ஆர்டர் கொடுத்தால், குழந்தையை டோர் டெலிவரி செய்யும் பறவைகள் இருந்தால் எப்படி இருக்கும்..? அப்படியான ஜாலி கற்பனையின் உச்சமே, ‘ஸ்டார்க்ஸ்’ (Storks) அனிமேஷன் 3D சினிமாவின் அட்டகாசம்.

கதை என்னென்னா... முன்னொரு காலத்துல, குழந்தைகளை இயந்திரத்தில் உற்பத்தி செஞ்சு, வீட்டுக்கு டெலிவரி கொடுக்கும் வேலையைச் செய்யும் நாரைகள் இருந்துச்சு. அவங்க கம்பெனியின் பெயர் ‘ஸ்டார்க்ஸ்’.

நாம யாரு? அப்பா, அம்மாவோடு இருக்கும்போதே, சேட்டைப் பண்ணி டிமிக்கி கொடுக்கிறவங்க. நாரைகள் என்ன பாடுபடும்? டெலிவரி செய்ய தூக்கிட்டுப் போகும்போது, குழந்தைகள் செய்யற சேட்டையில், டென்ஷனான ஸ்டார்க்ஸ் கம்பெனி, இனிமேல் குழந்தைகளை டெலிவரி செய்யறது இல்லைனு முடிவு செய்யுது. குழந்தைகளைத் தயாரிக்கும் மெஷினையும் ஓரமா போட்டுட்டு, ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை மட்டும் டெலிவரி செய்யறாங்க.

‘ஸ்டார்க்ஸ்’ கூட்டத்தில் டெலிவரி செய்வதில் கில்லாடி வெள்ளை நாரையான, ஜூனியர் ஸ்டார்க். அங்கே வேலை செய்யும் ஒரே மனித இனத்தைச் சேர்ந்தவள், ஜூனியரின் தோழியான துலிப். கம்பெனிக்கு வரும் ஒரு லெட்டரில், தங்கச்சி பாப்பா வேணும்னு ஒரு பையன் ஆர்டர் கொடுக்கிறான். அந்த லெட்டரை, அவசரப்பட்டு குழந்தைத் தயாரிப்பு மெஷினில் போடுகிறாள் துலிப்.

அப்புறம் என்ன? படுசுட்டியான ஒரு குழந்தை ரெடி. அந்தக் குழந்தையை, கம்பெனியில் இருக்கும் யாருக்கும் தெரியாமல், ஜூனியர் ஸ்டார்க்கும் துலிப்பும் டெலிவரி செய்ய நினைக்கிறாங்க. மிச்ச கலாட்டாவைப் பத்தி சொல்லணுமா?

பழங்காலத்தில் செய்தியை புறாக்கள் மூலம் அனுப்புவாங்க. அந்த கான்செப்ட்டை பிடிச்சு, இப்போதைய ஆன்லைன் விஷயத்தைக் கலந்து, அழகான அட்டகாசத்தை கொடுத்திருக்காங்க, வார்னர் பிரதர்ஸ்.

‘டாய் ஸ்டோரி’, ‘தி கார்ஸ்’, ‘தி இன்கிரிடிபிள்ஸ்’ போன்ற அனிமேஷன் படங்களுக்கு, அனிமேட்டராக வேலை செய்த அனுபவசாலிகளான, நிக்கோலஸ் ஸ்டோலர் (Nicholas Stoller) மற்றும் டூக் ஸ்வீட்லாண்டு (Doug Sweetland) இருவரும் இணைஞ்சு இந்தப் படத்தை இயக்கி இருக்காங்க.

ஏன் துலிப் இந்தப் பறவைகள் கூட்டத்தில் இருக்கிறாள், அவளது குடும்பத்தை கண்டுப்பிடித்தாளா என்பதை நெகிழ்ச்சியுடன் சொல்லும் காட்சிகளிலும், குழந்தையை டெலிவரி செய்துவிட்டு, அழுதவாறு பறக்கும் ஜூனியரின் ரியாக்ஷன் என கண்களை கசக்கவைக்கும் காட்சிகளும் உண்டு.

டெலிவரி செய்யவேண்டிய குழந்தையை கடத்திச்செல்லும் நரிகள் கூட்டம், குழந்தை சிரிப்பதை பார்த்ததும், கண்கள் சொக்கி ஜொள்ளு விடுவது செம.

‘ஸ்டார்க்ஸ்’ டெலிவரிக்கு, நீங்க ஆர்டர் கொடுத்தீங்களா ஃப்ரெண்ட்ஸ்!

- பி.எஸ்.முத்து