Published:Updated:

புக் கிளப்

புக் கிளப்
பிரீமியம் ஸ்டோரி
புக் கிளப்

புக் கிளப்

புக் கிளப்

புக் கிளப்

Published:Updated:
புக் கிளப்
பிரீமியம் ஸ்டோரி
புக் கிளப்
புக் கிளப்

கனவு நாயகனின் பொக்கிஷங்கள்!

ளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்தவர், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். மாணவர்களைச் சந்தித்து உரையாடுவதை தன் வாழ்வின் இறுதிநாள் வரை செய்தவர். பள்ளி,  கல்லூரிகளில் அவர் ஆற்றிய உரைகள் அத்தனையும் பொக்கிஷங்கள். அவற்றைத் தொகுத்துப் படிக்கும் அற்புத வாய்ப்பை இந்த இரண்டு நூல்களும் அளிக்கின்றன.

உறக்கத்திலே வருவதல்ல கனவு: பள்ளிகளில் மாணவர்களிடையே அப்துல் கலாம் ஆற்றிய உரைகளின் முத்தான தொகுப்பு இது. ஒவ்வொரு பள்ளியிலும் அந்த மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக அவரின் பேச்சு அமைந்திருந்தது. சென்னையில் உள்ள செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் பேசும்போது, ஈரான் நாட்டைச் சேர்ந்த இரண்டு கால்கள் இல்லாத முஸ்தபா பற்றிக் குறிப்பிடுகிறார். முஸ்தபா எழுதிய ‘கால்கள் இல்லாவிட்டாலும் நான் மகிழ்ச்சியோடு வாழ்வேன்’ எனும் தன்னம்பிக்கைக் கவிதையை அப்துல் கலாம் வாசித்ததைப் படிக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.

உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு:அப்துல் கலாம் கல்லூரி மாணவர்களிடையே பேசியவற்றின் தொகுப்பு.  தனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்கள், தன்னுடன் பணியாற்றியவர்கள், தான் சந்தித்த மாணவர்கள் பற்்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

புக் கிளப்

இரண்டு நூல்களையும் அப்துல் கலாமின் அண்ணன் மகள் ஏ.பி.ஜெ.எம்.நசீமா மரைக்காயர் சிறப்பாகத் தொகுத்துள்ளார். கலாமின் அரிய புகைப்படங்கள், நூல்களுக்கு மேலும் சிறப்பைச் சேர்க்கின்றன.

புக் கிளப்


 

- வி.எஸ்.சரவணன்