Published:Updated:

புக் கிளப்

புக் கிளப்
பிரீமியம் ஸ்டோரி
News
புக் கிளப்

புக் கிளப்

புக் கிளப்

கடலுக்குள் கலக்கல் பயணம்!

டலில் பயணம் செய்வதற்கு கப்பல், படகு, கட்டுமரம் என  ஏதாவது ஒன்று தேவை. ஆனால், அமீர், குமார், ஜான்சன், முருகன், பாண்டிராஜ் ஆகியோர் கடலுக்குள் பயணம் செய்தது எப்படித் தெரியுமா? ஆமை வழிகாட்ட, ஜெல்லி மீன்கள் வெளிச்சம் தர, திருக்கை மீன்களின் வாலைப் பிடித்தவாறு ஜம்மென்று பயணித்தார்கள். 

இதைப் படிக்கும்போதே, நீங்களும் கடலுக்குள் போகும் காட்சி மனதில் விரியும். சுவாரஸ்யமான பயணத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும், ‘ஆமை காட்டிய அற்புத உலகம்'.

புக் கிளப்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அமீரும் நண்பர்களும் கடற்கரையில் விளையாடும்போது, அங்கே வந்த ஆமைக்கு ஓர் உதவி செய்கிறார்கள். அதற்கு நன்றியாக, அவர்களை கடலுக்குள் அழைத்துச் செல்கிறது ஆமை. நீருக்குள் அதிக நேரம் மூழ்கியிருந்தால் மூச்சுவிட முடியாதே? அதற்கு, சூப்பர் டெக்னிக் செய்கிறது ஆமை. கடலுக்குள் புதிய புதிய காட்சிகளைப் பார்த்து வியக்கிறார்கள் நண்பர்கள். மனிதர்கள் செய்த தவறுகளால் உடல்நிலை பாதிக்கப்பட்ட திமிங்கிலத்தைப் பார்க்கிறார்கள். இந்தப் பயணத்தில் பெரிய ஆபத்துகளையும் சந்திக்கிறார்கள். சுறா மீன் ஒன்று இவர்களைக் கடித்துத் தின்றே தீர்வது என விரட்டுகிறது. அவர்கள் தப்பித்தார்களா...அழைத்துச் சென்ற ஆமை என்ன ஆனது?

அனிமேஷன் படம் பார்ப்பதுபோல, படிக்கும் வரிகளைக் காட்சிகளாக மனதில் விரியச்செய்கிறார், கதை ஆசிரியர் யெஸ்.பாலபாரதி. அழகான ஆமை, நீந்திச் செல்ல உதவும் திருக்கை, வெளிச்சம் தரும் ஜெல்லி மீன்கள், கோபக்கார சுறா ஆகியவற்றைக் கண்முன் கொண்டுவந்து,  புத்தகத்துக்கு மேலும் சிறப்பை அளிக்கிறார், ஓவியர் கி.சொக்கலிங்கம். ஆமையோடு பயணம் செய்ய நீங்கள் தயாரா?

- வி.எஸ்.சரவணன்

நூலிலிருந்து...

புக் கிளப்

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஆள்காட்டி விரலை நீட்டி, அந்த ஜெல்லிக் குமிழை அழுத்தினான் அமீர். குமிழுக்குள் அமீரின் ஒரு விரல் நுழைந்தது. சில விநாடிகளில், அந்த ஜெல்லிக்குமிழ் வளரத் தொடங்கியது. விரல்கள், கை என வளர்ந்து, அமீரை முழுவதுமாக உள்ளே இழுத்துக்கொண்டது. இப்போது, காற்று நிரப்பப்பட்ட கண்ணாடிப் பந்துக்குள் இருப்பதுபோல இருந்தான் அமீர். எல்லாருக்கும் வியப்பாக இருந்தது. ‘‘ஹேய்... சூப்பரா இருக்குடா. எல்லோரும் குமிழைத் தொட்டு அழுத்துங்கடா'' என்று கண்ணாடிப் பந்துக்குள் இருந்து குரல் கொடுத்தான் அமீர்.

புக் கிளப்