மதுரையின் பெருமைகளில் ஒன்று காந்தி மியூஸியம். காந்தி மதுரைக்கு வந்தபோது, ஏழை விவசாயிகள் உடுத்த உடை இல்லாமல் இருப்பதைப் பார்த்து, அரையாடை உடுத்த ஆரம்பித்தார். இந்த அருங்காட்சியகம் பற்றி சில வரிகள்...

காந்தியின் மறைவுக்குப் பிறகு, இந்தியாவில் ஏழு இடங்களில் காந்தி நினைவு அருங்காட்சியகங்களை ஜவஹர்லால் நேரு அமைத்தார். அவற்றில் ஒன்று இது. 1959 ஏப்ரல் 15-ல் நேருவால் திறக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காந்தி பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய கடிதங்கள், புத்தகங்கள் இங்கே உள்ளன. தமிழில் காந்தி எழுதிய கடிதம் மிகச் சிறப்பானது. காந்தியின் புகைப்படங்கள் பொக்கிஷமாக உள்ளன.

காந்தி சுடப்பட்டபோது அணிந்திருந்த ஆடையின் ரத்தக்கறை படிந்த ஒரு பகுதி, இங்கே பாதுகாக்கப்படுகிறது.
‘காந்தி குடில்’ என்கிற பெயரில், அவர் தங்கிய வீட்டின் மாதிரியும் உருவாக்கப்பட்டுள்ளது. காந்தியின் அஸ்தி மண்டபம் ஒன்றும் உள்ளது.

இந்தியாவின் சிறப்புகள், சுதந்திரப் போராட்ட வரலாறு, தேசியக்கொடியின் வரலாறு ஆகியவற்றை ஓவியங்களாக இங்கே பார்க்கலாம்.
இந்த அருங்காட்சியகத்துக்குள் ஒரு முறை வலம் வந்தால், காந்தியை முழுமையாக அறிந்த உணர்வு ஏற்படும்.
- எஸ்.சுதர்சன முத்தையா, எஸ்.அஸ்வின், டி.மனோஜ், பி.வி.மதுமித்ரா, ஆர்.லாவண்யா, பி.நவநீத கிருஷ்ணன்.