Published:Updated:

கலாம் சிந்தனைகள்!

கலாம் சிந்தனைகள்!
பிரீமியம் ஸ்டோரி
கலாம் சிந்தனைகள்!

கலாம் சிந்தனைகள்!

கலாம் சிந்தனைகள்!

கலாம் சிந்தனைகள்!

Published:Updated:
கலாம் சிந்தனைகள்!
பிரீமியம் ஸ்டோரி
கலாம் சிந்தனைகள்!
கலாம் சிந்தனைகள்!

ழுச்சி நாயகன் அப்துல் கலாம், தமிழ் மண்ணில் உதித்த நாள், அக்டோபர் 15, 1931.  இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று, வல்லரசாக வேண்டும் என்பது அவரது கனவு. அதற்காக, மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் போற்றும் வகையில், அவரது எழுச்சி வரிகளில் சில...

கலாம் சிந்தனைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்விக அக்னியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியை கொழுந்துவிட வைத்து, அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது நமது கடமை.

கலாம் சிந்தனைகள்!

• விவேகம் தராத கல்வி பயனற்றது. எனவே, உங்களை நீங்கள் அறிந்து, அதற்கேற்ப உங்களுக்கு நீங்களே வழிகாட்டுங்கள்.

கலாம் சிந்தனைகள்!

• வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றம் ஆகும். அறிவைத் தேடித் தேடிப் பெற வேண்டும். தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து, வெற்றி பெற வேண்டும்.

கலாம் சிந்தனைகள்!

• கற்றல், கற்பனை சக்தியை வளர்க்கிறது. கற்பனை சக்தி, சிந்திக்கும் திறனைத் தூண்டுகிறது. சிந்தனை, அறிவை வளர்க்கிறது. அறிவு, உன்னை மகான் ஆக்குகிறது.

கலாம் சிந்தனைகள்!

• உங்களுடைய குறிக்கோளில் வெற்றிபெற வேண்டுமெனில், உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து, அதே சிந்தனையோடு செயல்பட வேண்டும்.

கலாம் சிந்தனைகள்!

• நீங்கள் எதைக் கற்பனை செய்கிறீர்களோ அதுதான் செயல் வடிவம் பெறும். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதைத்தான் சாதிக்க முடியும்.

கலாம் சிந்தனைகள்!

• வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்னை. பிரச்னைகள்தான் ஒருவனின் உள்ளார்ந்த துணிச்சலையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகின்றன.

கலாம் சிந்தனைகள்!

• நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.

கலாம் சிந்தனைகள்!

• அறிவாற்றல்தான் நிதர்சனமான, நிலையான சொத்து. உங்களுடைய வேலையில் பயன்படும் மிக முக்கியமான சாதனமும் இதுதான். எந்த அளவுக்கு உங்களுடைய அறிவுத்திறனால் இப்போதைய நிலவரம் வரை தெரிந்துவைத்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் சுதந்திரமான மனிதர். கால எல்லையைத் தவிர வேறு எந்த விதத்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க முடியாது.

தொகுப்பு: பு.விவேக் ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism