Published:Updated:

அப்பாவும் அம்மாவும் வீட்டு நண்பர்கள்!

அப்பாவும் அம்மாவும் வீட்டு நண்பர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அப்பாவும் அம்மாவும் வீட்டு நண்பர்கள்!

ஜூலை 24 சர்வதேச பெற்றோர் தினம்

அப்பாவும் அம்மாவும் வீட்டு நண்பர்கள்!

‘‘ ‘சர்வதேச பெற்றோர் தின'த்தின் ஸ்வீட் மெமரீஸா, உங்க அப்பா, அம்மாகிட்டே உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் என்னன்னு ஷேர் பண்ணிக்குங்களேன்'' எனச் சில சுட்டிகளிடம் கேட்டோம்.

அப்பாவும் அம்மாவும் வீட்டு நண்பர்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தர்ஷா: ‘‘நான் ஒரே பொண்ணுங்கிறதுனால, அம்மா, அப்பாவுக்கு பயங்கர பெட். என்கூட ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க. அதே நேரம், ரெண்டு பேர்கூட சண்டையும் போடுவேன். அப்பாகூட சண்டை போட்டா, ஸாரி கேட்க மாட்டேன். ஆனா, அம்மாகூட சண்டை போட்டா, உடனே கேட்ருவேன். அம்மா, ரொம்ப மாடர்னா இருப்பாங்க. அதுக்கும் என்னோட ஸ்பெஷல் லைக்ஸ்”

அப்பாவும் அம்மாவும் வீட்டு நண்பர்கள்!
அப்பாவும் அம்மாவும் வீட்டு நண்பர்கள்!

நந்தினி: ‘‘பள்ளி நண்பர்கள், டியூசன் நண்பர்கள் எனப் பல வகை நண்பர்கள் போலதான் அப்பா, அம்மா வீட்டு நண்பர்கள். எனக்கு, பெரிய  பாடகி ஆக ஆசை. அதுக்காக, இவங்க ரெண்டு பேரும் கொடுக்கிற என்கரேஜும், எனக்காக நேரம் ஒதுக்கி அக்கறையோடு கவனிக்கிறதும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.''

ஸ்ரீ சுபாமதி: ‘‘அம்மா, அப்பா ரெண்டு பேருமே புரொஃபசர்ஸ். ஆனா, அவங்களை ஒரு செகண்ட்கூட மிஸ் பண்ணினதா நினைச்சதே இல்லை. எங்க அம்மாகிட்டே ரொம்பப் பிடிச்ச விஷயமே, பேரன்ட்ஸ் மீட்டிங் வந்துட்டுப்போற ஸ்டைல்தான். எங்க டீச்சர்ஸ், ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டேயும் ஜாலியா பேசுவாங்க. ‘மார்க்ஸ் பின்னாடி ஓடாதீங்க. உங்க திறமைகளை எல்லா வகையிலும் வளர்த்துக்கங்க'னு சொல்வாங்க.''

அப்பாவும் அம்மாவும் வீட்டு நண்பர்கள்!

சிதம்பர கிருஷ்ணா: ‘‘எங்க அப்பா,  ரொம்ப ஜாலியான, ஸ்போர்ட்டிவ் அப்பா. ரூல்ஸ் போடுவாரு. ஆனா, எங்க சுதந்திரத்தில் குறுக்க வந்தது இல்லை. ஸ்பெஷல் டின்னர்ஸ், சர்ப்ரைஸ் டூர் என ஆல்வேஸ் அசத்தல்தான்.''

அப்பாவும் அம்மாவும் வீட்டு நண்பர்கள்!
அப்பாவும் அம்மாவும் வீட்டு நண்பர்கள்!

நித்திகா: ‘‘நான் ரொம்ப சேட்டை. ஆனாலும், என் அம்மா மத்தவங்ககிட்ட அதை சேட்டைனு சொல்லாம, ‘நித்திகா ரொம்பச் சுட்டித்தனமான பொண்ணு'னு  சொல்லுவாங்க. எவ்ளோ பிஸி ஷெட்யூல் இருந்தாலும், ரெண்டு பேரும் என்கூடவும் அக்காகூடவும் சேர்ந்துதான் சாப்பிடுவாங்க. அந்த டைனிங் டேபிள் மொமென்ட், எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.''

அப்பாவும் அம்மாவும் வீட்டு நண்பர்கள்!

ஸ்ரேயா, சுதேக்ஷா: ‘‘எனக்கு பெயின்ட்டிங் பிடிக்கும்னு என் குடும்பமே என்கூட சேர்ந்து பெயின்ட் பண்ணுவாங்க. அதே மாதிரி வீட்டுல அம்மா மட்டும் வேலை செய்ய மாட்டாங்க. நாங்க எல்லாரும் சேர்ந்து ஜாலியா பாடிக்கிட்டே க்ளீன் பண்ணுவோம். அப்பா, நிறைய கதை சொல்வார். என்ன வேலை செஞ்சாலும், அதை சம்பந்தப்படுத்தி கதை சொல்றது எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.''

அப்பாவும் அம்மாவும் வீட்டு நண்பர்கள்!

சூரிய நாராயணன்: ‘‘எங்க அப்பா ஆர்மியில வேலை பார்த்தவர். எனக்கும் அப்பா மாதிரியே ஆர்மியில சேர ஆசை. அதுக்காக கராத்தே கத்துக்கிட்டேன். அப்பாவே வீட்டுல எனக்கு ட்ரெய்னிங் கொடுப்பார். நீச்சல் பயிற்சியும் கொடுப்பார். என் தங்கச்சி ஐஸ்வர்யாவும் சேர்ந்துட்டா, வீட்டுல ஜாலி ரகளைதான். ஐ லவ் மம்மி அண்ட் டாடி!''

தொகுப்பு: ச.ஆனந்தப்பிரியா, மு.ராகினி ஆத்ம வெண்டி, தா.நந்திதா, படங்கள்: வீ.சதிஷ்குமார், சூ.நந்தினி, ச.பிரசாந்த்