Published:Updated:

நொடிகளில் வரும் கடிதம்!

நொடிகளில் வரும் கடிதம்!
பிரீமியம் ஸ்டோரி
நொடிகளில் வரும் கடிதம்!

நொடிகளில் வரும் கடிதம்!

நொடிகளில் வரும் கடிதம்!

நொடிகளில் வரும் கடிதம்!

Published:Updated:
நொடிகளில் வரும் கடிதம்!
பிரீமியம் ஸ்டோரி
நொடிகளில் வரும் கடிதம்!
நொடிகளில் வரும் கடிதம்!

இ-மெயில்

தபால்காரர் வீட்டுக்குக் கொண்டுவரும் தபாலை, ‘மெயில்' என்று அழைத்த காலம் போய்விட்டது. இன்று மெயில் என்றாலே, மின்னஞ்சல் (e-mail) என்றாகிவிட்டது. இந்த இ-மெயிலைக் கண்டுபிடித்தவர், ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 1978-ம் ஆண்டு, அமெரிக்காவில் வசித்த, சிவா ஐயாதுரை என்ற தமிழ் மாணவர்தான், தன்னுடைய 14 வயதில் inbox, outbox என்ற வார்த்தைகளோடு கூடிய தகவல் பரிமாற்றத்தை, இ-மெயில் என்ற பெயரில் கண்டுபிடித்தார். இன்று gmail, yahoomail எனப் பல நிறுவனங்கள் இ-மெயில் வசதியை அளிக்கின்றன.

நொடிகளில் வரும் கடிதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Gmail: தேடு இயந்திரம் என்றாலே கூகுள் என்றாகிவிட்டதுபோல மின்னஞ்சல் என்றாலே, ஜி-மெயில் என்றாகிவிட்டது. ஜி-மெயில் என்னும் இந்த மின்னஞ்சல் சேவை, 2004-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. அப்போதைய கூகுள் நிறுவன ஊழியரான பால் புக்கைட் (Paul Buchheit), இதை உருவாக்கினார். ஏப்ரல் முதல் தேதியில்   வெளியிடப்பட்டதால், முட்டாள்கள் தின ஏமாற்று வேலை என யாரும் நம்பவில்லை. ‘அது எப்படி ஒரு ஜீபி (GB) தகவல்களைச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்' எனக் கேட்டார்கள். ஆனால், 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி ஜி-மெயிலைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடி.

வாட்ஸ்அப்

நொடிகளில் வரும் கடிதம்!

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் இதைப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்னும் அளவுக்கு, ஆப் உலகின் சக்கரவர்த்தியாக இருப்பது, வாட்ஸ்அப் (WhatsApp). 2016 பிப்ரவரி வரை சுமார் 1௦௦ கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர் எனத் தெரியவந்துள்ளது. இந்த வாட்ஸ்அப் சேவை, 2010-ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. யாகூவில் பணியாற்றிய பிரைன் ஆக்டன் (Brian Acton) மற்றும் ஜேன் கவும் (Jan Koum) என்ற நண்பர்களின் ஐடியா. இணைய வசதியின் மூலம் செல்போன்களில் தகவல் தொடர்பை எளிமையாகவும், வேகமாகவும் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கினார்கள். வழக்கம்போல ஃபேஸ்புக் நிறுவனம் இதையும் வாங்கியது. 1.5 பில்லியன் டாலர்களுக்கு பிப்ரவரி 2014-ல் வாங்கப்பட்டது. தனிநபர் சாட்டிங், க்ரூப் சாட்டிங், கால் வசதி என விறுவிறு அப்டேட் ஆகி, எல்லோரையும் உள்ளே இழுத்துவிட்டது.

நொடிகளில் வரும் கடிதம்!

இன்ஸ்டாகிராம்

நொடிகளில் வரும் கடிதம்!

தகவல்தொடர்பில், புகைப்படங்களுக்கென்றே தனியாக  உருவாக்கப்பட்டது, இன்ஸ்டாகிராம். செல்போன் மூலம் புகைப்படங்கள் எடுத்து, அதற்கு டிஜிட்டல் ஸ்பெஷல் ஃபில்ட்டர்ஸ் மற்றும் எஃபெக்ட் சேர்த்து நண்பர்களுக்குப் பகிரலாம்.  பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களை, ஃபேஸ்புக், ட்விட்டர், ஃப்ளிக்கர் (Flickr) மற்றும் தம்ளர் (Tumblr) போன்ற சமூக வலைதளங்களிலும் பகிரலாம். கிட்டத்தட்ட ஃபேஸ்புக் போலவே செயல்படும் இந்த சமூக வலைதளம், போன்களில் ஆப் வடிவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

நொடிகளில் வரும் கடிதம்!

2010-ம் ஆண்டு கெவின் சிஸ்ட்ரோம் (kevin systrom) மற்றும் மைக் க்ரெய்கர் (mike krieger) என்பவர்களால் ஆப் வடிவில் உருவாக்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் தொடங்கியதில் இருந்து, அதில் 13 பேர்தான் ஊழியர்களாக இருந்தனர். 2012-ம் ஆண்டு, 100 கோடி டாலருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. பின்னர், புதுப்புது வசதிகளோடு மேம்படுத்தப்பட்டது. 2015-ம் ஆண்டில் ட்விட்டரைப் பயன்படுத்துபவர்களைக் காட்டிலும் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாம். 50 கோடிப் பயனாளிகளோடு  டாப் ஸ்பாட்டில் இருக்கிறது.

- கோ. இராகவிஜயா