Published:Updated:

செம ஸ்மார்ட் ரோபோக்கள்!

செம ஸ்மார்ட் ரோபோக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
செம ஸ்மார்ட் ரோபோக்கள்!

செம ஸ்மார்ட் ரோபோக்கள்!

செம ஸ்மார்ட் ரோபோக்கள்!

செம ஸ்மார்ட் ரோபோக்கள்!

Published:Updated:
செம ஸ்மார்ட் ரோபோக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
செம ஸ்மார்ட் ரோபோக்கள்!
செம ஸ்மார்ட் ரோபோக்கள்!

‘‘எனக்கு சாக்லேட் ஃப்ளேவர் ஐஸ்க்ரீம்தான் வேண்டும்'' என்று அடம்பிடிப்பது மட்டும்தான் பாக்கி. மற்றபடி, இன்று ரோபோ டெக்னாலஜி எங்கேயோ போய்விட்டது. ரோபோடிக்ஸ் துறையில் அசத்திவரும் சூப்பர் ஸ்மார்ட் ரோபோக்களில் சில...

செம ஸ்மார்ட் ரோபோக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Nao Robot: ஜப்பான் வங்கிகளில் வேலைக்கு அமர்த்தும் அளவுக்கு வாடிக்கையாளர்களிடம் பேசி அசத்தும் இந்த ரோபோக்கள், 19 மொழிகள் பேசும். தலையில் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு கேமராக்கள்  மூலம் தன்னுடன் பேசும் மனிதர்களின் முகபாவனைகளைப் பதிவுசெய்துகொள்ளும். காதுகளில் இருக்கும் மைக்ரோபோன் மூலம் குரல்களைப் பதிவுசெய்துகொள்ளும். முதன்முதலில், 2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மேம்பட்டு வரும் இந்த ரோபோக்கள், கங்ணம் ஸ்டைலில் நடனம் ஆடுகின்றன. உலக அளவில் ரோபோக்கள் இடையே நடத்தப்பட்ட கால்பந்துப் போட்டியில், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 'கில்லிடா' என்கின்றன.

செம ஸ்மார்ட் ரோபோக்கள்!
செம ஸ்மார்ட் ரோபோக்கள்!

Honda ASIMO: ஹோண்டா நிறுவனம் 20  ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய நான்கு அடி மனித ரோபோ இது. காஸ்ட்லியான இந்த ரோபோக்கள், தன் மாஸ்டர் கொடுக்கும் வேலைகளைப் புரிந்துகொண்டு அசத்தலாகச் செய்கின்றன. மணிக்கு ஆறு கிலோமீட்டர் வேகத்துக்கு நடப்பது, படிகளில் ஏறுவது, மற்ற பொருட்கள் மீது மோதாமல் விலகிச்செல்வது  என எல்லாமே சர்வசாதாரணம். ‘ஹாய்' எனக் கைகுலுக்கி வரவேற்பது, கால்பந்து விளையாடுவது  என அசத்துகிறது. அசிமோவைச் சுற்றி நின்று, ஒரே நேரத்தில் பலர் பேசினாலும், அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு ஒவ்வொருவருக்கும் பதில் கூறி கெத்து காட்டும். 10 பேரின் முகங்களை நினைவில்வைத்து, ‘ஹலோ விக்னேஷ், ஹாய் செளம்யா' எனப் பெயர் சொல்லி அழைக்கும்.

செம ஸ்மார்ட் ரோபோக்கள்!

Snakebot: இது, பாம்பு போன்ற தோற்றத்தில்  இருக்கும். பல வகைகளில், பல்வேறு பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. 2011-ம் ஆண்டு, ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிப்படைந்த அணுஉலைகளின் உள்ளே ஊர்ந்துசென்று, நிலைமையை ஆராய்ந்து சொன்னது. மிகச் சிறிய வகை ரோபோக்கள், மனித உடலுக்குள் செய்யப்படும் சிக்கலான சிகிச்சைக்கும் உதவுகின்றன. கடலடி, மலைஉச்சி, மனித இதயம் என இவை புகாத இடமே இல்லை.

செம ஸ்மார்ட் ரோபோக்கள்!

Ant & Cockroach Robot: எறும்பு போல  சிறியதாக இருக்கும் ஆறு கால்களைக்கொண்ட ரோபோக்கள். இவற்றைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்துகிறார்கள். பழுதாகும் இயந்திரங்களுக்குள் குழுவாகச் சென்று பணிபுரிகின்றன. பார்ப்பதற்கு  அசல் கரப்பான்பூச்சி போலவே இருக்கும் ரோபோக்கள், எதிரிகளின் இருப்பிடத்துக்குள் சென்று உளவு பார்த்து, ஜேம்ஸ்பாண்டுக்கே செம டஃப் கொடுக்கின்றன. இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கவும் உதவுகின்றன.

செம ஸ்மார்ட் ரோபோக்கள்!

Pepper Robot: ‘மனித உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் உலகின் முதல் ரோபோ' என்கிறார்கள். ஜப்பானின் கண்டுபிடிப்பு இது. தெரிந்தவர்கள் வந்தால், சிரிக்கும். நமது மகிழ்ச்சி, துக்கம், வியப்பு, கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு ஏற்ப பதில் அளிக்கும். நாம் சோகமாக இருந்தால், நடனம் ஆடி மகிழ்விக்கும். ஜப்பான் பள்ளி ஒன்றில், குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கவும், அவர்கள் சோகமாக இருக்கும்போது உற்சாகப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

செம ஸ்மார்ட் ரோபோக்கள்!

Care providing Robot Friend: உடல் ஊனமுற்றவர்களுக்கென வடிவமைக்கப்படும் இந்த ரோபோக்கள், வீல் சேருடன் இணைந்து பல அழகிய வடிவங்களில் இருக்கும். ரோபோ கைகளுடன் காணப்படும் இந்த வீல் சேர்களில் ஒரு கம்ப்யூட்டரும், கேமரா சிஸ்டமும் இருக்கும். இந்த கேமரா, சுற்றிலும் நடப்பதைக் கண்காணித்து, அதற்கேற்ப செயல்படும். உடல் ஊனமுற்றோர், இதன் மீது அமர்ந்தபடி உணவு தயாரிப்பது முதல், உலக மேடையில் உரையாடுவது வரை அனைத்தையும் செய்யலாம். பக்கவாதம், கால்கள் செயலிழந்த நிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்டு இந்த ரோபோக்கள்.

- கோ.இராகவிஜயா