Published:Updated:

காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!

காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!
பிரீமியம் ஸ்டோரி
காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!

அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்த தினம்

காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!

அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்த தினம்

Published:Updated:
காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!
பிரீமியம் ஸ்டோரி
காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!
காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!

லோ ஃப்ரெண்ட்ஸ்... உங்களுக்கு காந்தி தாத்தாவை எந்த அளவுக்குத் தெரியுமோ, அந்த அளவுக்கு ‘மூன்று குரங்குகள்’ கான்செப்ட் தெரிந்து இருக்கும். ‘தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைக் கேட்காதே, தீயவற்றைப் பேசாதே’ என்பதை சொல்லும் மூன்று ஜப்பானிய குரங்குகளை நமக்கு அறிமுகப்படுத்தி, அதன்படி நடக்க அறிவுறுத்தினார் காந்தி. எந்தக் காலத்துக்கும் பொருந்தும் இந்த விஷயம், தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைக்கு மிகவும் அவசியம்.

காரணம், உலகமே கையடக்க செல்போனில் வந்துவிட்டது. அசைந்தால் ஆப்ஸ், குனிந்தால் கூகுள், விடிந்தால் வாட்ஸ்அப் என நம்மைச் சுற்றிலும் நிறைய நவீன வசதிகள் பெருகிவிட்டன. இதனால், பல நன்மைகள் உண்டு. நமது அறிவுத்திறனுக்கு எவ்வளவோ உதவியாக இருக்கிறது. அதே நேரம், சில சவால்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்கு, மூன்று குரங்குகள் கான்செப்ட்டை, எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்?

காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாயை மூடிக்கொள்ளவும்!

• வீடியோ கேம்ஸ், புது ஆப்ஸ், கேட்ஜெட்ஸ் என சூப்பர் அப்டேட் வெர்ஷனாக நீங்கள் இருக்கலாம். அந்தப் பெருமையை நண்பர்களுக்கு உணர்த்த, அதைப் பற்றியே  எந்த நேரமும் பேசிக்கொண்டு இருக்காதீர்கள். ஒரு நிலைக்கு மேல் அந்த விஷயங்கள்,  உங்கள் சிந்தனையை ஆக்கிரமித்துவிடும். அப்புறம் எப்படி படிப்பில் கவனம் செல்லும்?

காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!

• சில நண்பர்கள், ‘அப்பாவின் வாட்ஸ்அப்பில் இப்படி ஒரு நியூஸைப் பார்த்தேன்’ என சில விஷயங்கள் பற்றி (திருட்டு, கொலை, தவறான நபர்) பேசுவார்கள். உங்களுக்கும் அது எந்த அளவுக்கு தெரிந்து இருக்கிறது என்பதை அறிய நினைப்பார்கள். அந்த மாதிரி நேரத்திலும் வாயை மூடிக்கொள்ளுங்கள். ஏனெனில், இதுபோன்ற செய்திகளில் பாதிக்கு மேல் பொய்யானவை. ஒருவேளை உண்மையாகவே இருந்தாலும், நமது வயதுக்கு மீறிய அந்த விஷயங்களைப் பேசுவதால் வீண் பிரச்னையே உண்டாகும். நம் பேச்சு எப்போதும் நல்லதாக இருந்தால்தான், மனதும் உற்சாகமாக இருக்கும்.

காதை மூடிக்கொள்ளவும்!

காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!

பல் துலக்குவது, குளிப்பது போல செல்போனில் பாட்டு கேட்பது என்பது சகஜமாக மாறி வருகிறது. பாட்டைக் கேட்டவாறு வேலை செய்கிறேன், சைக்கிள் ஓட்டுகிறேன், சாலையைக் கடக்கிறேன், என்று ஆரம்பித்து இரவில் பாட்டைக் கேட்டவாறு தூங்குகிறேன் என எப்போதும் ஹெட்போனை மாட்டிக்கொண்டு இருக்காதீர்கள். இது, செவித்திறனை பாதிக்கும். இசையாகவே இருந்தாலும் எந்நேரமும் நமது காதுக்குள் மோதிக்கொண்டிருந்தால் தீங்குதான்.

