Published:Updated:

கதை கதையாம் காரணமாம்! - 5

கதை கதையாம் காரணமாம்! - 5
பிரீமியம் ஸ்டோரி
கதை கதையாம் காரணமாம்! - 5

எத்தனையோ கதைகள்... உங்கள் பாதையில்!

கதை கதையாம் காரணமாம்! - 5

எத்தனையோ கதைகள்... உங்கள் பாதையில்!

Published:Updated:
கதை கதையாம் காரணமாம்! - 5
பிரீமியம் ஸ்டோரி
கதை கதையாம் காரணமாம்! - 5
கதை கதையாம் காரணமாம்! - 5

தைகளே பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடலை சுவாரஸ்யமாக்குகின்றன. கதைகள் கூறும் பெற்றோர்களோடு பிள்ளைகள் இணக்கமாக இருக்கிறார்கள்... இந்தப் பெற்றோர்கள் கதை அல்லாமல் வேறு ஏதேனும் சொன்னாலும் கவனமாகக் கேட்கிறார்கள். சுருக்கமாக சொன்னால்... பிரியத்தின் சங்கிலி அறுந்துவிடா திருக்க கதைகள் உறுதுணையாக இருக்கின்றன.

`காலையில் டிபன் செய்து, குழந்தைகளைக் குளிப்பாட்டி, ஸ்கூலுக்கு கொண்டுபோய் விடுவதற்கே நேரம் சரியாக இருக்கு! பசங்களும் ஸ்கூல் முடிந்து, டியூஷன் முடிந்து வந்ததும் தூங்கத்தான் முடியுது; இதுல எந்த நேரத்தில் கதை சொல்றது..? அதுவும்போக, எங்களுக்கும் கதைகள் படிக்க எங்கே நேரம் இருக்கு?’னு நியாயமான கேள்வி உங்களுக்கு எழலாம். உங்களுக்கு இந்தக் கேள்வி தோன்றியதற்கே பெரிய வாழ்த்துகள். ஏனெனில், நீங்கள் கதை சொல்ல விரும்பும் பெற்றோராகிவிட்டீர்கள்.

சின்ன வயதிலிருந்து பல கதைகளைப் படித்திருப்பீர்கள். அதன்மூலம் ஒரு கதையின் வடிவம் எப்படி இருக்கும் என்று ஓரளவு உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதுபோதும்... அருமையான கதைகளை நீங்களே உருவாக்க லாம் (அதற்காக, புத்தகங்கள் படிக்க வேண்டாம் என்று அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்). பிள்ளையை பேருந்தில் அழைத்துச் சென்று பள்ளியில் விடும் ஒரு பெற்றோர் என்று வைத்துக்

கொள்வோம். அவர்கள் எப்படி கதையை உருவாக்கலாம்..? வீட்டிலிருந்து அம்மா, மகளைப் பள்ளியில் விட்டுவர கிளம்புகிறார் என்றால்... அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், எதிரில் வரும் விலங்குகள், பேருந்தில் பார்க்க நேரிடும் காட்சிகள் ஆகியவற்றைக்கொண்டு சுவாரஸ்யமான கதை ஒன்றை உருவாக்கலாம். அதற்கு ஓர் உதாரணக் கதையைப் பார்ப்போமா?

வீட்டிலிருந்து அம்மாவும், மகளும் பள்ளிக்கு கிளம்புகிறார்கள். அம்மா கதையைத் தொடங்குகிறார்... 

பச்சை கேட் போட்ட, வீட்டைப் பூட்டிவிட்டு அம்மாவுடன் கிளம்புகிறாள் தீக்‌ஷிதா. வெளியே பயங்கரமான வெயில் அடிக்கிறது ஆனால், இவர்கள் நிழலிலேயே செல்கிறார்கள். வானத்தில் உள்ள கருமேகம் அவர்களோடு பள்ளிக்கு வருவதற்கு ஆசைப்படுவதுபோல் அசைந்து காட்டுகிறது. பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கின்றனர். பஸ் வந்ததும் ஏறி, ஸீட்டில் அமர்ந்துகொள்கின்றனர். அம்மா வழக்கம்போல இரண்டு டிக்கெட்டுகள் எடுக்கிறார். தீக்‌ஷிதா, `அம்மா, மேகத்துக்கு டிக்கெட் எடுக்கலையா?’ என்கிறாள். `அது பஸ்ஸுக்கு மேலேதானே வருகிறது அதனால் வேண்டாம்’ என்கிறார் அம்மா. தீக்‌ஷிதா சொல்கிறாள்... `மான் கத்துகிறது’ (தீக்‌ஷிதாவின் ஸ்கூல் பேக்கில் ஒரு பக்கம் மான் படமும், அடுத்த பக்கம் பூச்செடிகள் படமும் போடப்பட்டுள்ளன). `என்னை உன் ஸ்கூல் பேக்கிலிருந்து பிய்த்துவிடு; எனக்குப் பசிக்கிறது, அந்தப் பக்கத்தில் உள்ள பூச்செடியை கடித்து தின்ன வேண்டும்' என்கிறது மான். `உன்னை விடுவிக்க மாட்டேன், உன்னைப் போலவே அந்தப் பூச்செடிகளையும் எனக்குப் பிடிக்கும், அதுங்க எவ்வளவு அழகாக இருக்கு!” என்கிறாள் தீக்‌ஷிதா. அதற்கு மான், “என்னால் பசி பொறுக்க முடியவில்லையே' என்கிறது. அம்மா அதற்கு வழி சொல்கிறாள். `நாம் பஸ்ஸில் புறப்பட்டு நான்காவது திருப்பத்தில் சின்னப் பூங்கா இருக்கிறது. அதையொட்டி, நிறைய மரங்கள், புல் எல்லாம் இருக்கின்றன. நாம் அந்த இடத்தில் மானை விடுவித்துவிட்டால், புல் சாப்பிட்டுவிட்டு, நாம் பள்ளிக்கு செல்வதற்குள் ஓடி வந்துவிடும்’ என்கிறார். நான்காவது திருப்பத்தில் மானை விடுவிக்கிறார்கள். மானும் சந்தோஷமாக ஓடுகிறது. பள்ளி வந்ததும் இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கிக்கொள்கிறார்கள். தீக்‌ஷிதா முதல்வேலையாக மேகம் தங்களுடன் வந்திருக்கிறதா என்று வானத்தைப் பார்க்க, மேகம் சிரித்துக்கொண்டே அவளைப் பார்த்து அசைகிறது; அதற்குள் மானும் ஓடிவந்து வயிற்றை ஆட்டிக்கொண்டு, `நல்லா சாப்பிட்டேன் எனக் கூறிவிட்டு, ஸ்கூல் பேக்கில் ஒட்டிக்கொள்கிறது. அம்மா `டாட்டா' காட்ட, தீக்‌ஷிதா பள்ளிக்குள் நுழைகிறாள். அதோடு அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.

மாலையில் பள்ளி வாசலில் காத்திருந்த அம்மாவை ஓடிவந்து கட்டிக்கொள்கிறாள் தீக்‌ஷிதா. ``அம்மா, இன்னிக்கு மேகம் சூப்பரான வேலை ஒண்ணு செய்தது. காலையில் பிரேயர் நடந்துப்ப, என் ஃப்ரெண்டு பூரணி சோர்வாக இருந்தாள். இதுக்கு முன்னாடி இப்படித்தான் ஒருநாள் பிரேயரில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள். அதனால் நான் ஓடிப்போய் அவள் பக்கத்தில் நின்னுகிட்டேன்.என் மேலே இருந்த மேக நிழல் இரண்டு பேர் மேலேயும் விழுந்ததால, அவள் மயக்கம் போடாமல் தப்பித்தாள். அப்பறம் இந்த மான் என்ன செய்தது தெரியுமா...” என்று தீக்‌ஷிதா கதையைத் தொடர்ந்தாள்.

