்தகம் சேர்த்து வச்சிருக்கோம். மாணவர் கள், உறுப்பினர்கள் மட்டும் இல்லாம ஊர் மக்களும் படிக்க லாம். 15 புத்தகங்கள் படித்து முடித்தவர் களுக்கு ஒரு பரிசு கொடுப்போம். பள்ளிச் சுட்டிகளுக்கு எக்ஸாம் பீஸ், நோட்டுப் புத்தகமும் நிதி அமைச்சர் நிதியில் இருந்து வாங்கிக் கொடுப்போம். தேர்வு விடுமுறை, கோடை விடுமுறைகளில் பக்கத்து ஊர் மாணவர்களை அழைத்து, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவோம். இதற்காக உள்ளூர் எம்.எல்.ஏ, அமைச்சர்கள், பஞ்சாயத்துத் தலைவர், கவுன்சிலர்களிடம் நன்கொடை வசூலிச்சு, விழாவுக்கு அவங்களையே சிறப்பு விருந்தினரா அழைப்போம்'' என்றார்.

''வேம்பு இயக்கத்தின் கீழ் 60 கிராமங்களில் செயல்படும் தென்மாவட்ட குழந்தைகள் பார்லிமென்ட்டில், சிறந்த குழந்தைகள் பாராளுமன்றமாக இது திகழ்கிறது'' என்றார் ரிக்கோ.

படங்கள்: ஏ.சிதம்பரம்