. டியர் ஜீபா, ஜூராஸிக் பார்க், ஈ.டி. போன்ற பிரமாண்டமான படங்களைக் கொடுத்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், கார்ட்டூன் கதாபாத்திரமான 'டின்டின்’ படத்தை இயக்கத்தான் வேண்டுமா? .
-ஆர்.கார்த்திக், சென்னை-33

'ஜூராஸிக் பார்க்’ படம் 1993-ல் வந்தபோது, 'அட... கிராஃபிக்ஸை சினிமாவில் இப்படியும் பயன்படுத் தலாமா?’ என்று ஆச்சர்யம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வந்தவைதான் 'காட்ஸில்லா’, 'அனகோன்டா’ படங்கள். எதைச் செய்தாலும் அதில் ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு வழிகாட்டுபவர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். அந்த மாதிரிதான் 'டின்டின்’ படமும். 'கிங்காங்’ இயக்குநர் பீட்டர் ஜாக்ஸன் இதில் கைகோத்து இருக்கிறார். படத்தில் டின்டின் துப்பறியும் மூன்று காமிக்ஸ் கதைகளை ஒன்று சேர்த்து இருக்கிறார்கள். படத்தைப் பாரு கார்த்திக். இதுவரை வந்த அனிமேஷன் படங்களுக்கும் இதற்குமான வித்தியாசம் தெரியும்.

ஜீபா... மற்ற மரங்களைவிட புங்கன் மரத்து நிழலுக்கு குளிர்ச்சி அதிகம்னு சொல்றாங்களே ஏன்?

- ம. அக்ஷயா, அரூர்

நீ புங்கன் மரத்தைக் கவனிச்சு இருக்கியா அக்ஷயா? அதனுடைய கிளைகள், மற்ற மரங்களின் கிளைகளைவிட நெருக்கமாக, அடர்த்தியாக இருக்கும். அதனால், நிழலும் அதிகம். வேப்ப மரத்துக்கு இணையான மருத்துவக் குணம் புங்கன் மரத்துக்கும் இருக்கு. சரும நோய், ஆறாத புண்கள் எனப் பல நோய்களுக்கு புங்கன் விதையில் இருந்து எடுக்கும் எண்ணெய் பயன்படுகிறது. சில வருடங்களாக பயோ டீசலும் தயாரிக்கிறாங்க. கிராமங்களில் புத்துணர்ச்சிக்காக இதன் இலைகளைச் சாறாக்கிக் குடிப்பாங்க. சாலை ஓரம் அமைதியா, அடக்கமா இருக்கிற ஒரு மரம் இவ்வளவும் செய்யுது.

ஜீபா... மாலையில் சிரிப்புடனும் அன்புடனும் எங்களைக் கவனிக்கும் அம்மா, காலையில் மாறிடுறாங்க. எதுக்கு எடுத்தாலும் சிடுசிடுன்னு கடுகா வெடிக்கிறாங்க, ஏன்னே புரியலை?

- வி. முத்துக்குமார், திருச்சி

இது பல வீடுகளில் நடக்கும் விஷயம்தான் நண்பா. வீட்டில் காலை டிபன், மதிய சாப்பாடு எல்லாமே அம்மாதான் செய்யணும். இதுக்கு நடுவில் ''சூடா ஒரு காபி''னு அப்பாவின் குரல் உள்ளே இருந்து வரும். ''அம்மோவ்... கீரை வாங்கறியா?''னு வெளியே குரல் வரும். ''மம்மி... டவல்''னு பாத்ரூமில் இருந்து ஒரு குரல். இது போதாதுனு இப்போ எல்லாம் செல்போன் வேற கூப்பிடுது. அவசர அவசரமா போய் எடுத்தால், ''மேடம் நாங்க அ ஆ இ ஈ பேங்கில் இருந்து பேசறோம். லோன் வேணுமா?''னு கேட்பாங்க. அந்த இரண்டு மணி நேரத்தில் அம்மா ஒற்றை ஆளாக எல்லா வேலைகளையும் செய்துட்டு இருப்பாங்க. அப்படி இல்லாம, அம்மாவின் பொறுப்புகளில் நீங்களும் பங்கெடுத்து சின்னச் சின்ன வேலைகளைச் செய்து பாருங்க. கடுகா வெடிக்கறவங்க வெண்ணெயா உருகுவாங்க. அதை வெச்சு காலை நேரத்தை ஸ்வீட்டா மாத்திக்கலாம்.

தந்திரத்துக்கு நரியை மட்டும் உதாரணம் சொல்றாங்களே... மற்ற விலங்குகளுக்குத் தந்திரப்புத்தி கிடையாதா ஜீபா?

- எஸ்.சௌமியா,தேவனாங்குறிச்சி

எறும்பில் தொடங்கி யானை வரைக்கும் எல்லாவற்றுக்குமே தந்திரப்புத்தி இருக்கு சௌமியா. புலி பதுங்கிப் பாய்வதும் ஒரு தந்திரம்தான். ஆபத்து வந்தால் இறந்ததுபோல் நடிக்கும், மனிதன் குரலில் சிரிக்கும் கூக்குபரா என்று தந்திரத்தில் டாக்டரேட் வாங்கிய ப(«)ல பறவைகள் பற்றி பெரிய லிஸ்ட்டே இருக்கு. நரியின் அதிர்ஷ்டம்... நம் முன்னோர்கள் நிறையக் கதைகள் மூலம் அதை பாப்புலரா ஆக்கிட்டாங்க.

மை டியர் ஜீபா,
சுட்டி விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை- 600 002.