Published:Updated:

வயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்!

வயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்!

வயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்!

வயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்!

வயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்!

Published:Updated:
வயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்!

ஸ்மார்ட்போனில் விதவிதமான கேம்ஸ் விளையாடிய விரல்களால், பசுமையான நெற்பயிர்களைத் தடவியபோது, மனதுக்குள் பரவியது பரவசம்.

வயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்!

ஆமாம் நண்பர்களே, மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடத்தில் முதலில் இருப்பது  உணவு. அதை நமக்கு அளிக்கும் விவசாயி ஒருவரைச் சந்தித்து நன்றி தெரிவிக்க, மதுரைக்கு அருகே இருக்கும் குலமங்கலம் கிராமத்துக்குச் சென்றோம்.

அங்கே, ஒரு வயலில் களை பறிப்பு நடந்துகொண்டிக்க, ‘‘இந்த வயலுக்கு ஓனர் யாருங்க?” எனக் கேட்டோம்.

‘‘நான்தான். என் பேரு கிருஷ்ணன். சொல்லுங்க புள்ளைங்களா என்ன விஷயம்?’’ என்றபடி வயலில் இருந்து மேலே வந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்!

‘‘என்ன அண்ணே, நீங்களும் வேலை செஞ்சுட்டு இருக்கீங்க? சினிமாவில் காட்டுற மாதிரி, வெள்ளை வேட்டி சட்டையில் குடையோட நிற்பீங்கன்னு நினைச்சேன்’’ என்றான் சந்துரு.

சிரித்த அவர், ‘‘நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லே அப்பு. கூலி ஆட்களோட சேர்ந்து குடும்பமே வயலில் இறங்குவோம். ஆபீஸுக்குப் போற மாதிரி, இதை வேலையா நினைக்கிறது இல்லை. இது குழந்தை மாதிரி, நாங்களும் சேர்ந்து கவனிச்சுப்போம்’’ என்றார்.

‘‘நீங்க செய்ற விவசாயம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்’’ என்றாள் தாரிணி.

வயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்!

‘‘இது, ஒருங்கிணைந்த பண்ணையம். அதாவது, வயல் விவசாயம் மட்டுமில்லாம  ஒண்ணோட ஒண்ணு  தொடர்புடைய பண்ணை விஷயங்களைச் செய்றது” என்றார்.

‘‘புரியலையே” என்றோம்.

‘‘வாங்க, சுத்திக்காட்டி சொல்றேன்’’ என்று, அழைத்துச் சென்றார்.

வயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்!

அங்கே ஒரு குட்டை இருந்தது. ‘‘இது,  மீன் வளர்ப்பு,  குட்டை. இங்கே பல வகை  மீன்களை வளர்க்கிறோம். அதோ, அந்த தென்னந்்தோப்புக்கு நடுவில் மண்புழு உரம் தயாரிக்கிறோம். அதோடு, தேன் சேகரிப்பும் செய்றோம். விடியற்காலையில் ஆரம்பிச்சு ராத்திரி வரை பல வேலைகளைச் செய்வோம். இங்கே தயாரிக்கும் உரத்தையே வயலுக்குப் போடுவோம்’’ என்றவர், ஒவ்வோர் இடமாக அழைத்துச் சென்றார்.  மீன் வளர்ப்பு, தேன் சேகரிக்கும் பெட்டிகளைவைத்து தேன் கூடுகளை உருவாக்குவது எப்படி என ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கமாகச் சொல்ல, ஆச்சர்யமாக இருந்தது.

வயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்!

பண்ணையை ஒட்டி, சோலார் பேனல்கள் இருந்தன. அதன் மூலம் விவசாயத்துக்குத் தேவையான மின்சாரத்தை உருவாக்குவதாகச் சொன்னார். அங்கே இருந்த ஆட்டு மந்தையில் இருந்து ஆட்டுக்குட்டிகளைத் தூக்கிக் கொஞ்சினோம்.

‘‘அண்ணே, நாங்களும் கொஞ்ச நேரம் விவசாயம் செய்ய ஆசைப்படுறோம். கத்துக்கொடுக்கறீங்களா?’’ எனக் கேட்டோம்.

வயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்!

‘‘அதுக்கென்ன வாங்க. எப்படி களை பிடுங்கறதுனு சொல்லித் தர்றேன்’’ என்று வயலுக்கு அழைத்துச் சென்றார்.

வரப்பு வெட்டி, களை பிடுங்கி, உற்சாகத்துடன் சேற்றை வாரி ஒருவர் மீது ஒருவர் பூசிக்கொண்டோம்.

வயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்!

‘‘சேற்றில் கால் வைப்பதை கேவலமா நினைக்காம, உங்களை மாதிரி ஊருக்கு நாலு பேர் வந்தா போதும். நம்ம விவசாயம் என்றைக்கும் அழியாது’’ என்றார் கிருஷ்ணன் அண்ணன்.

‘‘முழுப் பரீட்சை முடியட்டும் அண்ணே, மறுபடியும் இங்கே வந்து முழு விவசாயத்தையும் கத்துக்கிறோம்’’ எனச் சொல்லிவிட்டு விடைபெற்றோம்.

- ஸ்ரீஅஸ்வினி, வினிதா, மதுநிஷா, தாரிணி, ஸ்வேதா, அரவிந்த் குமார், அஷ்ரஃப் அலி, சந்துரு, அஸ்கர்,     ஆனந்த முருகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism