ஸ்பெஷல்
Published:Updated:

பைலட் ஆகலாம் !

பைலட் ஆகலாம் !

'பெரியவன் ஆனதும் நீ என்ன பண்ணப்போறே?’னு கேட்டால்  டாக்டர், இன்ஜீனியர் ஆவேன்னு சொல்வாங்க. மருத்துவம், பொறியியலைத் தாண்டி ஏகப்பட்ட படிப்புகள் குவிஞ்சு இருக்கு.ஓரளவுக்கு அதைப் பத்தி தெரிஞ்சாலும், 'அதெல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைங்கதான் படிப்பாங்க’னு ஒதுங்கியே இருந்துடுறோம். இந்தத் தயக்கங்களைத் தள்ளிவைத்துவிட்டு, பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை இங்கு ஆராய்வோம்.

பைலட் ஆகலாம் !
##~##

விமானத்தில் பறப்பது என்பது எல்லோருடைய ஆசை, கனவாக இருக்கும். விமானத்தை ஓட்டும் பைலட் ஆக வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வருடத்துக்கு 25 சதவீதம் வளர்ச்சியடைந்துவருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விமானச் சேவை அளிக்கிறார்கள். தனியார் விமான நிறுவனங்கள் புதிய விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துக்கொண்டே இருக்கிறாங்க. அதோடு, சொந்தமாக விமானம் வைத்துக் கொள்ளும் கோடீஸ்வரர்கள், தனியார் நிறுவனங்கள் பெருகிவருகின்றன. இதனால், விமானிகளின் தேவை அதிகரித்து வருகிறது.

பைலட் ஆகலாம் !

பல்வேறு பயிற்சிகள் நிறைவடைந்த பிறகுதான் ஒருவரால் வர்த்தக விமானத்தின் காக்பிட்டில் அமர்ந்து விமானத்தை இயக்க முடியும். பைலட் ஆவதற்கான முதல் படி, ஸ்டூடன்ட் பைலட் லைசென்ஸ் பெறுவது. இதற்கு நீங்கள் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். முறையாக 10, பிளஸ் 2 பாடத் திட்டத்தின் கீழ் படித்திருக்க வேண்டும். கணிதம், இயற்பியலில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 16 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். நல்ல உடல் நலம், பார்வைத் திறன் இருக்க வேண்டும். அதன் பிறகு பிரைவேட் பைலட் லைசென்ஸ், கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெற வேண்டும். ஏர்லைன் டிரான்ஸ்போர்ட் பைலட் லைசென்ஸ் பெறுவதுதான் இதில் உச்சம். சென்னை யில் மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப்பில் அரசு மானியத் துடன் பயிற்சி அளிக்கப் படுகிறது. அதனால் கட்டணமும் குறைவு. இங்கு பொதுவாக விண்ணப் பங்கள் மார்ச் மாதம் முதல் வழங்கப்படுகின்றன

பைலட் ஆகலாம் !

தமிழகத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் சென்னையில் மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப்பும், தனியார் துறையில் சேலத்தில் சேலம் ஏர், புதுச்சேரியில் ஓரியன்ட் ஃப்ளைட் ஸ்கூல் என மூன்று இடங்களில் விமானிகள் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தவிர, இந்தியாவின் பிற ஃப்ளையிங் கிளப்களுடன் கூட்டுறவு மேற்கொண்டு, பல தனியார் நிறுவனங்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. முக்கிய ஃப்ளையிங் கிளப்களின் முகவரி.

பைலட் ஆகலாம் !