Published:Updated:

கனடா 2012 காலண்டரில்... ''என்னோட ஓவியம்!''

கனடா 2012 காலண்டரில்... ''என்னோட ஓவியம்!''

கனடா 2012 காலண்டரில்... ''என்னோட ஓவியம்!''

கனடா 2012 காலண்டரில்... ''என்னோட ஓவியம்!''

Published:Updated:
கனடா 2012 காலண்டரில்... ''என்னோட ஓவியம்!''
##~##
சி
றுவர் பத்திரிகையில் ஓவியம் வருகிற சுட்டி வயதில்... கனடா தூதரகத்தின் காலண்டரில் தனது ஓவியத்தை இடம் பெறவைத்து கலக்கப் போகிறார் காத்யாயினி.

''நான், சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் ஆறாம் வகுப்பு படிக்கறேன். என் அப்பா பிஸ்னஸ்மேனா இருந்தாலும், பொழுதுபோக்கா ஓவியமும் வரைவார். அதைப் பார்த்து சின்ன வயசுலயே எனக்கும் ஓவியம் வரையறதுல ஆர்வம் உண்டாச்சு. சில ஓவியப் போட்டிகளில் கலந்துக்கிட்டு பரிசுகளும் வாங்கி இருக்கேன். அப்படித்தான் இந்திய நாட்டுக்கான கனடா எம்பஸி நடத்தின 'ஸ்மார்ட் டிரான்ஸ்போர்ட்’ போட்டியில் கலந்துக்கிட்டேன்'' என்கிறாள் காத்யாயினி.

இரு பிரிவுகளாக நடந்த இந்தப் போட்டியில், காத்யாயினி 10 முதல் 14 வயது வரையிலான பிரிவில் கலந்துகொண்டாள். தகுதிச் சுற்றின் முடிவில், 34 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, கனடா தூதரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. உலகம் எங்கும் உள்ள ஓவிய ஆர்வலர்களும், ரசிகர்களும் அவற்றுக்கு ஓட்டுப் போடுவார்கள். அதிக ஓட்டுக்களைப் பெறுகிற 12 ஓவியங்கள், 2012-ஆம் ஆண்டுக்கான கனடா தூதரகத்தின் காலண்டரில் இடம்பெறும். நாம் சந்தித்தபோது, காத்யாயினி இரண்டாம் இடத்துக்கு முன்னேறி இருந்தாள்.

கனடா 2012 காலண்டரில்... ''என்னோட ஓவியம்!''

''என்னோட டிராயிங் மிஸ் பிரதீபா மேடம்தான் என்னை ஊக்கப்படுத்திட்டே இருப்பாங்க.   இந்தப் போட்டியைப் பத்தி சொல்லி என்னை கலந்துக்கச்  சொன்னாங்க. இந்த ஓவியத்தோட நேர்த்தியான ஸ்ட்ரோக்கைப் பார்த்துட்டு, இது சின்னப் பசங்க வரைஞ்ச மாதிரி தெரியல, மறுபடியும் வரையச் சொல்லி அதை வீடியோவா அனுப்புங் கன்னு அவங்ககிட்டே இருந்து பதில் வந்தது. மறுபடியும் வரையறதை வீடியோ எடுத்து அனுப்பினோம்'' என்கிறாள் காத்யாயினி.

இதில் இருந்தே காத்யாயினியின் ஓவியத் திறமையை உணரமுடிந்தது. இந்த ஓவியத்தைப் பற்றி நாம் சொல்வதைவிட, ஒரு பெரிய ஓவியர் சொன்னால் நன்றாக இருக்குமே என நினைத்தோம். சுட்டி விகடன், பள்ளிகளில் நடத்தும் பிரமாண்டமான 'கலர் கலாட்டா’ நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று, சுட்டிகளை வழி நடத்தும் ஓவியர் விஸ்வம் அவர்களிடம் அழைத்துச் சென்றோம். காத்யாயினியை அன்புடன் வரவேற்ற விஸ்வம், ஓவியத்தைப் பார்த்தார்.

''நானெல்லாம் உன்னோட வயசுல ஓவியத்தைப் பார்க்கத்தான் செய்வேன். நீ வரையறதோடு, இன்டர்நேஷனல் அளவுல கலந்துக்க ஆரம்பிச்சு இருக்கே. அதுக்கே முதல் வாழ்த்தைச் சொல்லணும். இந்த ஓவியத்தை வரையணும்னு எப்படித் தோணிச்சு?'' என்று கேட்டார்.

''இன்னிக்கு கார் போன்ற தனியார் வாகனங்கள் அதிகமா பெருகிடுச்சு. இதனால், எரிபொருளின் தேவையும் உலகச் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தும் அதிகமாகுது.  இதுபத்தி அப்பா உடன் பேசிட்டு இருந்தேன். போட்டியின் தலைப்பும் பொருத்தமா அமைஞ்சதால இதை வரைஞ்சேன். இந்த ஓவியத்துல உலக நாடுகளின் மேப், கடல் போன்ற விஷயங் களையும் கொண்டு வந்து இருக்கேன்'' என்றாள் காத்யாயினி.

''ரொம்ப அருமையா இருக்கு. ஓர் ஓவியம்ங்கறது பார்த்த காட்சியை அப்படியே சொல்லாம, அதில் இருந்து இன்னொரு விஷயத்தையும் வெளிப்படுத்தணும். ஒரே ஓவியம், பார்க்கிற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பொருளை உணர்த்தணும். ஸ்டில் போட்டோவுக்கும் ஓவியத்துக்கும் இருக்கிற வித்தியாசம் இதுதான். உன்னோட இந்த ஓவியத்துல அந்த வித்தியாசம் நல்லா வந்திருக்கு.'' என்றார் விஸ்வம்.

கனடா 2012 காலண்டரில்... ''என்னோட ஓவியம்!''

தொடர்ந்து, உலகின் சிறந்த ஓவியர்கள் பற்றியும் எந்த வகை ஓவியத்தை எப்படி வரைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றியும் பல்வேறு தகவல்களை காத்யாயினிக்கு சொன்ன விஸ்வம், ''சரி, நீ பெரியவளான பிறகு, ஓவியத் துறைக்கு வருவியா?'' என்று கேட்டார்.

''எனக்கு ஆர்க்கிடெக்கா வரணும்னு ஆசை அங்கிள். லா படிக்கவும் ஆசை. எதுவா இருந்தாலும் ஓவியத்தை விட்டுவிட மாட்டேன். அதுக்கு ஒரு நேரத்தை ஒதுக்கி வரைவேன்'' என்றாள்.

''வெரிகுட் காத்யாயினி! நிறைய ஓவியக் கண்காட்சிகளுக்குப் போ. ஓவியங்களை வரையும்போது பக்கத்துல இருந்து பாரு. வண்ணங்களை எப்படி சேர்க்கறாங்க... கோடுகளை எப்படி போடறாங்க இந்த மாதிரி விஷயங்களைக் கவனி. அதுல இருந்து நிறைய கத்துக்கலாம். கனடா காலண்டர் மாதிரி பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்'' என்றார்.

நீங்களும் காத்யாயினிக்கு வாழ்த்துச் சொல்லி, 2012 கனடா காலண்டரில் வரப்போகும் அந்த ஓவியத்தை அட்வான்ஸாக ரசியுங்கள் சுட்டீஸ்!