"இந்த உலகின் ஆற்றல் வாய்ந்த, அதிபயங்கரமான உயிரினம் எதுவாக இருக்கும்? சுறாவா... சிங்கமா...சிறுத்தையா... மனிதனா? நிச்சயம் இவற்றில் எதுவும் கிடையாது. உலகின் மிக மோசமான உயிர்க்கொல்லி, கொசுக்களே'' எனச் சொன்னவர், பில்கேட்ஸ்.

ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் கொசுவால் பரப்பப்படும் மலேரியா காய்ச்சலால் இறந்துபோகிறார்கள். டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் இறப்பதற்கு முக்கியக் காரணம், கொசுக்களே.

கொசுக்களில் 2,500 வகைகள் உள்ளன. குழந்தைகள் மற்றும் முதியவர்களே கொசுக்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஏடிஸ், அனோஃபிலெஸ், குலெக்ஸ், மான்சோனியா, சபேதஸ் ஆகிய குடும்பத்தை சேர்ந்த கொசுக்கள் மிகவும் மோசமானவை.

நோய்களும் கொசு வகையும்!

மலேரியா - பெண் அனோஃபிலெஸ் கொசு.

மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல் - குலெக்ஸ் கொசு.

டெங்கு - ஏடிஸ் கொசு.

ஜிகா வைரஸ் மற்றும் எல்லோ ஃபீவர் - ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள்.

சிக்குன் குன்யா - ஏடிஸ் மற்றும் ஏடிஸ் எஜிப்டி, ஏடிஸ் அல்போபிக்டஸ் வகை கொசுக்கள்.

ஏடிஸ் எஜிப்டி எனும் எமன்!

இந்தியாவில் அதிக அளவில் நோய்களைப் பரப்பும் கொசு இதுதான். இரவு நேரத்தில் கடிக்கும் கொசுக்களைவிட, பகலில் கடிக்கும் இந்தக் கொசுக்கள் மிகவும் ஆபத்தானவை. டெங்கு, ஜிகா, சிக்கன் குன்யா உள்ளிட்ட உயிருக்கு உலைவைக்கும் வைரஸ்களைப் பரப்புபவை.

உலக கொசுக்கள் தினம்!

உலக கொசு ஒழிப்பு தினம் 1897-ம் ஆண்டில் இருந்து கடைபிடிக் கப்படுகிறது. மலேரியா காய்ச்சல், பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளது. அப்போது, இந்தக் காய்ச்சல் எதனால் வருகிறது எனத் தெரியாது. பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் ஜெனரலாக இருந்த, சர் கேம்பல் கிளேய் கிரான்ட் ராஸ் என்பவரின் மகன், ரொனால்டு ராஸ் (Ronald Ross). இவர் பிறந்தது இந்தியாவில் உள்ள உத்தரகாண்ட்டில். இங்கிலாந்து சென்று மருத்துவம் பயின்றார். 1881- ம் ஆண்டு முதல் 1894 வரை மதராஸ், பர்மா, பலுசிஸ்தான், அந்தமான், பெங்களூரு, செகந்திராபாத் எனப் பல இடங்களில் பணிபுரிந்தார். மீண்டும் இங்கிலாந்து சென்று மலேரியா குறித்து ஆய்வுகளில் இருந்த மருத்துவர்களை சந்தித்தார். இந்தியாவுக்குத் திரும்பினார். மும்பை, ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று, மலேரியாவால் பாதிக்கப் பட்டவர்களைப் பரிசோதித்தார். பெண் அனோஃபிலெஸ் கொசு கடிப்பதாலேயே மனிதனின் செரிமான மண்டலம் பாதிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். அவரது ஆய்வு 1897-ம் ஆண்டு பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. 1902-ம் ஆண்டு மலேரியா குறித்த ஆராய்ச்சிக்காக ரொனால்டு ராஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கொசுக்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள...

கொசுவலையைப் பயன்படுத்தலாம் அல்லது ஜன்னல்களுக்கு கொசுவலை அடிக்கலாம்.

வீட்டைச் சுற்றி தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள். பிளாஸ்டிக், மட்டை, தேங்காய் ஓடுகள் போன்றவற்றில் தண்ணீரைத் தேங்கவிடாமல் அப்புறப்படுத்துங்கள்.

இரவு ஆடையாக முழு நீளச் சட்டை, பேன்ட் ஆகியவற்றை அணியுங்கள்.

கொசுவிரட்டிகளின் ரசாயனங்களால் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, கொசுவிரட்டி மருந்துகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. உடலில் பூசும் கொசு க்ரீம்களை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தாதீர்கள்.

- பு.விவேக் ஆனந்த்