ஸ்பெஷல்
Published:Updated:

பென் டிரைவ்

பென் டிரைவ்

பென் டிரைவ்

டீ பேக்ஸ் பற்றி உங்களுக்குத் தெரிந்தே இருக்கும். சூடான பாலில், டீ தூள் இருக்கும் இந்த  பேகை சிறிது நேரம் டிப் செய்தால் டீ ரெடி. இந்த டீ பேகிலும் வெரைட்டி இருந்தால்தானே வியாபாரம் சூடு பிடிக்கும்? ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 'டாங்கி புராடக்ட்’ என்ற நிறுவனம், பிரிட்டன் ராஜ குடும்பத்தினரின் படங்கள், உலகத் தலைவர்கள், கால்பந்து வீரர்கள், பிரபல கார்ட்டூன் படங்களை வைத்து டீ பேக் தயார்செய்து களமிறக்கியுள்ளனர். இந்தப் புதுமையான ஐடியாவுக்கு அந்த நாட்டில் அமோக வரவேற்பு.

பென் டிரைவ்

 இந்தச் சிறுவன் உடலில் இரும்புப் பொருட்கள் எல்லாம்  ஒட்டிக்கொள்கின்றன. இது மாயமோ மந்திரமோ இல்லை. குரோஷியா நாட்டைச் சேர்ந்த காப்ரிவினிகா Koprivnica நகரத்தில் வசித்துவரும் இவான் ஸ்டாய்ஜ்கோவிக் Ivan stoiljkovic என்ற இந்த ஆறு வயதுச் சிறுவன் உடலின் மேல் பாகம் காந்த சக்திகொண்டது. ஸ்பூன், மொபைல் போன், ஃப்ரையிங் பான் என்று லேசான பொருட்கள் மட்டும் அல்ல, 25 கிலோகொண்ட உடல் பயிற்சி தம்புள்ஸ்கூட   ஒட்டிக்கொள்கிறது. இது குறித்து இவனது பெற்றோர் கூறும்போது ''இவன் எட்டு மாதத்திலேயே நடக்க ஆரம்பித்தான். இரண்டு வயசிலேயே மினி மோட்டார் சைக்கிளைப் பயம் இல்லாமல் ஓட்டினான். ஒருநாள் இவனுடைய பாட்டி, 'இந்தக் காயின் உன் உடம்பில் ஒட்டுமா?’ என்று ஜோக்காகக் கேட்டார். விளையாட்டுக்கு ஒட்டிப் பார்த்தால் நிஜமாகவே அப்போதுதான் இவனுள் காந்த சக்தி இருப்பதை அறிந்தோம்'' என்கிறார்கள். இவனது உடலில் காலையில்தான் காந்த சக்தி அதிகமாக இருக்குமாம்.

பென் டிரைவ்

இரவில் ஷெல்ஃபில் இருக்கும் புத்தகங்களைத் தேடுவது சிரமம்தானே? கவலையை விடுங்க. தென்கொரியாவைச் சேர்ந்த ஆய்ரன் காங் Airan Kang  புத்தகங்கள் வடிவில் 'லெட்’  பல்புகளைக் கண்டுபிடித்து இருக்கிறார். இதை ஷெல்ஃபில் புத்தகங்களின் நடுவில் வைத்தால், இருட்டில் பளிச் என்று தெரியும். பிறகென்ன, என்ன புத்தகம் வேண்டுமோ... டக்கென எடுத்துவிடலாமே.

பென் டிரைவ்

 நீலம் என்றதும் நினைவுக்கு வருவது வானமும் கடலும். இனி, ஜோத்பூரையும் சொல்லலாம். இந்த நகரத்தை 'ப்ளூ சிட்டி’ என்று அழைக்கிறார்கள். காரணம், அங்கு உள்ள பெரும்பாலான கட்டடங்கள், நீல வண்ணத்தில் இருப்பதுதான். உயரத்தில் இருந்து பார்ப்பதற்கு தார் பாலைவனத்தில் கடல்போல் காட்சி அளிக்கிறது. தொடக்கத்தில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களே இந்த வண்ணத்தை அடித்தார்களாம். பிறகு, அனைவரும் நீலத்துக்கு மாறிவிட்டார்கள். சிலர் இந்த வண்ணத்திற்கு கொசுக்கள் வராது என்கிறார்கள். சிலர் இந்த நகரத்தைச் சுற்றி பாலைவனம் இருக்கிறது. அதனால், பாலைவனத்தில் தண்ணீர்போல் தெரியவேண்டும் என்று நீல வண்ணத்தை வீடுகளுக்கு அடித்துள்ளோம் என்கிறார்கள்.

பென் டிரைவ்

 ஒரு பொம்மை கார் என்ன விலை இருக்கும்?

பென் டிரைவ்

100 முதல் அதிகபட்சம்

பென் டிரைவ்

10,000 வரை இருக்கலாம். ஆனால், ஜெர்மனியின் ராபர்ட் குல்பென் தயாரித்த  லம்போகினி அவென்டடர் Lamborghini Aventador என்ற காரின் விலை 30 கோடி. இந்த பொம்மை காரை விற்றால், 8 நிஜமான லம்போர்கினி கார்களை வாங்கலாம். இந்த காரில் அப்படி என்னதான் விசேஷம்? விலை உயர்ந்த ரத்தினங்கள், பிளாட்டினம், தங்கம் போன்றவற்றைக் கொண்டு தயார் செய்துள்ளார்கள். இந்தக் காரின் ஹெட் லைட், ஸ்டீயரிங், இருக்கைகளுக்குப் பொருத்தப்பட்ட வைரங்களின் மதிப்பு மட்டும் 13 கோடியாம்.

பென் டிரைவ்

 இந்தியாவின் மராத்தான் சிறுவனை நினைவு இருக்கிறதா? தனது 4 ஆவது வயதில் 65 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி, உலகச் சாதனை படைத்து, ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்த ஒரிசாவைச் சேர்ந்த ஏழைச் சிறுவன் புதியா சிங். அந்தச் சிறுவனும் அவனுடைய பயிற்சியாளரும் செய்த சாதனைகளையும் அவர்கள் கடந்து வந்த சோதனைகளையும் ஓர் ஆவணப் படமாக உருவாக்கி இருக்கிறார்கள். ஹெச்.பி.ஓ. நிறுவனம் வழங்கி உள்ள 98 நிமிடம் வரை ஓடும் 'மராத்தான் பாய்’ என்ற இந்தப் படம், சர்வதேச அளவில் சினிமா மற்றும் ஆவணப் பட ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சோதனைகளைக் கடந்த புதியாவின் சாதனை ஓட்டத்தோடு, நம் இந்தியாவின் அரசியல், பொருளாதார நிலையையும் அப்படியே சொல்லி இருக்கிறதாம் இந்தப் படம்.  

பென் டிரைவ்

 ஹைதராபாத்தில் நவம்பர் 14 -ம் தேதி தொடங்கி 20 -ம் தேதி வரை '17 ஆவது சர்வதேசச் சிறுவர்கள் திரைப்பட விழா’ நடக்கிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 170 சுவாரஸ்யமான படங்கள் திரையிடப்படுகின்றன. மொத்தம் 12 திரையரங்குகளில் திரையிடப்படும் இந்தப் பட விழாவின் முக்கியமான அம்சம் என்ன தெரியுமா? 50 சுட்டி இயக்குநர்கள் தாங்களே எடுத்த குறும்படங்களைத் திரையிடுவதுதான். கிரியேட்டிவிட்டியில் ஆர்வம் உள்ள சிறுவர்களுக்கு அனிமேஷன், விஷ§வல் கிராஃபிக்ஸ் முதலிய தொழில்நுட்பக் கலைகளில் அசத்துவதற்கான அடிப்படை பாடங்களையும் சொல்லித் தரப்போகிறார்கள்.

பென் டிரைவ்

 நமது பிரதமர் மன்மோகன் சிங் முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்குத் 'தூது மடல்’ ஒன்றை எழுதி இருக்கிறார். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவம்பர் 11 தேசியக் கல்வி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி, நம் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்களால் பிரதமரின் கடிதம் வாசித்துக்காட்டப்பட்டது. அந்தக் கடிதத்தில், நம் நாட்டின் சிறுவர்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தைப் பற்றி பிரதமர் விளக்கி இருந்தார். மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும் இந்தச் சட்டம்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே பிரதமரின் விருப்பம்.

பென் டிரைவ்

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியான ஆம்பர் பெல் உலகிலேயே மிகக் குறைந்த வயதில் டிராக் ரேஸில் கலந்துகொண்ட சுட்டி. டிராக் ரேஸ் என்பது ஃபார்முலா ஒன் கார் பந்தயம் போலவே நடத்தப்படும் ரேஸ். இவர் ஜூனியர்களுக்காக நடத்தப்பட்ட 'யுகே நேஷனல் டிராக்’ ரேஸில் இறுதிப் பந்தயத்துக்குத் தகுதி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பந்தயத்தில் இவர் 12 நொடிகளில் 50 கி.மீ. வேகத்தை எட்டியுள்ளார். 24 மணி நேரத்தில் டிராக் ரேஸ் காரை ஓட்டி, ரேஸில் கலந்துகொள்ளத் தகுதியானவள் என்று சர்ட்டிஃபிகேட் பெற்றது ஹைலைட்.  

பென் டிரைவ்

ஸ்பைடர்மேனுக்கு சவால்விடுவதை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலியன் ராபர்ட் சாகசம் புரிகிறார். உலகில் எந்த ஒரு மூலையில் இருக்கும் உயரமான கட்டடங்களிலும்... எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் கடகடவென ஏறிவிடுவார். தற்போது, உலகிலேயே உயரமான கட்டடம், துபாயில் உள்ள 2,717 அடி உயரம் உள்ள புர்ஜி காலிஃபா டவர். இதையும் மனிதர் விட்டுவைக்கவில்லை. சமீபத்தில் இவர், இந்த டவரை ஆறு மணி நேரத்தில் ஏறி, உலகச் சாதனை படைத்தார். 48 வயதாகும் ராபர்டை அனைவரும் ஸ்பைடர்மேன் என்றுதான் அழைக்கிறார்கள்.