ஏப்ரல் 15 லியோனார்டோ டா வின்சி பிறந்தநாள்

இவரது முழுப்பெயர், ‘லியோனார்டோ டி செர் பியெரோ டா.’ என்பது. இதற்கு, ‘வின்சியைச் சேர்ந்த பியரோவின் மகன் லியோனார்டோ’ என்று பொருள். இவர் தனது படைப்புகளில், ‘லியோனார்டோ’ அல்லது ‘நான் லியோனார்டோ’ (Io, Leonardo) என்று கையெழுத்திடுவார்.

பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால், முறையான பள்ளிக் கல்வியை கற்கவில்லை. தன் தந்தையின் உதவியோடு வீட்டிலேயே கல்வி கற்றார்.

ஓவியர், இசைக் கலைஞர், கணிதமேதை, வடிவமைப்பாளர், விஞ்ஞானி எனப் பல முகங்கள்கொண்ட லியோனார்டோ டா வின்சி, 1452 ஏப்ரல் 15-ல் இத்தாலியில் பிறந்தார்.

டா வின்சி, இடதுகைப் பழக்கம் உடையவர். வலமிருந்து இடமாக எழுதும் பழக்கமும் உடையவர். இதன் மூலமாகத்தான் இவரது பல கண்டுபிடிப்புகள் திருட்டுப் போகாமல், எளிதில் புரியாத வண்ணம் உள்ளன. ஒரு கையால் எழுதிக்கொண்டே, மறு கையால் படம் வரையும் திறன் படைத்தவர்.

இவர், சைவ உணவுகளையே உண்பார். விலங்குகள் மீது பிரியம்கொண்டவர். சந்தையில் விற்கும் கூண்டில் அடைக்கப்பட்ட விலங்குகளைப் பெருமளவில் வாங்கி, வெளியே விட்டுவிடுவார்.

டா வின்சி கைப்பட எழுதிய ‘கோடெக்ஸ் லேயிசெஸ்டர்’ எனப்படும் அறிவியல் குறிப்புகள் புத்தகத்தை. பில்கேட்ஸ் 30 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளார். அதில், சில பக்கங்கள் விண்டோஸ் 95 ஸ்க்ரீன் சேவராகப் பயன்படுத்தப்பட்டது.

இவரது பெரும்பாலான படைப்புகள், முடிக்கப்படாமல் பாதியிலேயே உள்ளன.

புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தின் உதடுகளை வரைய, இவருக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டனவாம். 1911-ம் ஆண்டு திருடப்பட்ட பின், உலகின் மிகப் பிரபலமான ஓவியமானது மோனலிசா.

மோனலிசா, ‘தி லாஸ்ட் சப்பர்,’ ‘தி விட்ரூவியன் மேன்,’ ‘லேடி வித் ஆன் எர்மைன்’ போன்ற புகழ்பெற்ற ஓவியங்களைப் படைத்தார். இதில், மோனலிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் ஓவியங்கள் அதிகம் மறுபதிப்பு செய்யப்பட்ட, விற்கப்பட்ட ஓவியங்களில் முன்னிலையில் உள்ளன.

மே 2, 1519-ம் ஆண்டு இயற்கை எய்தினார். அவரது ஆசைப்படி 60 பிச்சைக்காரர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள்.

- தா.நந்திதா