மலையேற்றம், மிதிவண்டியில் நெடுந்தூரப் பயணம், காடுகளில் கேம்ப்பிங் எனச் சாகசம் செல்பவர்கள், கொண்டு சென்ற குடிநீர் தீர்ந்துபோய், அதைத் தேடிய அனுபவமே ஒரு சாகசமாக இருக்கும். இனி, அந்தப் பிரச்னை இல்லை. காலியான பாட்டில் போதும். தானாக நீர் நிரம்பிவிடும்.

வியன்னாவை மையமாகக்கொண்டு இயங்கும் ஃபான்டஸ் குடிநீர் நிறுவனம் (Fontus Water Pvt Ltd), இந்தியா உட்பட உலகம் முழுவதும் செயல்படுகிறது.இந்த நிறுவனம் வடிவமைத்து இருக்கும் புதிய குடிநீர் பாட்டில்தான், Self-filling water bottle.

சோதனை நிலையில் உள்ள இந்த பாட்டில், இரண்டு வகைகளில் வடிவமைக்கப்படுகிறது. ஒன்று, பையில் எடுத்துச்செல்லும் வகையில் இருக்கும். மற்றொன்று, மிதிவண்டியில் பொருத்திக்கொள்ளும் வகையில் இருக்கும்.

நீங்கள் மலைப்பகுதிக்கோ, காட்டுப்பகுதிக்கோ செல்லும்போது, இந்த பாட்டிலை எடுத்துச்சென்றால் போதும். சூரிய சக்தியில் இயங்கும் இந்த பாட்டில், காற்றில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து நீரை உறிஞ்சி எடுக்கும். தூசுகளைப் பிரிக்கும் வடிகட்டிகளும் இதில் உள்ளன. விரைவில் விற்பனைக்கு வரும் இந்த பாட்டிலின் விலை, 100 டாலருக்குள் இருக்கும்.

Fontus பாட்டில் இயங்கும் முறையின் வீடியோவைக் காண: https://youtu.be/tZI_hin41V0

- கார்த்திகா முகுந்த்