Published:Updated:

கிட்ஸ் கிச்சன்

கிட்ஸ் கிச்சன்
பிரீமியம் ஸ்டோரி
கிட்ஸ் கிச்சன்

கிட்ஸ் கிச்சன்

கிட்ஸ் கிச்சன்

கிட்ஸ் கிச்சன்

Published:Updated:
கிட்ஸ் கிச்சன்
பிரீமியம் ஸ்டோரி
கிட்ஸ் கிச்சன்
கிட்ஸ் கிச்சன்

ள்ளியிலிருந்து திரும்பியதும் சாப்பிடும் மாலை நேர உணவு, நல்ல உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் கொடுக்கும். 'அந்த உணவை, அடுப்பைப் பற்றவைக்காமலே சுவையாகவும் ஆரோக்கியமாகவும் நீங்களே செய்யலாம்' என்கிறார், பிரியா பாஸ்கர் ஆன்ட்டி.

பிஸ்கட் சாக்லேட் பால்ஸ்!

கிட்ஸ் கிச்சன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவையான பொருட்கள்:

மொறுமொறுப்பான பிஸ்கட் - 5   

கொக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்

கன்டெண்ஸ்டு மில்க் அல்லது மில்க்மெய்டு - 3 மேஜைக் கரண்டி, முந்திரி-3, பாதாம் - 3, பொட்டுக்கடலை - 2 மேஜைக் கரண்டி.


செய்முறை:

மிக்ஸியில் பொட்டுக்கடலை, பிஸ்கட், முந்திரி, பாதாம் பருப்புடன் கொக்கோ பவுடரைச் சேர்த்து மொறுமொறுப்பாக அரைத்துக்கொள்ளவும். அதோடு மில்க்மெய்டு சேர்த்துப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகள் செய்தால், பிஸ்கட் சாக்லேட் பால் ரெடி. அப்படியே சாப்பிடலாம். அல்லது சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தும் சுவைக்கலாம்.

குறிப்பு:

• கொக்கோ பவுடர், மில்க்மெய்டு இல்லையெனில், டெய்ரி மில்க் சாக்லேட்டை கேரட் துருவியால் துருவி, பிஸ்கட் தூளுடன் சேர்த்துச் செய்யலாம்.

பனானா மில்க்‌ஷேக்!

கிட்ஸ் கிச்சன்

தேவையான பொருட்கள்:

கனிந்த வாழைப்பழம் - 2   

வெனிலா ஐஸ்க்ரீம் - 1 கப் (சிறியது)   

தேன் - 2 டீஸ்பூன்    

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு (அலங்கரிக்க)    பாதாம் பருப்பு - 3w

குளிர்ந்த பால் - 1 கப்   
 

செய்முறை:

தோல் நீக்கிய வாழைப்பழத்தை, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மிக்ஸியில் வாழைப்பழம், தேன், வெனிலா ஐஸ்க்ரீம், பாதாம் பருப்புடன் பால் சேர்த்து, நுரை வரும் வரை அரைத்துக்கொள்ளவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துச் சுவைக்கவும்.

கிட்ஸ் கிச்சன்

குறிப்பு:

• வாழைப்பழம் பழுத்திருக்க வேண்டும்.  நேந்திரம் பழம், பேயன் பழம், நாட்டு வாழைப்பழம், செவ்வாழை, மலைப்பழம், பச்சைப்பழம், கற்பூர வாழை, ரஸ்தாளி என எந்தப் பழத்திலும் பனானா மில்க்‌ஷேக் செய்யலாம்.

• மலைப்பழம் சாப்பிட்டால், உடல் எடை கூடும்.

கிட்ஸ் கிச்சன்

• மலச்சிக்கல் உள்ளவர்கள், தினமும் ஒரு பூவன்பழம் சாப்பிடுவது நல்லது.

• அம்மை வியாதிக்கும், பச்சைப்பழம் மற்றும் பேயன்பழங்கள் உடல் வெப்பத்தைத் தணிக்கவும் ஏற்றவை.

படங்கள்: ரமேஷ் கந்தசாமி, மாடல்: கீர்த்தி வாசுகி, நிதிஷ்குமார்