Published:Updated:

நிலவோடு பேசலாம்!

நிலவோடு பேசலாம்!
பிரீமியம் ஸ்டோரி
நிலவோடு பேசலாம்!

சர்வதேச நிலவு நோக்கு இரவு - அக்டோபர் 8 . 2016

நிலவோடு பேசலாம்!

சர்வதேச நிலவு நோக்கு இரவு - அக்டோபர் 8 . 2016

Published:Updated:
நிலவோடு பேசலாம்!
பிரீமியம் ஸ்டோரி
நிலவோடு பேசலாம்!
நிலவோடு பேசலாம்!

ரு நாள் என்பது 6 முதல் 10 மணி நேரமாக இருந்தால் எப்படி இருக்கும்?

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு அப்படித்தான் இருந்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘நான் யாருக்கும் அடங்காதவன்’ என அசுர வேகத்தில் சுற்றிக்கொண்டிருந்த பூமி, நிலவின் வருகைக்குப் பிறகுதான் கட்டுப்பாட்டுக்கு வந்தது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உருவானது.

பாட்டி வடை சுடும் கதையில் தொடங்கி, கவிதைகள் எழுதுவது, கால் தடம் பதிப்பது என நிலவு என்றென்றும் மனிதருக்கு பேராவலையும் பெரும் ஆச்சர்யத்தையும் அளித்துக்கொண்டே இருக்கிறது. இரவு நேரத்தின் வான் தேவதையான நிலவை நம் முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இன்றைய ஆண்ட்ராய்ட் உலகத்தில், இரவைப் பகலாக்கும் மின்விளக்கு ஒளிகளுக்கு மத்தியில், நிலவை ரசிக்க மறந்துபோகிறோம். ஆனால், நாம் நிலவோடு பேச நிறையவே இருக்கிறது.

நிலவோடு பேசலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிலவைத் தொலைநோக்கியால் ஆய்வுசெய்தார் கலிலியோ. ரஷ்யாவும் அமெரிக்காவும் நிலவின் மேல் பகுதியில் பறந்தும், நிலவுக்குள் இறங்கியும் பல்வேறு ஆய்வுகளைச்  செய்துள்ளன.  ‘சந்திராயன் 1’ மூலம், முதல் பயணத்திலேயே இந்தியா நிலவை வெற்றிகண்டது. இப்படி நிலவோடு நாம் நெருங்க நெருங்க, நிலவோ ஆண்டுக்கு 3.8 சென்டிமீட்டர் பூமியைவிட்டு விலகிச் செல்கிறது. இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு, பூமியின் ஒரு பகுதிக்கு மட்டுமே நிலவு தெரியுமாம்.

சர்வதேச நிலவு நோக்கு நாள்!

இந்த ஆச்சர்யம் மற்றும் ஆராய்ச்சியின் தொடர்ச்சிதான், நாசா அமைப்பால் சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்படும் நிகழ்ச்சியான, ‘சர்வதேச நிலவு நோக்கு இரவு’ (International Observe the Moon Night). தொலைநோக்கி மூலம் நிலவை நோக்குவது, கருத்தரங்குகள், உரையாடல் நிகழ்த்துவது என்று பல்வேறு வடிவங்களில் நிலவு குறித்த நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 47 நாடுகளில் 554 இடங்களில் இந்த நிலவு நோக்கு இரவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு,  அக்டோபர் 8-ம் தேதி, கலிலியோ அறிவியல் மையத்தால் நடத்தப்படுகிறது.

நிலவோடு பேசலாம்!

அதற்கு முன்பாக,  ஒரு நாள் பயிற்சிப்பட்டறை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் நடக்கும் இந்தப் பயிற்சிப் பட்டறையில் மாணவர்கள் பங்கேற்று வருகிறார்கள். பந்தில் நிலவை உருவாக்குதல், அதன் செயல்பாடுகள், வளர்பிறை மற்றும் தேய்பிறை உருவாகும் விதம், சந்திர கிரகணம், சூரிய கிரகணம் உருவாவது,  தொலைநோக்கி வழியாக எப்படி நிலவை நோக்குவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்த நிலவு நோக்கு இரவு நிகழ்ச்சிக்காக,  ‘நிலவோடு பேசலாமா...’ என்ற புத்தகம் ஒன்றை, கலிலியோ அறிவியல் மையத்தின் ச.தேவி எழுதியுள்ளார்.

நிலவுத் திருவிழா!

அக்டோபர் 8-ம் தேதி... பெற்றோர், குழந்தைகள், ஆசிரியர்கள் இணைந்து பங்கேற்கும் முழுநாள் நிகழ்ச்சி மதுரையில் நடைபெறுகிறது. கருத்தரங்கம், பயிற்சிகள் என நடைபெறும் இந்த நிகழ்ச்சியில்  பல்வேறு விஞ்ஞானிகள் பங்கேற்கிறார்கள். இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு நாசா அமைப்பின் மூலம் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

நிலவோடு பேசலாம்!

அன்று மாலை, மதுரை தெப்பக்குளத்தில்  தொலைநோக்கி மூலம் நிலவைப் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நீங்களும் பங்கேற்கலாம். நிலவின் ஆச்சர்யங்களை கண்டு மகிழலாம்!

- அ.சத்ய மாணிக்கம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism