Published:Updated:

புக் கிளப்

புக் கிளப்
பிரீமியம் ஸ்டோரி
புக் கிளப்

புக் கிளப்

புக் கிளப்

புக் கிளப்

Published:Updated:
புக் கிளப்
பிரீமியம் ஸ்டோரி
புக் கிளப்
புக் கிளப்

அபாயப் பேட்டைவெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ் கே.கே.நகர் மேற்கு, சென்னை-78

ஆக்‌ஷன் புத்தகம்!

ங்களுக்குப் பேய்கள் பிடிக்குமா? அரக்கர்கள், மாயாஜாலம் நிறைந்த கதைகள் பிடிக்குமா? அப்படியானால், இந்தப் புத்தகமும் பிடிக்கும். சுட்டி விகடனில் தொடர்கதையாக வெளியான கதை. இப்போது, ‘அபாயப் பேட்டை' என்கிற பெயரில் வெளியாகி உள்ளது.

புக் கிளப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷ்லாமாலியா பேட்டை என்கிற இடத்தில் ‘தடுபா' என்கிற விசித்திர மனிதர்கள் ரகசியமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு,  ‘பஜூலேஹிரா' என்கிற தீய சக்தியால் ஆபத்து. இந்தத் தடுபா மக்களைக் காப்பாற்ற ரூபியால்தான் முடியும். ஆனால், ரூபி சாதாரண பள்ளிச் சிறுமி. அவள் எப்படி ஷ்லாமாலியா பேட்டைக்குப்போய், தடுபா மக்களைக் காப்பாற்றுகிறாள்? பஜூலேஹிராவை எப்படி அழிக்கிறாள் என்பதை விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார், ரமேஷ் வைத்யா.

இந்தப் பயணத்தில் வரும் ஆபத்துகளை  எதிர்கொண்டு போராடுகிறாள் ரூபி. துரத்தும் தொப்பி சாத்தான், எங்கு எது நடந்தாலும் துல்லியமாகக் காட்சிப்படுத்தும் சாப நரி, ஆபத்துகள் நிறைந்த ஓணான் ராஜ்ஜியம், மனிதர்களைச் சாப்பிடும் பூக்கள்... எனப் படிக்கும் நமக்கும் ஷ்லாமாலியா பேட்டைக்கு போய்வரத் தோன்றுகிறது.

ஆக்‌ஷன் படங்கள், கார்ட்டூன்கள் பார்த்திருப்பீர்கள்... இது முழுமையான ஆக்‌ஷன் புத்தகம்.

- அதிஷா

வழிகாட்டும் தோழன்!

ரு வார்த்தைக்கு அர்த்தம் அறிய அகராதியைப் புரட்டுவோம். அந்த வார்த்தை அறிவியல் சம்பந்தமானது என்றால், இதற்குச் சிறந்த வழிகாட்டியாக வந்திருக்கிறது, ‘அறிவியலில் - அ முதல் ஃ வரை பொருட்களஞ்சியம்' (Science A-Z Ready Reckoner).

புக் கிளப்

A-Z  வகையில் ஆங்கில வார்த்தைகளுக்கு, தமிழில் பொருட்குறிப்புகள், அறிவியலாளர்களைப் பற்றியும் அவர்களின் சிறப்பும் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, ‘Danial Bernoulli' என்று தேடினால், அவரது பிறப்பு மற்றும் இறப்பு, எதில் பெயர் பெற்றவர், அவர் பெற்ற விருதுகள் போன்ற குறிப்புகளுடன், அவரது புகைப்படமும் வரையப்பட்டிருக்கிறது. இத்தனையும் 30 வார்த்தைகளுக்குள் அடக்கப்பட்டு, நாம் தேடும் விஷயத்தை அளிக்கிறது. சில சிக்கலான வார்த்தைகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஓவியங்கள் உள்ளன. ஆனால், கொஞ்சம் பெரிய அளவில் இருந்திருக்கலாம். லென்ஸ் வைத்துப் பார்ப்பதுபோல உள்ளன. கி.மு 46-ல் ஆரம்பித்து, பல்வேறு பொருட்களைக் கண்டுபிடித்தவர்களைப் புத்தகத்தின் கடைசியில், ஆண்டு வரிசையில் தொகுத்திருப்பது மற்றொரு சிறப்பு. ஆத்மா கே.இரவி, ஆயிஷா இரா.நடராசன் ஆகியோரின் உருவாக்கத்தில், முனைவர்கள்          அ.வள்ளிநாயகம், த.வி.வெங்கடேஸ்வரன் ஆகியோரின் செம்மையாக்கம் புத்தகம் முழுக்க மின்னுகிறது.

பள்ளி மாணவர்கள் கையில் அவசியம் இருக்கவேண்டிய புத்தகம்.

அறிவியல் அ முதல் ஃ வரை பொருட்களஞ்சியம் (Science A-Z Ready Reckoner) வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-1

- பரிசல் கிருஷ்ணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism