Published:Updated:

ஃபேஸ்புக் நாயகன்

ஃபேஸ்புக் நாயகன்
பிரீமியம் ஸ்டோரி
ஃபேஸ்புக் நாயகன்

மார்க் ஸூக்கர்பெர்க் பிறந்ததினம் மே 14

ஃபேஸ்புக் நாயகன்

மார்க் ஸூக்கர்பெர்க் பிறந்ததினம் மே 14

Published:Updated:
ஃபேஸ்புக் நாயகன்
பிரீமியம் ஸ்டோரி
ஃபேஸ்புக் நாயகன்
ஃபேஸ்புக் நாயகன்

நீல நிறத்தைப் பார்த்தாலே சிலருக்கு ஃபேஸ்புக்தான் நினைவுக்கு வரும். ஃபேஸ்புக் நாயகன் மார்க் ஸூக்கர்பெர்க் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டாமா?

• மே 14, 1984-ல் பிறந்த மார்க் ஸூக்கர்பெர்க்கின் தந்தை எட்வர்ட் ஸூக்கர்பெர்க், பல் மருத்துவர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை வரிசைப்படி சிகிச்சைக்கு அழைக்க, மென்பொருள் ஒன்றை உருவாக்கியபோது அவருக்கு வயது 12.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்னரே, ‘மெர்ஸி’ கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை முடித்துவிட்டார்.

• 2004-ம் ஆண்டு ஃபேஸ்புக்கை நண்பர்களோடு தொடங்கினார். சிவப்பு, பச்சை நிறங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாத குறைபாடு இவருக்கு உள்ளது. அதனால்தான், ஃபேஸ்புக்கை முழுவதுமாக நீல நிறத்தில் உருவாக்கினார்.

• 23 வயதிலேயே, ‘உலகின் மிக இளைய பில்லியனர்’ என்ற பெருமை பெற்றார்.

• கிரே கலர் டி-ஷர்ட்டே இவரது சீருடை போல ஆகிவிட்டது. ஏன் தினமும் ஒரே நிற உடை என்று கேட்டால், ‘தினமும் காலையில் என்ன உடை அணிவது என்று யோசிக்கிற நேரம் மிச்சம்’ என்கிறார்.

• ஃபேஸ்புக்கில், மார்க்கின் அக்கௌன்ட்டை யாராலும் பிளாக் செய்ய முடியாது.

ஃபேஸ்புக் நாயகன்

• மனைவியின் குடும்பத்தினருடன் பேசுவதற்காகவே சீன மொழியைக் கற்றுக்கொண்டார். அமெரிக்கரான இவருடைய மனைவி பிரிசில்லா சான், சீன நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய மகள் பெயர், மாக்ஸிமா சான் ஸூக்கர்பெர்க்.

• ‘தி கிவிங் பிலெட்ஜ்’ (The Giving Pledge) எனும் உறுதிமொழிக்கு 2010-ம் ஆண்டு மார்க் கையெழுத்து இட்டார். இதன் மூலம் இவருடைய சொத்தில் பாதி, தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்கள் நலனுக்காகச் செலவிடப்படும்.

• ஆப்பிரிக்காவில், எபோலா வைரஸ் தாக்கி பெரும்பாலானோர் பாதிக்கப்பட்ட போது, இவர் 30 மில்லியன் டாலர்களை மருத்துவச் செலவுக்கு வழங்கினார்.

• ‘அதிர்ஷ்டம் தைரியமானவர்களுக்கே கைகூடும்’ என்பதே இவரது கொள்கை.

மார்க்குக்கு உங்கள் லைக்ஸ் உண்டா?

- தா.நந்திதா