மதுரைனு சொன்னதும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அப்புறம் ஞாபகத்துக்கு வர்றது ஜிகர்தண்டா.

‘ஜிகர்’ என்றால், உள்ளம். ‘தண்டா’ என்றால், குளிர்ச்சி. அதாவது, ஜிகர்தண்டா குடிச்சீங்கன்னா உங்க மனசும் ஜில்லுனு ஆகிடும். அந்த ஜிகர்தண்டா எப்படி செய்றாங்க தெரியுமா?

ஒரு ஜிகர்தண்டா கடைக்குப் போய் நின்னதும், ‘‘வாங்க, எத்தனை வேணும்?’’னு கேட்டுக்கிட்டே ஜிகர்தண்டா போடப் போனாங்க.

அவங்க கையைப் பிடிச்சு நிறுத்திட்டு, ‘‘அக்கா, ஜிகர்தண்டா போட எங்களுக்கு கத்துக்குடுங்க. நாங்களே போட்டுக் குடிச்சுக்குறோம்’’ எனச் சொன்னோம்.

‘‘சரிதான், காசு நீங்க குடுப்பீங்களா... நான் கொடுக்கணுமா?’’ எனச் சிரிச்சுக்கிட்டே கேட்டாங்க.

‘‘அதை நாங்க கொடுக்கறோம். உங்க பேர், கடையைப் பத்தி சொல்லுங்க’’ எனப் பேச்சுக்கொடுத்தோம்.

‘‘என் பேரு சுல்தானம்மா. என் அப்பா 40 வருஷமா நடத்தின கடையை, இப்போ நான் கவனிச்சுக்கிறேன்’’ எனச் சொல்லிக்கிட்டே, ஜிகர்தண்டா ஃபார்முலாவைச் சொன்னாங்க.

ஒரு டம்ளர்ல கொஞ்சம் கடல்பாசியை எடுத்துக்கச் சொன்னாங்க. ஜிகிர்தண்டாவுக்கு டேஸ்ட்டே கடல் பாசிதான். அப்புறம், ஐஸ்க்ரீம், பால்கோவா, பால், பாலாடை, பாதாம், பிஸ்தா, முந்திரி, பாதாம் பிசின், எசென்ஸ் எனக் கொஞ்சம் கொஞ்சமா போடச் சொன்னாங்க. எல்லாம் போட்டு நல்லாக் கலந்ததும் ஜில் ஜிலீர் ஜிகர்தண்டா ரெடி.

நாங்களே கலந்து தயாரிச்ச ஜிகர்தண்டாவுக்கு கூடுதல் ருசிதான்!

- வி.அருணாதேவி, ஜி.இந்துமதி, ஜெ.ஜோஸ்வா ராபர்ட்,எஸ்.ஹேமராஜன்.