பள்ளிக்கூடம் என்பது ஒரு பூந்தோட்டம். அதில், மாணவர்களாகிய நாங்கள் மலர்கள் என்றால், எங்கள் அறிவை மலரச்செய்வது ஆசிரியர்கள். அதே நேரம், இந்தப் பூந்தோட்டத்தைப் பராமரிப்பதில் ஆசிரியர்களைத் தாண்டி பலரின் பங்களிப்பு இருக்கிறது. அவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும் அல்லவா? ஆயாம்மா, டிரைவர் அண்ணா, ஆபீஸ் ஸ்டாப் என நாங்கள் தினமும் பார்க்கும் ஆறு பேரைத் தேர்ந்தெடுத்தோம். ஒரு வகுப்பறையை சூப்பராக அலங்கரித்து, அங்கே அவர்களுக்கென பரிசுகளை வாங்கி வைத்தோம்.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘‘உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு வாங்க’’ என அவர்களின் கண்களை மூடி அழைத்துவந்து, அந்தப் பரிசுகளை அளித்தோம். அவர்கள் முகங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சி, என்றென்றும் எங்கள் மனங்களில் இருக்கும்.
- ஜெ.அசிண்டா சோபியா, எச்.ரக்ஷனா, மோனிஷ், சஞ்சய், சாய் பிரசன்னா, விக்னேஷ்.