லேப்டாப்பில் கேம்ஸ் விளையாடும்போது, ஹெட்போனை அணிந்தவாறு கார்களின் சீற்றத்தையும் குண்டு வெடிப்புகளையும் கேட்பது த்ரில்லாக இருக்கலாம். ஆனால், இந்தப் பழக்கம் உங்கள் காதுகளை கெடுப்பதுடன் மனதையும் பாதிக்கும். எனவே, இதுபோன்ற விஷயங்களுக்கு நண்பர்கள் அழைத்தாலும் மறுத்துவிடுங்கள்.

காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!

தீய எண்ணத்தை உருவாக்கும் ரெக்கார்டு செய்யப்பட்ட பேச்சுகள், கேட்பதற்கு ஆர்வத்தை தூண்டலாம். ஆனால், அந்த வகை பேச்சுகள் பின்னாட்களில் உங்கள் மனதில் பெரும் குழப்பங்களை உண்டாக்கும். எனவே, இத்தகைய விஷயங்கள் உங்கள் காதுகளை எட்டாத தொலைவுக்குச் செல்லுங்கள்.

உங்கள் தன்னம்பிக்கைய குறைக்கும் வகையான பேச்சுகள், கேலிகள் ஆகியவற்றுக்கு எல்லா நேரங்களிலும் காதுகளை மூடி, மூளைக்குச் செல்லாதவாறு நிரந்த பூட்டு போடுங்கள். 

கண்ணை மூடிக்கொள்ளவும்!

காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!

இணையதள பயன்பாடு இன்றைக்கு மிகவும் சாதாரணம் ஆகிவிட்டது. அழகாக ஆங்கிலம் கற்க, விளையாட்டுகளின் விதிகளைப் பார்க்க, விஞ்ஞான செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள என எல்லாவற்றுக்கும் வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைப் பார்த்து சுலபமாக தெரிந்துகொள்ளலாம். ஆனால், அதே இடத்தில்தான் நமக்கு தேவையில்லாத விஷயங்களும் தேடிவந்து, பார்க்கும் ஆர்வத்தை உண்டாக்கும். அந்த நேரத்தில் உங்கள் மனம் உறுதியாக இருக்க வேண்டும்.

‘இது என் மனசுக்கும் வயசுக்கும் நல்லதல்ல’ என கண்களை மூடி, அவற்றை விலக்குங்கள். இதுபோன்ற விஷயங்கள் வராத வகையில் பாதுகாப்பான இணையதளங்களும் செயலிகளும் உள்ளன அவற்றின் வழியே தேடுங்கள்; பாருங்கள்.

காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!

குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பார்ப்பது நல்லதா கெட்டதா என்பதிலேயே உங்களுக்கு குழப்பமா? தயக்கமின்றி உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள். உங்களிடம் மிகுந்த அக்கறையோடு இருக்கும் ஆசிரியர்களிடம் விவாதியுங்கள். பெற்றோருக்கோ, ஆசிரியருக்கோ தெரியாமல் பார்க்க வேண்டும் என நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம், நிச்சயமாக சரியானதாக இருக்காது.

காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவை படிக்கும் வயதில் தேவையில்லை. அவசரமான மற்றும் மிக முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள பயன்படுத்தினால் போதும். தேவையில்லாத விஷயங்களை, மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காகவே நாமும் பயன்படுத்தி பார்ப்போம் என களத்தில் இறங்காதீர்கள். பிறகு, மனம் ஒரு குப்பைத் தொட்டி மாதிரி ஆகிவிடும்.

காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!

விளையாட நினைத்தால், வெளியே சென்று நண்பர்களோடும் இயற்கையோடும் இணைந்து விளையாடுங்கள். சந்தேகங்களை அறிய நூலகங்களில் புத்தகங்களைப் புரட்டுங்கள். மனச்சோர்வு, பயத்துக்கு ஆலோசனை தேவைப்பட்டால், பெற்றோரையும் ஆசிரியரையும் அணுகுங்கள்.

காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!

தொழில்நுட்பங்களிடம் அபார விஷயங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றுக்கு உணர்வுகள் கிடையாது. தன்னை அணுகுவது யார் என்று பார்க்காது. எனவே, அவற்றை அணுகும்போது மூன்று குரங்குகள் விஷயத்தை உறுதியாகப் பின்பற்றுங்கள். சந்தோஷமாக இருங்கள்.

- சித்ரா அரவிந்த், படங்கள்: மீ.நிவேதன், ஒருங்கிணைப்பு:

காந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism