கே.யுவராஜன்

ஹாய் சுட்டீஸ்... உலக உலாவுக்காக தரையிலயே சுத்திவந்து, 'போர்’ அடிக்குது. இந்த முறை தண்ணிக்குள்ளே ரவுண்டு அடிப்போமா...

மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்று... கிரனேடா. இங்கே கடலுக்கு அடியில் ஆழம் குறைவான நீர்ப் பகுதியில், பவளப் பாறைகள் உள்ள இடங்களில் நீச்சல் அடிச்சுக்கிட்டே... விதவிதமான மனித உருவச் சிலைகளைப் பார்த்து ரசிக்கலாம். இதை உருவாக்கிய ஜேசன் டெய்லர், சிலைகளைச் செய்வதிலும் ஸ்கூபா டைவிங்கிலும் எக்ஸ்பர்ட். சிலிகான், செராமிக் ஓடுகள், கண்ணாடித் துண்டு கலவைகள் எனக் கலந்து சிலைகளை உருவாக்கி, இப்படி நிறுத்தி வெச்சிருக்கார். பவளப் பாறைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதை எடுத்துச் சொல்ல, இதைச் செய்து இருக்காங்க. (எங்க இடத்துக்கு வந்துட்டு எங்களுக்கு ஒரு சிலை வைக்கலையேன்னு மீன்கள் கோவிச்சுக்கலையா?

சுற்றுலாவுக்காக வெவ்வேறு இடங் களுக்குப் போறப்ப, என்னதான் சொகுசான ஹோட்டலில் தங்கினாலும்... கட்டிலில் படுத்துட்டு, கான்கிரீட் மோட்டு வளையத் தான் பார்க்கணும். இந்த சலிப்பைப் போக்க, இப்ப உலகின் பல இடங்களில் கடலுக்கு அடியில் ஹோட்டல் கட்றாங்க. அதுல ரொம்பவே ஃபேமஸ்... பிஜி தீவில் உள்ள போஸிடன் ரிசார்ட்ஸ் மற்றும் மாலத்தீவின் 'ஹில்டன் மாலத்தீவு ரிசார்ட்ஸ் அண்ட் ஸ்பா’ என்ற ஹோட்டல்கள். அங்கே, தலைக்கு மேலேயும் நம்மைச் சுற்றிலும் கண்ணாடிச் சுவர்கள்... அங்கே உலவும் மீன்களை ரசிச்சுக்கிட்டே தூங்கலாம். ரெஸ்டாரன்ட், ஸ்விம்மிங்ஃபூல், ஸ்கூபா டைவிங் எல்லாமே இருக்கு. (ரூம்ல அசந்து தூங்கிட்டா 'தண்ணி’ தெளிச்சு எழுப்புவாங்களோ!)

துபாயின் சார்ஜாவில், 'துபாய் மால்’ என்ற பெரிய வணிக வளாகம் இருக்கு. 1200 கடைகள், 22 சினிமா அரங்குகள், ஐஸ் ஸ்கேட்டிங் என பிரமாண்டத்துக்குப் பஞ்சமே இல்லை. இதில் ஹைலைட்... மிகப் பெரிய மீன் கண்காட்சியகமும் கண்ணாடிப் படகு சவாரியும். இங்கே, கிட்டத்தட்ட 33,000 மீன்கள் உலாவிட்டு இருக்கும். அதுக்கு மேலே கண்ணாடித் தரை. அதில் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர்... அதுக்கும் மேலே ஒரு படகு... அதன் அடிப்பகுதியும் கண்ணாடியால் ஆனது. பல பள்ளிகளில் இருந்தும் சுட்டிகளைக் கூட்டிட்டு வந்து, படகில் ரவுண்ட் அடிச்சுக்கிட்டே மீன்களைப் பற்றிய பாடங்களை நடத்தறாங்க. தரையில் படுத்துக்கிட்டும்... மேலே கண்ணாடிச் சுவரில் சுத்தற மீன்களைப் பார்த்து, சுட்டிகள் நோட்ஸ் எடுத்துப்பாங்க. (சரியா நோட்ஸ் எடுக்கலைன்னா சுறாகிட்டே விட்டுடுவேன்னு மிஸ் மிரட்டலாம்!)

தண்ணீருக்கு அடியில் நீச்சல் மட்டும்தான் அடிக்கணுமா என்ன? நாங்க 'கோல்’ அடிப்போம் என்கிறார்கள் ரக்பி வீரர்கள். இதுக்காகவே... ஒவ்வொரு வருஷமும் 'அண்டர்வாட்டர் வேர்ல்டு ரக்பி சாம்பியன்ஷிப்’ போட்டிகள் நடத்தப்படுது. பெரிய நீச்சல் குளத்தின் அடிப்பகுதியில் ரெண்டு பக்கமும் கூடையை வெச்சுடுவாங்க. இதுதான் கோல் போஸ்ட். தண்ணிக்குள்ளே பந்தை விரட்டிப் பிடிச்சு, எதிரணியின் கூடைக்குள்ளே போட்டுட்டா... கோல்! ஹாக்கி, கராத்தே போன்ற விளையாட்டு களையும் தண்ணிக்குள்ளே 'தம்’ பிடிச்சுக்கிட்டு விளையாடறாங்க. (மழை வந்துட்டா போட்டி கேன்சல் ஆயிடுமோன்னு கவலைப்பட வேண்டாம்!)