கோடை வந்தாலே, நம்மை குஷிப்படுத்தும் அனிமேஷன் படங்களும் வரிசைகட்டி வரும். இந்தக் கோடையின் ஆரம்பத்திலேயே சம்மர் சூப்பர் எக்ஸ்பிரஸாக குஷிப்படுத்த வருகிறது, ‘குங்ஃபூ பாண்டா - 3.’

குங்ஃபூ பாண்டா படங்கள் வெளியாகும்போது, சீன ரசிகர்களுக்கு அது திருவிழாவாக இருக்கும். சீனாவின் தற்காப்புக் கலை, பழக்கவழக்கங்களைச் சொல்லும் வகையில் இருக்கும். அதனாலேயே இந்தக் கரடிக் கதை சீனாவுக்கு சூப்பர் ஸ்பெஷல்.

மாஸ்டர் போ (Po) என்கிற பாண்டா கரடிதான் ‘குங்ஃபூ பாண்டா.’ பழைமையான சீனாவில் நிகழும் கதை. அங்கே சில பிரச்னைகள் வரும்போது, அதைத் தீர்க்கும் டிராகன் வாரியராக குங்ஃபூ பாண்டாவைத் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு சிக்கல். முதலில், வில்லனைச் சமாளிக்க முடியாமல் வெத்துவேட்டாகத் திணறும் பாண்டா, இறுதியில் வென்று கெத்துக் காட்டும்.

முதல் இரண்டு பாகங்களைப் போலவே, இந்த மூன்றாம் பாகமும் வெளியான நாடுகளில் தெறி ஹிட். மூன்றாம் பாகத்தின் கதை இதுதான்...

‘‘இனி, நான் யாருக்கும் குங்ஃபூ கற்றுத் தர மாட்டேன். இனிமேல் அதை நீதான் செய்ய வேண்டும்’’ என்கிறது எல்லோருக்கும் மாஸ்டரான ஷுஃபூ.

‘அவ்வளவுதானே செஞ்சுட்டாப்போச்சு’ என ஜாலியாகக் கற்றுத் தர முன்வருகிறது, நம்ம ஹீரோ போ. ஆனால், அது அவ்வளவு சுலபமாக இல்லை. அட்டகாசம் செய்யும் மாணவர்களைக் கட்டி மேய்க்க முடியாமல் ரொம்பவே திணறுகிறது. அப்போது, ஹீரோவின் அப்பா பாண்டா அங்கே வருகிறது. தந்தையும் மகனும் பாண்டாக்கள் ரகசியமாக வாழும் இடத்துக்குச் செல்கின்றனர்.

இதே வேளையில், எல்லா குங்ஃபூ மாஸ்டர்களையும் அழித்து, அவர்களின் சக்தியைத் திருடுவதற்காக, ‘கய்’ (Kai) என்ற வில்லனும் அங்கே வருகிறது. அந்த வில்லனை ஒழிக்கவும் கிராமத்தைக் காப்பாற்றவும் போ பொறுப்பேற்றுக்கொள்கிறது. அனைவருக்கும் குங்ஃபூ கற்றுக்கொடுக்கிறது. தனது நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து போ வெற்றிபெற்றதா என்பதே பரபர க்ளைமாக்ஸ்.

ஆரம்பத்தில் போ செய்யும் சேட்டைகள், வழக்கம்போல வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும். வில்லனின் வருகைக்குப் பிறகு, இந்த சம்மர் சூப்பர் எக்ஸ்பிரஸின் ரூட் மாறி, தீப்பொறி பறக்கும்.

கடந்த பாகங்களைப் போலவே ஏஞ்சலினா ஜோலி, ஜாக்கி சான், ஜாக்் பிளாக் போன்ற சூப்பர் நட்சத்திரங்கள் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஜெனிஃபர் யூ நெல்சன் (Jennifer Yuh Nelson) மற்றும் அலிசான்ட்ரோ கார்லோனி (Alessandro Carloni) இயக்கி இருக்கிறார்கள். சீனா மற்றும் அமெரிக்காவில், ஜனவரியில் வெளியாகி 400 மில்லியன் டாலருக்கும் மேல் வசூலைக் குவித்திருக்கும் குங்ஃபூ பாண்டா, ஏப்ரல் 1-ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

மாஸ்டர் போ அண்ட் டீமிடம் குங்ஃபூ கத்துக்க நீங்க ரெடியா?

- பா.ஜான்சன்