Published:Updated:

செல்லங்களின் ரகசிய உலகம்!

செல்லங்களின் ரகசிய உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
செல்லங்களின் ரகசிய உலகம்!

சினிமா விமர்சனம்

செல்லங்களின் ரகசிய உலகம்!

ம் வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகள், நாம் இல்லாதபோது என்னவெல்லாம் செய்யும்? இதோ, ‘தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்’ என்ற செம ஜாலி கற்பனைக் கொண்டாட்டம்.

நம்ம ஹீரோ ‘மேக்ஸ்' (குட்டி நாய்), எஜமானி கேட்டியுடன் மேன்ஹாட்டனில் வசிக்குது. எஜமானியின் கொள்ளை அன்பு, நினைச்சா விளையாட்டு, பிடிச்ச உணவு என சாக்லேட் குளத்தில் நீச்சல் அடிக்கிற மாதிரி ஜாலியா போயிட்டிருக்கு மேக்ஸின் வாழ்க்கை.

செல்லங்களின் ரகசிய உலகம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதே மாதிரி வெவ்வேறு வீடுகளில்... ‘கேட்ஜெட்' என்னும் வெள்ளை நாய், மஞ்சள் பறவை, குட்டி எலி, விதவிதமான நாய்கள், குண்டுப் பூனை எனச் செல்லப் பிராணிகள் எல்லாம், எஜமானர்கள் கிளம்பியதும் ஒண்ணுகூடி ஆட்டம் போடுவாங்க.

ஒருநாள், ‘டியூக்' என்னும் பெரிய சைஸ் நாயை வீட்டுக்குக் கொண்டுவரும்  மேக்ஸின் எஜமானி, ‘‘இவன் உன் சகோதரன்” என அறிமுகப்படுத்துறாங்க. அங்கே ஆரம்பிக்குது பிரச்னை. டியூக்கை நம்ம மேக்ஸுக்குப் பிடிக்கலை. ரெண்டு பேருக்கும் எந்த நேரமும் சண்டைதான். ஒருமுறை, நாய்கள் பராமரிப்பாளர் ஒருவரோடு எல்லா நாய்களும் வெளியே போகும்போது, மேக்ஸும் டியூக்கும் பயங்கர சண்டை போடுவாங்க. அந்தச் சண்டையில் கழுத்து பெல்ட்டை ரெண்டு பேருமே தொலைச்சுடுறாங்க.

செல்லங்களின் ரகசிய உலகம்!

கழுத்தில் பெல்ட் இல்லைனா, தெரு நாய் என அரசாங்கத்தில் பிடிச்சுட்டுப் போயிடுவாங்க. அப்படிப் பிடிச்சுட்டுப் போகும்போது முயல், பன்றி மற்றும் ஓணான் குழுவால் காப்பாற்றப்படுறாங்க. ஆனா, அந்த மூணு பேரும் ‘மனிதர்களை வெறுக்கும் விலங்குகள் சங்க'த்தைச் சேர்ந்தவங்க. மேக்ஸையும் டியூக்கையும் படுத்தி எடுத்துடுறாங்க. அவங்ககிட்டே இருந்து தப்பிச்சு, ஒரு கப்பல்ல ஏறி, புரூக்லின் போயிடுறாங்க. அவங்களைத் தேடி அப்பார்ட்மென்ட் செல்ல நண்பர்கள் போறாங்க. மேக்ஸும் டியூக்கும் வீடு திரும்பினாங்களா, ஒற்றுமையா இருந்தாங்களா என்பது மீதிக் கதை.

செல்லங்களின் ரகசிய உலகம்!

வீட்டு முதலாளிகள் கிளம்பியதும், ஃப்ரிட்ஜைத் திறந்து வெரைட்டியா வெட்டுறது, டி.வி பார்க்கிறது, மியூசிக் கேட்டு குத்தாட்டம் போடுறது, மசாஜ் செய்துக்கிறது எனச் செல்லங்கள் செய்யும் அட்டகாசத்தில், சிரிப்பு தெறிக்குது. குழந்தைபோல முயலும், பெண்போல பன்றியும் வேஷம் போட்டு ஏமாத்துவது, சீரியல் பார்த்து எமோஷனல் ஆகும் நாய்க்குட்டி எனச் சிரிப்பு வெடி, நான்ஸ்டாப்பாக வெடிக்குது.

கிரிஸ் ரெனாட் (Chris Renaud) இயக்கத்தில், இலுமினேஷன் என்டர்டெயின்மென்ட் (Illumination Entertainment) தயாரிப்பில் உருவான படம்.

செல்லங்களின் ரகசிய உலகம்!

சண்டை போடாதீங்க, ஒற்றுமையாகச் செயல்பட்டால், எதையும் சாதிக்கலாம் என்பதை ஜாலியாகச் சொல்கிறது, ‘தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்’. இலுமினேஷன் தயாரிப்பு என்பதால், படம் ஆரம்பிக்கும் முன்னர் காட்டப்படும் ‘மினியன்ஸ் ட்ரீட்' குறும்படம், போனஸ். அப்புறம் என்ன? 3D அனிமேஷனில் டபுள் கலாட்டாதான்!

- ஷாலினி நியூட்டன்