Published:Updated:

சேட்டைக்கார பாண்டா!

சேட்டைக்கார பாண்டா!
பிரீமியம் ஸ்டோரி
சேட்டைக்கார பாண்டா!

சேட்டைக்கார பாண்டா!

சேட்டைக்கார பாண்டா!

சேட்டைக்கார பாண்டா!

Published:Updated:
சேட்டைக்கார பாண்டா!
பிரீமியம் ஸ்டோரி
சேட்டைக்கார பாண்டா!
சேட்டைக்கார பாண்டா!

வாவ்! ‘குங்ஃபூ’ படம் பார்த்த பிறகு சுட்டீஸ்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான். பாண்டாக்கள், பார்ப்பதற்கு கறுப்பும் வெள்ளையுமாக, ரொம்ப க்யூட்டா, அமைதியான சாதுபோல இருக்கின்றன அல்லவா? ஆனால், பாண்டாக்கள் பயங்கர சேட்டைக்காரர்கள்.

சீன நாட்டின் பெருமைகளில் ஒன்று பாண்டா கரடி. கரடி இனத்தின் ஒரு பிரிவுதான், பாண்டா கரடி. பாண்டா பிறக்கும்போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். வளர வளர கறுப்பு, வெள்ளை நிறமாக மாறிவிடும்.

பாண்டாக்களுக்கு சாப்பாட்டிற்கு அடுத்து ரொம்பப் பிடித்தது, தூங்குவது. ஒரு முறை சாப்பிட்டால், இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் வரை தூங்கும். தூங்கி எழுந்து மீண்டும் சாப்பிடும், திரும்பத் தூங்கிவிடும். சாப்பிட்டுச் சாப்பிட்டு டயர்டாகிவிடும்போல. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வனவிலங்குகள் சரணாலயத்தில் பாண்டாக்கள் வளர்க்கப்படுகின்றன. பாண்டாக்களின் ஆயுட்காலம் 14-20 ஆண்டுகள்.

பாண்டா பாதுகாக்கப்படவேண்டிய உயிரினமாகக் (Conservation status) கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து கேட்பவர்களுக்கு, பாண்டா கரடியை 6,00,000 டாலர் வரைக்கும் விற்கிறது சீனா. இந்தப் பணத்தை, காடுகளில் அழிந்துவரும் பாண்டாக்களைப் பாதுகாக்கப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த சம்மர் லீவில், பாண்டாக்கள் போல சேட்டைகள் செய்து மகிழ்ந்திருப்போம்!

- வி.எஸ்.சரவணன், இனியன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பாண்டா, ஒரு நாளில், 14 கிலோ முதல்38 கிலோ வரை சாப்பிடும். இது, அதன் எடையில் 40 சதவிகிதமாகும். 

சேட்டைக்கார பாண்டா!

• ஒரு நாளில்,  14 மணி நேரம் சாப்பிடுவதற்காகச் செலவழிக்கும்.

• கைகளில் உள்ள ஆறு விரல்களால் கவனமாக மூங்கிலைப் பிடித்துக்கொண்டு சாப்பிடும்.

• மூங்கிலின் துளிர் இலைகளை விரும்பி உண்ணும். இருட்டில் கூட, வாசனையைவைத்தே மூங்கிலைக் கண்டுபிடித்துவிடும்.

• பிடித்த உணவு மூங்கில்தான் என்றாலும் பழங்கள், சிறு பூச்சிகளையும் சாப்பிடும்.