நாங்க வேற உலகம்!

‘உங்களுக்கே உங்களுக்கு என ஒரு புது உலகம் உருவாக்குறதா இருந்தா, அந்த உலகம் எப்படி இருக்கணும்?’ எனச் சில நண்பர்களிடம் கேட்டோம். இதோ, அவர்களின் ஆசை உலகங்கள்...

நாங்க வேற உலகம்!

‘‘நான், புத்தக உலகத்தைக் கேட்பேன். அந்த உலகத்தில், எல்லா மொழிப் புத்தகங்களும் இருக்கும். ஆனா, நாம படிக்க வேணாம். புத்தகமே பேசும்; பாட்டுப் பாடும்; டான்ஸ் ஆடும். காமிக்ஸ், நாவல், புதிர்கள்னு ஸ்கூல் சப்ஜெக்ட் எல்லாமே ஜாலியா இருக்கும்!’’             

- டி.விக்னேஷ்ராஜ்  

நாங்க வேற உலகம்!

‘‘எங்களுக்கு, சாக்லேட் உலகம் வேணும். அந்த உலகமே சாக்லேட் கலரில் இருக்கும். லன்ச் பாக்ஸும் சாக்லேட், அதில் இருக்கிற டிஷ்ஷூம் சாக்லேட். குளிக்கிறதுக்கும் சாக்லேட், குடிக்கிறதுக்கும் சாக்லேட். ஆனா, எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்புக்கு எதுவும் ஆகாத ஹெல்த்தி     கிரீன் சாக்லேட்டா அந்த  உலகம் இருக்கணும்!’’

- எஸ்.பக்த கோலாகலன்,   கே.அக்‌ஷர பாலா.

நாங்க வேற உலகம்!

‘‘நான், பேய் உலகத்தை உருவாக்குவேன். கெட்ட பேய்களை எல்லாம் அங்கே அடைச்சு வைப்பேன். நல்ல பேய்களைச் சேர்த்து, மிலிட்டரி டீம்  உருவாக்குவேன். உலகத்தில் எங்கே ஆபத்து வந்தாலும் இந்த டீமை அனுப்பி, எல்லோரையும் காப்பாற்றுவேன்!’’

- அ.நிரஞ்சன்

நாங்க வேற உலகம்!

‘‘எங்களுக்கு, கார்ட்டூன் உலகம்தான் வேணும். அதுல, நம்ம ஊர் சோட்டா பீமில் ஆரம்பிச்சு, ஸ்பைடர்மேன் வரை இருப்பாங்க. அவங்கதான் எங்க டீச்சர்ஸ். அவங்க சக்திகளை எங்களுக்கு சொல்லிக்கொடுப்பாங்க. நாங்களும் பறப்போம்; மாயமா மறைவோம்!’’

- பி.சிவக்குமார், எஸ்.அனந்தநாராயணன்.

தொகுப்பு: எச்.ஃபாஹிம், கு.அபிஷேக்.

பள்ளி ஆண்டுத் தேர்வுகள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக, ‘என் பள்ளி என் சுட்டி’ இணைப்பிதழ், ஜூன் மாதம் முதல் தொடர்ந்து வெளியாகும்.

நாங்க வேற உலகம்!


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு