Published:Updated:

தெரிஞ்சுக்கோ தோழா!

தெரிஞ்சுக்கோ தோழா!
பிரீமியம் ஸ்டோரி
தெரிஞ்சுக்கோ தோழா!

தெரிஞ்சுக்கோ தோழா!

தெரிஞ்சுக்கோ தோழா!

தெரிஞ்சுக்கோ தோழா!

Published:Updated:
தெரிஞ்சுக்கோ தோழா!
பிரீமியம் ஸ்டோரி
தெரிஞ்சுக்கோ தோழா!

‘‘பழங்களை நேரடியாகச் சாப்பிடுவதற்கும், அதையே சாறாகவும் குளிர்பானமாகப் பருகுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது’’ என்கிறார், டயட் ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி. ஒரு சாம்பிள் பார்ப்போமா?

பழங்கள்

தெரிஞ்சுக்கோ தோழா!

• நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.

• வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், தாது உப்புகளின் பலன் முழுமையாகக் கிடைக்கும்.

• நன்றாக மென்று சாப்பிடுவது பற்களுக்கு உடற்பயிற்சி.

• உடலுக்குத் தேவையான குளுக்கோஸ், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.

• உமிழ்நீரோடு வயிற்றுக்குள் செல்லும்போது, எளிதில் ஜீரணமாகும்.

• நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்.

• எலும்புகளை வலுவடையச் செய்யும்.

பழச்சாறு

தெரிஞ்சுக்கோ தோழா!

• நார்ச்சத்து சரியாகக் கிடைக்காது.

• வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், தாது உப்புகள் கிடைக்கும்.

• ஸ்ட்ரா மூலம் குடிப்பதால், சுவையை முழுமையாக உணர முடியாது.

• ஐஸ் சேர்ப்பதால் சளி, சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்குத் தொந்தரவு.

• உமிழ்நீரோடு செல்லாததால், நச்சுத் தன்மையை எதிர்க்கும் சக்தி கிடைக்காது.

• உடலில் குளுக்கோஸ் உடனே அதிகரிக்கும். வயதுக்கேற்ற எடை இல்லாதவர்கள், பழச்சாறு  குடிப்பதைத் தவிர்க்கவும்.

• விளையாட்டு வீரர்களுக்கு உடனடி எனர்ஜி தேவைப்படுவதால், அதிகம் குடிக்கலாம்.

குளிர்பானம்

தெரிஞ்சுக்கோ தோழா!

• நார்ச்சத்து அறவே கிடையாது.

• இதில், பழங்களின் சுவை வருவதற்காக செயற்கை ரசாயனம் சேர்க்கப்படுவதால், பழத்தின் பலன்கள் கிடைக்காது.

• சிந்தடிக் கலர் சேர்க்கப்படுவதால் உடலுக்குக் கெடுதல் உண்டாக்கும்.

• குடிப்பவர்களுக்கு வாயு தொடர்பான பிரச்னைகள் வரலாம்.

• வயிற்றில் அசிடிட்டி உருவாகி, ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படும்.

தெரிஞ்சுக்கோ தோழா!

• வைட்டமின், தாது உப்புகள், மாவுச் சத்து எதுவும் இல்லை. சர்க்கரை மட்டுமே இருக்கும்.

• உடலைப் பருமனாக்கும். 

- வி.எஸ்.சரவணன்