ஹலோ ஃப்ரெண்ட்ஸ்... என் பேரு பவித்ரா. ஃபிஃப்த் ஸ்டாண்டர்டு படிக்கிறேன். என் அம்மா, ‘குட்டிம்மா’ன்னும் என் அப்பா,‘அம்முலு’ன்னும் கூப்பிடுவாங்க.

இந்த மாசம் வீட்டு மளிகைப் பொருட்கள் வாங்க, நானும் அம்மாவும் ஷாப்பிங் போயிருந்தோம். அங்கே, பெரிய சாக்லேட் இருந்துச்சு. ‘எனக்கு அந்த சாக்லேட் வேணும்’னு அடம்பிடிச்சேன்.

‘‘இந்த சாக்லேட் விலை 80 ரூபாய். இவ்வளவு விலை கொடுத்து பல்லைச் சொத்தை பண்ணிக்கப்போறே’’னு திட்டிக்கிட்டே வாங்கிக்கொடுத்தாங்க.

பிங்க் கலர்ல லன்ச் பாக்ஸ், பார்பி படம் போட்ட டூத்பிரஷ், கலர் மார்க்கர்ஸ், வாட்டர் பாட்டில், க்வில்லிங் பேப்பர் என ஒவ்வொண்ணா கொஞ்சியும் கெஞ்சியும் வாங்கிட்டேன்.

‘‘உன்னைப் பக்கத்து வீட்டுல விட்டுட்டு வந்திருக்கணும். கூட்டிட்டு வந்ததுக்கு 400 ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகிருச்சு” எனச் சத்தம் போட்டாங்க.

இதுக்கு மேல கேட்கக் கூடாதுனு சைலன்ட் ஆகிட்டேன். ஜஸ்ட் 400 ரூபாய்க்காக அம்மா ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறாங்களோ?

அன்னைக்கு நைட், அப்பாவும் அம்மாவும் பேசிட்டு இருந்தாங்க. ‘‘இப்படியே மாசாமாசம் செலவு அதிகம் ஆகிட்டே போகுதே. இந்த மாசமாவது புது ஷூ வாங்கலாம்னு நினைச்சேன். முடியாது போலிருக்கே” என்றார் அப்பா.

‘‘குக்கர் கைப்பிடி மாற்ற முடியாம ரெண்டு மாசமா அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கேன். இன்னிக்கி பவித்ராவால் 400 ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகிருச்சு. வரவர ரொம்பப் பிடிவாதம் பிடிக்கிறா” என்றார் அம்மா.

‘‘விடு, சின்னக்குழந்தைக்கு நம்ம வருமானம் என்ன? பணக் கஷ்டம்னா என்னன்னு தெரியுமா? நான் ஏதாவது அட்ஜஸ்ட் பண்றேன்” என்றார் அப்பா.

அப்பாவின் ஷூ பழசாகி, ஃபெவிஸ்டிக் போட்டு ஒட்டியும், பாலீஷ் போட்டு மறைச்சும் ஆபீஸுக்குப் போட்டுட்டுப் போறது ஞாபகம் வந்துச்சு. அப்புறம் வேற என்னென்னமோ கணக்குப் போட்டுட்டு இருக்க, நான் தூங்கிட்டேன்.

காலையில், ‘‘அம்மா, ராத்திரி ரெண்டு பேரும் கையில் லிஸ்ட் வெச்சுக்கிட்டு என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?’’னு கேட்டேன்.

‘‘வீட்டு பட்ஜெட் போட்டுட்டு இருந்தோம்’’னு சொன்ன அம்மா, பட்ஜெட்னா என்ன, அவங்களோட சம்பளம், செலவு பற்றிச் சொன்னாங்க.

இதெல்லாம் நடந்தது போன வருஷம். இப்ப நான், தேவையில்லாம செலவு பண்றதை நிறுத்திட்டேன். எனக்கு பேங்க்கில் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிக் கொடுத்திருக்காங்க. என் பாக்கெட் மணியை சேமிச்சு பண்ணி, அதில் கட்டுறேன். அதுக்குத்தான் அம்மாவோடு பேங்க்குக்குப் போயிட்டிருக்கேன். எல்லோரும் என்னை ‘சமர்த்து பவி’னு கூப்பிடுறாங்க.

அப்ப நீங்க?

மாநகரத்தில் வாழும் ஒரு ஃபேமிலிக்கு மாசத்துக்கு சராசரியா எவ்வளவு செலவு ஆகும்? பவித்ராவின் அப்பா சொன்ன வீட்டு பட்ஜெட் இது.

வீட்டு வாடகை - 7,000
மளிகைச் சாமான் (3 பேருக்கு) - 5,000

பால், காய்கறி, பழங்கள் - 2,000
மாதாந்திர சேமிப்பு - 4,000
பெட்ரோல் (பைக்) - 2,000
கரன்ட் பில் (வெயில் காலத்தில்) - 1,200
பள்ளிக் கட்டணம் - 4,000
ஸ்டேஷனரி பொருட்கள், பாக்கெட் மணி - 1,500
இதர ஷாப்பிங் செலவு - 3,000
கேபிள், கேஸ்சிலிண்டர், மருத்துவச் செலவு - 4,000
திடீர் செலவு - 1,000
ஆக மொத்தம் 34,700 ரூபாய்.

உங்க வீட்டுல எவ்வளவு செலவாகுது தெரியுமா? உங்க அப்பா, அம்மாகிட்ட கேட்டு, நீங்களும் போடுங்க பட்ஜெட்.

- பொன்.விமலா, ஓவியங்கள்: மகேஸ்

பவித்ரா போல உங்களுக்கும் வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்கா? இல்லையென்றால், உடனே ஆரம்பியுங்கள். ஒரு சேமிப்புக் கணக்கை எப்படித் தொடங்குவது எனச் சொல்கிறார், நிதி ஆலோசகர் ஸ்ரீதரன்.

வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்க 6 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

உங்களுக்கு கணக்குத் தொடங்க, அந்த வங்கியில் பெற்றோரில் யாராவது ஒருவருக்கு கணக்கு இருக்க வேண்டும்.

உங்களின் பிறந்த தேதிக்கு ஆதாரமாக, பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளியில் படிப்பதற்கான அடையாள அட்டை அவசியம்.

வீட்டு முகவரிக்காக, ஆதார் அடையாள அட்டை அல்லது ரேஷன் அட்டையுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் கொண்டுசெல்ல வேண்டும்.

ஆரம்பத் தொகையாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். பிறகு, எப்போது வேண்டுமானாலும் 100 ரூபாய் முதல் உங்களிடம் உள்ள தொகைக்கு ஏற்ப செலுத்தலாம்.