Published:Updated:

மிரட்டல் காட்டிய மோக்லி!

மிரட்டல் காட்டிய மோக்லி!
பிரீமியம் ஸ்டோரி
மிரட்டல் காட்டிய மோக்லி!

மிரட்டல் காட்டிய மோக்லி!

மிரட்டல் காட்டிய மோக்லி!

மிரட்டல் காட்டிய மோக்லி!

Published:Updated:
மிரட்டல் காட்டிய மோக்லி!
பிரீமியம் ஸ்டோரி
மிரட்டல் காட்டிய மோக்லி!
மிரட்டல் காட்டிய மோக்லி!

லகமே எதிர்பார்த்த டிஸ்னியின் ‘ஜங்கிள் புக்’ திரைப்படம், கோடை விடுமுறை விருந்தாக வெளிவந்திருக்கிறது. குழந்தையாக காட்டில் தவறிவிடும் மோக்லி என்ற சிறுவனை விலங்குகள் வளர்க்கும் படம்தான் ஜங்கிள் புக். படத்தைப் பார்த்த சுட்டிகளின் கலக்கல் விமர்சனம் இது.

ஷிவாணி: “இதுதான் நான் பார்த்த முதல் 3D படம். எல்லா விலங்குகளும் கிட்டே  வந்து தொடுற மாதிரி த்ரில்லா இருந்துச்சு. நானே மோக்லி ஆகிட்ட மாதிரி ஒரு ஃபீலிங். படத்தில் எனக்கு ரொம்பப் பிடிச்சது ‘கிரே’ங்கிற ஒநாய் குட்டி. துறுதுறுனு வாலாட்டிட்டு தொணதொணன்னு பேசிட்டு செம ஜாலி!’’

மிரட்டல் காட்டிய மோக்லி!

பாலா: “ஜாலியா போகிற வாழ்க்கையில் எங்கே இருந்துதான் இந்த ‘ஷேர்கான்’ டைகர் மாதிரி வில்லன்ஸ் வர்றாங்களோ. அதான், மோக்லி காட்டைவிட்டுப் போயிட்டான்ல. அப்புறம் ஏன் மறுபடியும் அவனைக் கொல்ல வருது. இந்த யானைங்க எல்லாம் சும்மாவே பார்த்துட்டு இருக்குப்பா!”

பிராசந்த்: ‘‘எல்லாருமே ‘பல்லு’ கரடி மாதிரி கேலியா பேசிட்டு நல்லாச் சாப்பிட்டுட்டு ஃப்ரெண்டா இருப்பாங்களா என்ன? படம்னா அப்படித்தான். ஒரு பெரிய மலைப்பாம்பு பயங்கரமான கண்ணோட நம்மகிட்டே  வந்துச்சே. ப்பா... இப்போ நினைச்சாலும் பயமா இருக்கு. நல்லவேளை சரியான சமயத்தில் பல்லு வந்து, மோக்லியைக் காப்பாத்திட்டான். அனிமல்ஸ்கிட்டே மோக்லி பேசுறதைப் பார்க்கிறப்போ, நம்ம வீட்டு நாய், லவ் பேர்ட்ஸ் இப்படிப் பேசினா எப்படி இருக்கும்னு நினைச்சுக்கிட்டேன்.’’

மகாலட்சுமி: “எங்கே அந்த டைகர், நம்ம ‘பகீரா’ சிறுத்தையைக் கொன்னுடுமோனு படபடப்பாவே இருந்துச்சு. ஆரம்பத்துல கறுப்பா இருக்கிற பகீராவைப் பார்க்கவே எனக்கு பயமா இருந்துச்சு. ஆனா, உருவத்துக்கும் மனசுக்கும் சம்பந்தம் இல்லைங்கிற மாதிரி, மோக்லிக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணுது. ஆனா, இந்த  மோக்லி பயல்தான் பகீராவைப் புரிஞ்சுக்காம விலகி ஓடி, ஆபத்துல மாட்டிக்கிறான். டேய், நில்லுடா பாப்கட் தலையானு கத்திட்டேன். மோக்லியாக, நீல் சேத்தியின் நடிப்பு அட்டகாசம்.’’

மிரட்டல் காட்டிய மோக்லி!

கிஷோர்: “அந்த ஷிரே டைகர் காட்டுல இருக்கிற வரைக்கும் எல்லாருக்கும் ஆபத்துதான். ஓநாய் தலைவனைக் கொன்னுட்ட அந்த டைகரை, மோக்லி சாமர்த்தியமா ஓடி வரவெச்சு, சிவப்பு பூவுக்குள்ளே (தீ)தள்ளிவிட்டதால்தானே எல்லோரும் ஹேப்பியா இருக்காங்க. நாமும் மத்தவங்களுக்குத் தொந்தரவு தராம, தொந்தரவு கொடுக்கிறவங்களுக்குச் சரியான பாடம் கற்பிச்சு, எல்லாரையும் சந்தோஷமா வெச்சுக்கணும்.”

- பி.நிர்மல்  படங்கள்: ஜெ.விக்னேஷ்