ஒருநாள் பள்ளிக்குச் செல்லும்போதே இவ்வளவு அழகான கதையை உருவாக்க முடியும் என்றால், ஒரு மாதத்தில்  எத்தனை கதைகளை உருவாக்கலாம்..! அவற்றில் உங்களுக்கு ரொம்ப பிடித்த கதைகளை, பிள்ளைகளையே எழுத வைத்து, அவர்களை எழுத்தாளராக்கலாம். இப்போது கோடை விடுமுறை. சுற்றுலா இடங்களுக்கு அல்லது உறவினர் வீடுகளுக்குச் செல்ல பயணம் மேற்கொள்வீர்கள். அதனால் வித்தியாசமான இடங்கள், பொருட்களைப் பார்ப்பீர்கள். அவற்றையெல்லாம் கதைக்குள் கொண்டுவாருங்கள். உறவினர் வீட்டுப் பிள்ளைகளையும் இந்தக் கதை உருவாக்கத்தில் பங்கு பெறச் செய்யுங்கள். `இத்தனை வலிந்து ஏன் கதைகளைக் கூற வேண்டும்’ எனக் கேள்வி எழலாம். தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், பொருட்களோடு குழந்தைகள் தம்மை தொடர்பு படுத்திக்கொள்ளுதல் முக்கியம். அதனால் பிள்ளைகளின் கவனிப்புத் திறன் கூர்மையாகும்.

சரி, கதைப் பயிற்சிக்கு செல்வோமா? இன்று கடைத் தெருவுக்குச் செல்லும்போது, உங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள். வழியில் காணக்கிடைக்கும் காட்சிகளை வைத்து சூப்பரான கதையை, இருவரும் சேர்ந்து உருவாக்குங்கள். முடிந்தால் அந்தக் கதையை நீங்களோ, உங்கள் பிள்ளையோ எழுதியும் பாருங்கள்.

விஷ்ணுபுரம் சரவணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கதைகள் வெறும் நேரம் கடத்தி அல்ல!

`சதீஷ்’ என்றால் நண்பர்கள் மத்தியிலேயே இவரைத் தெரியாது. `கதைசொல்லி சதீஷ்’ என்பதே இவரின் அடையாளம். 8 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கதை சொல்லி வருபவர். கடந்த 5 வருடங்களாக முழுநேரக் கதை சொல்லியாக தன் வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொண்டவர். நாடக நடிகராக இப்போது புதிய அவதாரத்தைத் தரித்துள்ளார்.

கதை கதையாம் காரணமாம்! - 5

“திருச்செங்கோடு அருகில் ஒரு பள்ளியில் ஐந்து நாட்கள் கதை விழா நடத்தினோம். எல்லா மாணவர்களும் உற்சாகமாக கலந்துகொண்டாலும், 7 வயதிருக்கும் ஒரு மாணவன் மட்டும் இதில் ஈடுபாடு இல்லாமல் கடமைக்கு என்று உட்கார்ந்திருந்தான். நான்காவது நாள் களிமண்ணில் பொம்மைகள் செய்யும் நிகழ்வு. அவன் கொஞ்சம் களிமண்ணை எடுத்து, ஏதோ ஓர் உருவம் செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தான். அதைக் கவனித்த டீச்சர் அந்தக் களிமண்ணை வாங்கி, அவர் செய்துதர முயன்றார். அப்போது அவன், தன் முயற்சியைத் தடுப்பதாக நினைத்துக்கொண்டு, `எங்க அம்மா, அப்பா ஏமாத்தினாங்க; இப்ப டீச்சரும் ஏமாத்திட்டாங்க’ என்றபோது எனக்கும் அந்த டீச்சருக்கும் அதிர்ச்சியானது. பிறகு அவனைப் பற்றி விசாரித்தபோது, அவனின் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள்; இவனிடம் நேரம் ஒதுக்கி அன்பாக பேசுவதே இல்லையாம். இவனுக்காகத்தான் ஓயாமல் அலைந்து சம்பாதிக் கிறோம் என்பார்களாம். இந்தச் சின்ன வயதிலேயே தனிமையை நெருக்கமாக உணர்ந்ததால் இவ்வளவு பெரிய வார்த்தைகள் அவனிடமிருந்து வந்திருக்கின்றன.

வசதி ஈட்டித் தருவது மட்டுமல்ல, அன்பான உரையாடல்களும் பிள்ளைகளுக்கு முக்கியம் என்பதை பெற்றோர்கள் பலரும் உணரு வதே இல்லை. இந்த மாணவனை இனி கதைகள் மூலமே இயல்பான சூழலுக்கு மாற்ற முடியும். ஏனெனில், யாரிடமும் அதிகம் பேசாத அவன் ஐந்தாம் நாள் முடிவில் எல்லோரிடமும் பேசுவதற்கு தயாராக இருந்தான். கதைகள் வெறும் நேரம் கடத்தி அல்ல’’ என்று கூறுகிறார் சதீஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism