Published:Updated:

அசத்தல் ஆய்வு!

அசத்தல் ஆய்வு!

அசத்தல் ஆய்வு!

அசத்தல் ஆய்வு!

Published:Updated:
அசத்தல் ஆய்வு!
##~##
ம் சுட்டிகள், உலக அளவில் அறிவியல் ஆய்வுகளில் சிறந்து விளங்குகின்றனர் என்பதை நிரூபிக்கும் வகையில், திருநெல்வேலி சங்கர் நகர் ஜெயந்திரா பொன்விழா மெட்ரிக் பள்ளியின் 10-ஆம் வகுப்பு படிக்கும் கணேஷ்வர், 'மனித நலத்தில் வேதியியலின் பங்கு’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து, போலந்து நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

''ஒரு மனிதனின் உடலில் உள்ள டிஎன்ஏ-வில் உள்ள பலவகை புரோட்டீன்களின் அமைப் புகளைப் புரிந்துகொள்வதன் மூலம் அந்த மனிதனின் குணாதிசயங்களை எப்படி மாற்றலாம் என்பதை கட்டுரையில் விளக்கிக் கூறினேன். இதனால், முதல் இடம் கிடைத்ததோடு, மேரி கியூரி நினைவுப் பரிசும், அடுத்த ஆண்டில் மேரி கியூரி அம்மையாரின் வீடு மற்றும் அறிவியல் ஆய்வகத்தைப் பார்வையிடவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். இதில் எங்கள் பள்ளி ஆசிரியர் குழுவினரின் பங்கும் இருக்கிறது'' என்ற கணேஷ்வர் குரலில் பெருமிதம் இருந்தது.

கணேஷ்வரின் அசத்தல் ஆய்வு கட்டுரைகளும் பயணங்களும் தொடரட்டும்!

-இ.கார்த்திகேயன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்