Published:Updated:

தேசிய கீதம் தந்த தாகூர்!

தேசிய கீதம் தந்த தாகூர்!
பிரீமியம் ஸ்டோரி
தேசிய கீதம் தந்த தாகூர்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

தேசிய கீதம் தந்த தாகூர்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
தேசிய கீதம் தந்த தாகூர்!
பிரீமியம் ஸ்டோரி
தேசிய கீதம் தந்த தாகூர்!
தேசிய கீதம் தந்த தாகூர்!

மது நாட்டின் தேசிய கீதத்தை எழுதியவர், இலக்கியத்தில் மாமேதையாகத் திகழ்ந்த ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி சில துளிகள்... 

• 1861-ம் ஆண்டு மே 7-ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• காந்தியை முதன்முதலாக ‘மகாத்மா’ என்று அழைத்தவர்.

• ஆசியாவிலேயே, முதன்முதலில் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர்.

• சட்டம் படிக்க, இங்கிலாந்து சென்றவர். ஆனால், கவிதைகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டியதால், பட்டம் பெறாமலேயே வங்கத்துக்குத் திரும்பியவர்.

• 1919-ல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக, ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர் அவருக்கு வழங்கிய ‘சர்’ பட்டத்தைத் துறந்தார்.

• சாந்தி நிகேதன்  பள்ளியைத் தொடங்கி, குழந்தைகளின் தனித்திறன்களை வெளிக்கொண்டுவந்தார். அவரின் நோபல் பரிசு  நிதி முழுவதையும் சாந்தி நிகேதன்  வளர்ச்சிக்கே  பயன்படுத்தினார். கட்டணமில்லா இலவசக் கல்வியை வழங்கினார்.

• பிரபல வங்கத் திரைக்கலைஞர் சத்யஜித் ரே, சாந்தி நிகேதனில் படித்தவர்தான்.

• 60 வயதில் ஓவியம் வரையத் தொடங்கி, ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்தவர்.

• இயற்கையைப் பாதுகாத்தல், ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்குதல், பெண்ணியம் காத்தல், தீண்டாமை எனும் இழிவை நீக்குதல், மதச் சார்பின்மை, அறிவியல் வளர்ச்சி, மனித நேயத்தைப் பேணிக் காத்தல் ஆகியவை தாகூரின் சிந்தனைகள்.

• 3,000-க்கும் மேற்பட்ட கவிதைகள், 2,000-க்கும் மேற்பட்ட பாடல்கள், 50 நாடகங்கள், 40-க்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுதிகள், சிறுகதைகள் எனப் பல்லாயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறார்.

• 1940-ம் ஆண்டு, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்,   இவரது   சாந்தி நிகேதனுக்கே வந்து ‘டாக்டர் ஆஃப் லிட்ரேச்சர்’ என்ற விருதினை வழங்கியது.

• ‘அமர் சோனார் பங்களா’ எனத் தொடங்கும்  இவர் எழுதிய பாடலே, வங்காள தேசத்தின் தேசிய கீதமாக உள்ளது. இரு நாடுகளுக்கு தேசிய கீதம் எழுதியவர் என்ற பெருமைக்கு உரியவர்.

• அண்டை நாடான இலங்கையின் தேசிய கீதத்தை எழுதிய ஆனந்த சமரக்கோனுக்கு, தாகூரின் பாடல்கள்தான் உத்வேகம் அளித்தன.

• ‘குருதேவ்’ என்று  பலராலும் அழைக்கப்பட்டவ ரவீந்திரநாத் தாகூர், 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் 7 -ம் தேதி காலமானார்.

தேசிய கீதம் தந்த தாகூர்!