கண்ணன் கதைகள், பெரியவர்களையும் குழந்தையாக்கி ரசிக்கவைப்பவை! அவற்றில் சில...

வெண்ணெய்க்காகவே பிறந்தாரா கண்ணன்?!

ஒருநாள் வைகுண்டத்தில் வழக்கமான பூஜைகள் நடந்துகொண்டிருந்தபோது, பூமியில், யசோதை காய்ச்சிய வெண்ணெயின் வாசனை வைகுண்டத்தை அடைய, ‘திகட்டிப்போன இந்த அமிர்தத்தை விட்டுவிட்டு, பூமிக்குப்போய், அந்த வெண்ணெயை விழுங்கி வரலாமே!’ என நினைத்தார் கண்ணன். அப்போது அவருக்கு தூபம் காட்டப்பட்டது. மேக மண்டலத்தைப் போன்ற அந்த தூபப் புகை, ஒரு கணம் ஸ்வாமிக்கும் பக்தர்களுக்கும் இடையே திரை போட, அந்த இடைவெளியில் பூமியில் இறங்கி ஓர் இரவில் ஒருத்தி மகனாகப் பிறந்து, ஒருத்தி மகனாக ஒளிந்து வளர்ந்து, ஆயர்பாடி வந்து, ஆசை தீர வெண்ணெய் தின்று, பலவிதமான லீலைகள் செய்து கிருஷ்ணாவதாரத்தை முடித்துக் கொண்டு, தனது இருப்பிடத்துக்கு திரும்பிவிட்டார் கண்ணன் என்கிறார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார்...

`சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீர் ஆட்டி அத்தூபம் தராநிற்கவே அங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப்போந்து இமிலேற்று வன் கூன் கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர்தம் கொம் பினுக்கே!'

கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்தப் பாடல் பாடி வழிபட, உங்கள் வீட்டுக்கும் வருவான் வெண்ணெய் திருடன்!

பரந்தாமனுக்குப் பாலூட்டிய பூதகியின் ஆசை!

விஷப்பால் ஊட்டி குழந்தை கண்ணனைக் கொல்ல நினைத்த பூதகியின் நிலை என்னவானது என்பது நாமறிந்ததே!

ஆனால், பூதகியின் பூர்வஜென்மக் கதை தெரியுமா?!

மகாபலியின் கர்வம் அடக்க மகாவிஷ்ணு வாமனராக வந்தபோது, அவரின் குழந்தைமுகம் கண்டு மெய்மறந்த மகாபலியின் மகள் ரத்னமாலா, தாய்மை உணர்வு மேலிட, ‘இந்த பாலகனை என் மடியில் கிடத்தி பாலூட்டும் வாய்ப்பு கிடைத்தால், நானே இவ்வுலகின் பெரும் பாக்கியசாலி’ என்று நினைத்தாள். ஆனால், வாமனன், மகாபலியை பாதாளத்துக்குள் அழுத்தியதைக் கண்டு அவளுக்கு சினம் பொங்க, அதே குழந்தையின் மீது வன்மம் கொண்டாள். கதை கிருஷ்ணாவதாரத்திலும் தொடர்ந்தது. ரத்னமாலாவின் வன்மம் அவளைப் பூதகி என்ற அரக்கியாய் பிறக்கவைத்தது. அதேநேரம், ‘தெய்வக்குழந்தைக்குத் தாயாகவேண்டும்’ என்ற அவளது ஆசை, கண்ணனுக்குப் பாலூட்டும் பாக்கியத்தை அருளியது!

பானைக்கும் மோட்சம்!

கஜேந்திரன் எனும் யானைக்கு நாராயணக் கடவுள் மோட்சம் அளித்த திருக்கதை தெரியும். யானைக்கு மட்டுமல்ல, பானைக்கும் அவர் மோட்சம் கொடுத்த திருக்கதை ஒன்று உண்டு. அது கிருஷ்ணாவதாரத்தில் நிகழ்ந்தது. கண்ணனின் அன்புக்குப் பாத்திரமானவன் ததிபாண்டன். ஆனால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் ததிபாண்டனை மாட்டிவிட்டு கண்ணன் தன் குறும்புகளை நிகழ்த்திக்கொண்டிருந்தான். இதற்கெல்லாம் பழிவாங்க ததிபாண்டன் காத்திருந்தான்.

ஒருமுறை கோபியர்கள் கண்ணனை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக புகார் கொடுக்க, யசோதாதேவி கண்ணனை அடிக்க துரத்தினாள். எங்கெங்கெல்லாமோ ஓடி ஒளிந்த கண்ணன், இறுதியில் ததிபாண்டனின் இல்லத்தில் நுழைந்தான். ததிபாண்டனின் வீட்டில் பெரிய பெரிய தாழிகளில் தயிர் ஊற்றிவைக்கப்பட்டிருப்பது கண்ணனுக்குத் தெரியும். எனவே, அப்படி ஒரு பெரிய காலியான தயிர் தாழிக்குள், அதன் மூடியைத்திறந்து, ஒளிந்துகொள்ள நினைத்தான். ஆனால், அதை ததிபாண்டன் பார்த்துவிட்டான். ‘‘காட்டிக்கொடுத்து விடாதே’’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டு பானைக்குள் சென்றான். ததிபாண்டன் அந்த தாழியை மூடி அதன்மேல் உட்கார்ந்துகொண்டான்.

“கண்ணன் இங்கே வந்தானா?’’ என்றபடியே அங்கு வந்த யசோதாவிடம் ‘‘இல்லை தாயே’’ என்று பொய் சொன்னான் ததிபாண்டன். யசோதை போனபிறகும் ததிபாண்டன் பானையின் மீதிருந்து இறங்காமல் ‘‘எனக்கு மோட்சம் அளிப்பதாக உறுதி கூறினால் மட்டும் பானையைத் திறப்பேன்’’ என்றான்.

‘‘வெண்ணெய் திருடுவேன், குழலூதுவேன், இதைவிட்டால் ஒன்றும் அறியாத என்னிடம்போய் மோட்சம் கொடு எனக் கேட் கிறாயே...’’ என்று பதிலுரைத்தான் கண்ணன்.

“அசுரர்களை அழித்தவன் நீ, காளிங்கன் எனும் நாகத்தை அடக்கியவன் நீ. உன்னை நன்கு அறிவேன், உன்னால் எனக்கு மோட்சம் தர முடியும்’’ என்று சொன்ன ததிபாண்டனுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. கண்ணன் நிஷ்டையில் ஆழ்ந்தான். வைகுண்டத்திலிருந்து தேரும் தேவரும் வந்தனர். ததிபாண்டனை மட்டுமல்ல, கண்ணன் ஒளிந்த தாழியையும் சேர்த்து வைகுண்டம் கொண்டு போனார்கள்.

கண்ணனின் கருணைக்கு அளவேது..!

திருமகள்