Published:Updated:

அசத்த வருகிறது ஆங்ரி பேர்ட்ஸ்!

அசத்த வருகிறது ஆங்ரி பேர்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
அசத்த வருகிறது ஆங்ரி பேர்ட்ஸ்!

அசத்த வருகிறது ஆங்ரி பேர்ட்ஸ்!

அசத்த வருகிறது ஆங்ரி பேர்ட்ஸ்!

அசத்த வருகிறது ஆங்ரி பேர்ட்ஸ்!

Published:Updated:
அசத்த வருகிறது ஆங்ரி பேர்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
அசத்த வருகிறது ஆங்ரி பேர்ட்ஸ்!
அசத்த வருகிறது ஆங்ரி பேர்ட்ஸ்!

“ஆங்ரி பேர்ட்ஸை மீட் பண்ணலாமா?”

இப்படி உங்களைக் கேட்டால் என்ன செய்வீர்கள்? இதோ, நான் ரெடினு கிளம்பிடுவீர்கள்தானே. அந்த அளவுக்கு ஆங்ரி பேர்ட்ஸ் கேம் பிடிக்கும். இந்த கேமை நாம் விளையாடும்போது, பக்கத்தில் தௌசண்ட் வாலா சரவெடி வெடித்தாலும் காதில் கேட்காது. ஒவ்வொரு ஆங்ரி பேர்டாகப் பறக்கவிட்டு, எதிரே இருக்கும் கட்டடங்களை உடைத்து, அதில் இருக்கும் ‘கிரீன் பிக்’குகளைத் தெறிக்கவிடுவோம்.

‘ஆங்ரி பேர்ட்ஸ்’ திரைப்படம், மே 27-ம் தேதி இந்தியாவில் ரிலீஸாகிறது. இந்தப்  படத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்த சென்னைச் சுட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி. ஆங்ரி பேர்ட்ஸில் செம  கோபமான ரெட், யெல்லோ பறவையான ‘சக்’ மற்றும் கறுப்பு நிற ‘பாம்’ ஆகிய மூன்று பறவைகள் வேடமிட்டவர்கள், சுட்டிகளைச் சந்தித்து, பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி உற்சாகப்படுத்திவிட்டனர்.

இந்தப் படத்தை சுட்டிகளிடம் பிரபலப் படுத்துவதற்காக ஆங்ரி பேர்ட்ஸ் குழு இந்தியாவின்  சில நகரங்களுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தனர். அதில் முதல் சாய்ஸ் சென்னை. அடுத்து பெங்களூரு, ஹைதராபாத்துக்குப் பறந்துவிட்டது.

அசத்த வருகிறது ஆங்ரி பேர்ட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதுசரி, இந்த நிகழ்ச்சியிலேயும் ரெட் ரொம்பக் கோபமாகத்தான் இருந்ததா எனச் சிலருக்கு சந்தேகம் வந்திருக்கும். உண்மையில் மற்ற இரண்டையும் விட ரெட் தான் பயங்கர சேட்டை. சுட்டிகளுக்கு கைகொடுப்பதுபோல சென்று, தலையில் செல்லமாகத் தட்டியது. அவர்களின் முகத்தில் தனது புசுபுசு முடியால் கூசவைத்தது. எனக்கு யெல்லோ கலர் சக் தான் பிடிக்கும் எனப் பையன் சொன்னபோதுதான் ரெட் ஆங்ரியானது. ‘ஹேய், கூல் கூல், நான் சும்மாதான் அப்படிச் சொன்னேன்’ என்றதும் மறுபடியும் ஜாலியானது.

ஆங்ரி பேர்ட்ஸோடு போட்டோ, செல்ஃபி என உற்சாகமாக இருந்த சுட்டிகள், அவை விடைபெறும்போது சோகமாகிவிட்டனர்.

ஏன் சோகமாகிட்டீங்க, விரைவில் பெரிய திரையில் உங்களை மீட் பண்ணப் போறேனே” என்றதும் ஓகே, நிச்சயம் பார்ப்போம் எனச் சுட்டிகள் விடைகொடுத்தனர்.

அன்பான ஆங்ரி பேர்ட்ஸுக்கு வெல்கம் சொல்வோம்

- மு.சித்தார்த், படங்கள்: மா.பி.சித்தார்த்