Published:Updated:

பட்டாசுப் பரவசம்!

பட்டாசுப் பரவசம்!
பிரீமியம் ஸ்டோரி
பட்டாசுப் பரவசம்!

சினிமா விமர்சனம்

பட்டாசுப் பரவசம்!

சினிமா விமர்சனம்

Published:Updated:
பட்டாசுப் பரவசம்!
பிரீமியம் ஸ்டோரி
பட்டாசுப் பரவசம்!
பட்டாசுப் பரவசம்!

ட்டாசைப் பற்றவைத்துவிட்டு, விரல்களால் காதுகளைப் பொத்தி  காத்திருக்கும் தருணம்… சரிவான சாலையில் கால்களை அகட்டித் தொங்கவிட்டுக்கொண்டு சைக்கிளில் பறக்கும் த்ரில்… இன்னும் மேலே மேலே, நம் காற்றாடியைப் பறக்கவிடும்போது கிடைக்கும் பரவசம்… இவற்றை ஒருசேர அள்ளித்தருகிறது, `ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ்’  (Ice Age: Collision Course).

பட்டாசுப் பரவசம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேன்னி-எல்லி (யானைத் தம்பதி), பீச்சஸ் (மகள் யானை), டீகோ (சிங்கம்), ஸ்க்ரேட் (அணில்) என இதுவரை வெளிவந்த ‘ஐஸ் ஏஜ்’ படங்களில் பார்த்த கதாபாத்திரங்களோடு கூடுதலாக சிலர் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டியோடு, அறிவியலும் கலந்த அசத்தலான விஷூவல் விருந்து. வழக்கம்போல, தன் பிரியமான ஓக் விதையைக் காப்பாற்றப் போராடுகிறது, ஸ்க்ரேட். அந்தப் போராட்டத்தில், ஒரு ஸ்பேஸ் ஷிப்பில் மாட்டிக்கொண்டு செய்யும் களேபரத்தில், விண்கற்களின் மீது மோத, அவை பூமியை நோக்கி வர ஆரம்பிக்கின்றன.

பட்டாசுப் பரவசம்!

மேன்னிக்கும் எல்லிக்கும் அன்று திருமண நாள். மேன்னிக்கோ அது நினைவிலேயே இல்லை. நண்பர்கள் பரிசு கொடுத்துக் கொண்டாடுகின்றனர். எரிகற்களின் வருகையால், வாணவேடிக்கை போல காட்சிகள் தோன்றுகின்றன. இது, மேன்னியின் ஏற்பாடு என நினைக்க, பின்னாலேயே வருகிறது ஆபத்து.  உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எல்லா விலங்குகளும் தெறித்து ஓடுகின்றன.

பட்டாசுப் பரவசம்!

வழியில் இவர்களைச் சந்திக்கிறது, பக் (மரநாய்). எரிகற்களில் இருந்து பூமியைக் காப்பாற்ற வழி இருப்பதாகச் சொல்கிறது. பூமியின் ஆர்பிட்டுக்குப் போனால், தீர்வு கிடைக்கும் என்கிறது. இதை ஒட்டுக் கேட்கும் சில டைனோசர்களும் ரகசியமாக இவற்றைப் பின்தொடர்கின்றன. வழியில், ‘ஜியோடோபியா' (Geotopia) என்ற இடத்தை அடைகின்றன. இவர்களுடன் வரும் சிட் (தரையில் வாழும் ஒருவித தேவாங்கு), அங்கே தன் காதலி ஃபிரான்சைனைச் சந்திக்கிறது. அவளுக்குப் பரிசு கொடுக்க விரும்புகிறது. அங்கிருக்கும் ஒரு கிறிஸ்டல் கல்லை உருவ, அதுவே விபரீதம் ஆகிவிடுகிறது. அங்கிருக்கும் எல்லா விலங்குகளும் திடீரென முதுமை அடைந்துவிடுகின்றன. அவர்கள் திரும்பவும் இளமைக்கு மாறினார்களா? எரிகற்களிடமிருந்து பூமி காப்பாற்றப்பட்டதா என்பதை, அதிரடி ஆக்‌ஷனும் வயிறு குலுங்கவைக்கும் சிரிப்புமாகச் சொல்கிறார்கள்.

கண்களைக் குளிரவைக்கும் அழகழகான காட்சிகள், பொருத்தமான இசை, அந்தந்த கதாபாத்திரங்களுடன் நெருக்கமாக உணரவைக்கும் 3D டெக்னாலஜி, நிமிடத்துக்கு ஒருமுறை வெடிச்சிரிப்பு வசனங்கள் என அட்டகாசமான ஃப்ளேவரில் ருசிக்கவைக்கிறது, ‘ஐஸ் ஏஜ்'.

- பாலு சத்யா