ஹாரிபாட்டர் கதையில் வருவது போல, மாய ஜாலப் பள்ளியில் படிக்க வேண்டும் என்கிற ஆசை, நம் எல்லோர் மனதிலும் ஒருமுறையாவது வந்திருக்கும். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காலாப் எனும் கிராமத்தில் படிக்கும் குழந்தைகளுக்கும் அப்படி ஓர் ஆசை வந்தது. அவர்களின் ஆசிரியர் அன்ஷு அகர்வால், அதை நிறைவேற்றினார். ஹாரிபாட்டர் படத்தில், மந்திரத் துடைப்பத்தில் பறந்தவாறு விளையாடும் ‘க்விடிச்’ (Quidditch) என்ற பந்து விளையாட்டை அவர்களும் விளையாடினார்கள்.

அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? சிம்பிள், புகைப்படம் எடுக்கும் அனுபவம் உள்ள அன்ஷு அகர்வால், மாணவர்களை பென்ச் மீது ஏற்றினார். துடைப்பம் மீது அமர்ந்து இருப்பது போல புகைப்படங்கள் எடுத்தார். அவற்றை ஃபோட்டோஷாப்பில் எடிட் செய்து, மலைப் பகுதியில் பறப்பது போல மாற்றினார்.

எல்லாப் புகைப்படங்களையும் வரிசைப்படுத்தி, சின்னத் திரைப்படம் போல திரையிட்டுக் காண்பிக்க, அத்தனை சுட்டிகளும் செம ஹேப்பி.

- ஐ.மா.கிருத்திகா