Published:Updated:

பலே புத்தகங்கள்!

பலே புத்தகங்கள்!

பலே புத்தகங்கள்!

பலே புத்தகங்கள்!

Published:Updated:
பலே புத்தகங்கள்!

ஹாய் சுட்டீஸ்... புத்தகம் பலரின் வாழ்க்கையை மாற்றி இருக்கு. அந்தப் புத்தகத்தையே சிலர் மாத்தி யோசிச்சுக் கொடுத்து இருக்காங்க. அதை ஒரு 'ரவுண்ட்’ வருவோமா...

##~##
பு
த்தகத்தில் கதைகள் இருக்கும்... அந்தக் கதைகளுக்கு ஓவியங்கள் இருக்கும்... ஆனா, கலிபோர்னியாவில் இருக்கும் மைக் ஸ்டில்கி (விவீளீமீ stவீறீளீமீஹ்), புத்தகங்களையே ஓவியங்களா மாத்தி இருக்கார். பழைய புத்தகங்களை நிறைய சேகரிச்சு, அதை சுவர் ஓரமா அடுக்கி, அட்டையில் அழகழகா போர்ட்ராய் ஓவியங்களை வரைஞ்சு இருக்கார். இந்த மாதிரி 100 ஓவியங்களை வரைஞ்சு இருக்கார். (இந்த சாதனை பற்றி வர்ற புத்தகத்தையாவது தனியா எடுத்து வைப்பாரா?)

தண்ணீரை ஊற்ற ஊற்ற மரம் வளரும்... புத்தகம் படிக்கப் படிக்க அறிவு வளரும். மரம் வளர்ந்தா எல்லோருக்கும் பயன்படும். நம்ம அறிவும் அப்படித்தான். எதுக்கு இவ்வளவு பில்டப்..? ஸ்பெயின் நாட்டின் அலிசிலா மார்டின் (Alicia Martin)  என்பவர், புத்தகத்தாலே ஒரு மரத்தை உருவாக்கி இருக்கார். மக்களிடயே புத்தகம் படிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த  இப்படி ஒரு அசத்தல் ஐடியா! இதுக்காக 5000 பழைய புத்தகங்களைப் பயன்படுத்தி இருக்கார். (மறந்துபோய் 'தண்ணி’ ஊத்திடாம இருந்தா சரி!)

பலே புத்தகங்கள்!

நல்ல புத்தகங்கள் நம்மை முன்னேற்றும். லண்டன் ஒலிம்பியாவில் இருக்கும் விக்டோரியா மேன்சன் என்ற கட்டடத்தின் அறைகளில் இருக்கிற நூலகம், உங்களை மேலே... மேலே கூட்டிட்டுப் போகும். இங்கே தரை தளத்தில் ஆரம்பிச்சு... மாடிக்குப் போக மரப்படிகள் இருக்கும். அந்த மரப்படிகளின் இடைவெளியிலும் பக்கவாட்டுப் பகுதிகளிலும் புத்தகங்களை அடுக்கி வெச்சிருப்பாங்க. சின்னச் சின்ன விளக்கு வெளிச்சங்களோடு பார்க்கவே அட்ராக்டிவா இருக்கும். ('படிப் படி’யா படிச்சு முன்னேறலாம்!)  

சில புத்தகங்களில் இருக்கிற விஷயங்கள் நம்மை பிரமிக்க வைக்கும். சிலர் புத்தகங்களையே மகா... மெகா வடிவங்களில் உருவாக்கி, பிரமிக்க வைப்பாங்க. அதில் ஒண்ணுதான்...Giant visual odyssey through the kingdom of bhutan’  தலைப்பு மாதிரியே புத்தகமும் பெருசு. இதோட உயரம் 1.52 மீட்டர், அகலம் 2.13 மீ., எடை 60 கிலோ. 112 பக்கங்களோடு... மெகா போட்டோக்கள் இருக்கு. 2000 டாலர் செலவில் ஒரு கேலன் 'இங்க்’கைப் பயன்படுத்தி, ஒரே நாளில் இதை அச்சிட்டு இருக்காங்க.(ஆனா, பார்த்து ரசிக்க பலநாள் தேவைப்படுமே!)  

நியூயார்க்கில் இருக்கும் ராபர்ட் என்பவர், பைபிள் போன்ற பிரபல புத்தகங்களை... துப்பாக்கி வடிவில் செய்து வெளியிடறார். சாதாரண புத்தகங்களின் வடிவில் துப்பாக்கி கட்-அப் இருக்கும். அதைத் தனியா எடுத்து, அதுல இருக்கிற விஷயங்களை மனசுக்குள்ளே சுட்டுக்கலாம். இது தவிர, அமெரிக்காவின் சில புத்தகக் கடைகளில்... புத்தகங்களை விதவிதமான வடிவங்களில் தோரணங்களா தொங்கவிடறாங்க. புத்தகத்துக்குள்ளே ஒரு பக்கத்தை எடுத்து, இயற்கைக் காட்சிகளைச் செதுக்கி, புத்தகச் சிற்பங்கள் என்ற பெயரில் கண்காட்சியா வெச்சு கலக்கறாங்க. (இவங்களைத்தான் 'சிந்தனைச் சிற்பிகள்’னு சொல்றாங்களோ!)  

- கே.யுவராஜன்