Published:Updated:

தூங்கா நகரில் உளியின் ஓசை!

தூங்கா நகரில் உளியின் ஓசை!

தூங்கா நகரில் உளியின் ஓசை!

தூங்கா நகரில் உளியின் ஓசை!

தூங்கா நகரில் உளியின் ஓசை!

Published:Updated:
தூங்கா நகரில் உளியின் ஓசை!

‘தூங்கா நகரம்’ எனும் மதுரைக்கு கோயில், சாப்பாடு, சினிமா என எத்தனையோ சிறப்புகள் இருப்பது தெரியும். பலருக்கும் தெரியாத விஷயம், சிற்பங்கள் செய்வதிலும் மதுரைக்காரர்கள் சிறப்பானவர்கள். மதுரை மாநகருக்கு மிக அருகே இருக்கும் பசுமலை என்கிற ஊருக்குள் நுழைந்தால், உளிகளின் ஓசை உங்களை வரவேற்கும். ஊரே சிற்பக் கலைக்கூடமாகக் காட்சிதரும். அப்படி ஒரு சிற்பக் கலைக்கூடத்துக்குள் நுழைந்தோம். மதுரை வீரன், சுடலைமாடசாமி, கள்ளழகர், துர்கை அம்மன், விநாயகர், நாகம்மா என அழகழகான சிற்பங்கள் இருந்தன. புன்னகையோடு வரவேற்றார், அந்தக் கலைக்கூடத்தின் உரிமையாளரான ஒரு பாட்டி.

தூங்கா நகரில் உளியின் ஓசை!

‘‘வணக்கம் பாட்டி, உங்க பேர் என்ன? எத்தனை வருஷமா இந்தத் தொழிலைச் செய்றீங்க?’’

‘‘என் பேரு தேவி. நாங்க, தலைமுறை தலைமுறையா சிலை செய்றோம்.’’

‘‘இந்தச் சிலைகள் செய்ய கற்களை எங்கே இருந்து கொண்டு வர்றீங்க?’’

‘‘சிலையின் அளவு, தேவையைப் பொறுத்து அவனியாபுரம், முசிறி, பொள்ளாச்சி எனப் பல இடங்களில் இருந்து வரவைப்போம்.’’

‘‘ஒரு சிலையைச் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?’’

‘‘சிலையின், அளவைப் பொறுத்து. சின்னச் சிலைகள் செய்றதுக்கு பத்து, பன்னிரெண்டு நாளாகும். சில பெரிய சிலைகள் மாசக் கணக்குல ஆகும். ஒரு சிலையை மூன்று மாதம்கூட செய்திருக்கோம்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தூங்கா நகரில் உளியின் ஓசை!

‘‘ஒரு சிலையை எவ்வளவு விலைக்கு விற்பீங்க?’’

“அதுவும் சிலையோட அளவைப் பொறுத்துதான். சின்னச்சின்ன நாக சிற்பங்களை 500 ரூபாய்க்கு கொடுப்போம். பெரிய சிலைகளுக்கு அதுக்கேற்ப இருக்கும்.’’

‘‘எல்லாச் சிலைகளையும் இங்கேதான்  செய்வீங்களா?’’

‘‘சின்னச்சிலைகள் என்றால்,  இங்கேயே செய்து அனுப்புவோம். 10 அடிக்கு மேல் இருக்கும் சிலைகளை, எங்கே கேக்கிறாங்களோ அங்கேயே போய் செய்து கொடுப்போம்.’’

‘‘நீங்க செய்ற சிலைகளை, வெளியூரிலும் வாங்குவாங்களா?’’

‘‘வெளிநாடுகளுக்கே அனுப்புவோம் அப்பு. கர்நாடகா, ஆந்திரா என ஆரம்பிச்சு சிங்கப்பூர், மலேசியாவுக்கும் அனுப்பி வைக்கிறோம்.’’

‘‘சாமி சிலைகளை உளி, சுத்தியால் செய்றது நல்லதா, மெஷினில் செய்றது நல்லதா?’’

‘‘மனச் சுத்தம், அக்கறையோடு எதுல செஞ்சாலும் அது சாமிதான்.  உளியால் செதுக்கி செய்ய ரொம்ப நாள் ஆகும். மெஷினில் சீக்கிரம் முடியும். எனக்கு உளியில் செய்றதுதான் ரொம்பப் பிடிக்கும்.’’

‘‘சில சிலைகளுக்கு மட்டும் பெயின்ட் அடிச்சு இருக்கீங்களே, அது ஏன்?’’

‘‘கல்லில் செதுக்கும் சிற்பங்களுக்கு வர்ணம் பூச மாட்டோம். அது அப்படியே இருந்தாதான் அழகு. சில சிலைகளை சிமென்ட்ல செய்வோம். அதுக்கு மட்டும் வர்ணம் பூசுவோம்.’’

‘‘இந்த வேலையில் ஏதாச்சும் கஷ்டம் இருக்கா?’’

தூங்கா நகரில் உளியின் ஓசை!

‘‘கஷ்டம் இல்லாமல் எந்த வேலையும் இல்லை. ரொம்ப ஜாக்கிரதையா செய்யணும். சின்னதா தப்பு நடந்தாலும் மொத்த உழைப்பும் வீணாகிடும். மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும். சிலையைச் செதுக்கறப்பவும், மெஷினில் இழைக்கிறப்பவும் தூசு பறக்கும். இருந்தாலும்  எல்லோரும் கும்பிடுற சாமி சிலையையே செய்றோம்கிற பெருமையோடு செய்யறோம். அதுக்கு முன்னாடி வேற என்ன வேணும்?’’

‘‘இவ்ளோ நேரம் சீரியஸா பேசிட்டோம். ஜாலியா ஒரு கேள்வி கேட்கலாமா?’’

‘‘தாராளமா கேளுங்க. உங்களோடு பேசினதுல நானும் சின்னப்புள்ளையா ஆன மாதிரி இருக்கு.’’

‘‘நீங்க செய்ற சாமி சிலைக்கு திடீர்னு உயிர் வந்து என்ன வரம் வேணும்னு கேட்டா என்ன செய்வீங்க?’’

‘‘நல்லா இருக்கு. அப்படியே சாமி என் முன்னாடி வந்துச்சுனா, கும்புடு போடுவேன். நீங்க வந்ததே பெரிய வரம் சாமி. உங்க ஆசீர்வாதத்தால் நல்லா உழைச்சு சாப்பிட்டுட்டு இருக்கேன். இதுவே போதும். நாட்டுல எல்லோரும் நல்லா இருக்கணும்னு கேட்டுப்பேன்.’’

- கே.கீர்த்தனா, எச்.சிந்துஜா, பி.தனலஷ்மி, ஏ.எஸ்.சுதா, ஜி.ரேவதி, எஸ்.லத்திகா, எஸ்.சிவகார்த்திகேயன், எம்.பி.சந்தோஷ், ஆர்.ஆதித்யா ராஜ், எம்.ராஜிவ், ஆர்.அரவிந்த், எஸ்.தினேஷ், எஸ்.பாண்டி கண்ணன், எஸ்.தயூப் ரஹ்மான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism