செஸ் விளையாட்டுப் போட்டியில் 14 வயதிலேயே சர்வதேச அளவில் முதல் இடத்தைப் பிடித்து, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து இருக்கிறார்... 10-ஆம் வகுப்பு படிக்கும் மிச்சலி கேத்ரீனா. இவர், சென்னையில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியின் ஸ்கூல் ஸ்டார்.

''இப்போ, அடுத்த வருடம் ரஷ்யாவில் நடக்க இருக்கும் காமன்வெல்த் செஸ் போட்டியில் கலந்துக்க, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்'' என்கிற கேத்ரீனா, 14 வயதுக்கு உட்பட்டவர்களில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் செஸ் பிளேயர்.

குட் ஷெப்பர்ட் பள்ளியில் கேத்ரீனா பெயரைச் சொன்னாலே குஷியுடன் வழிகாட்டுகிறார்கள். பிரின்சிபால் பிரின்சி, ''கேத்ரீனா எப்பவும் ஏதாவது சிந்தனையுடனே இருப்பாள். அவள் கண்களில் சாதிக்கும் துடிப்பு இருக்கும். துபாய், நார்வே, ஐரோப்பா, ஜப்பான்னு நிறைய நாடுகளுக்குப் போய், கோல்டு மெடல்களோடு திரும்பி வருவதைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கும். இந்தவருடம் சென்னையில் எஸ்டிஏடி - ராம்கோ 50-வது வேர்ல்டு ஜூனியர் மற்றும் ஜூனியர் கேர்ள்ஸ் செஸ் சேம்பியன்ஷிப் -2011 போட்டிகளில் தங்கப் பதக்கம் வாங்கினாள்.'' என்று சொல்லும்போது அவர் முகத்தில் பெருமிதம்.

''சில மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தி, படிப்பில் கோட்டை விட்டுடுவாங்க. ஆனா, கேத்ரீனா படிப்பிலும் டாப் கிளாஸ். தேர்வு சமயங்களில் போட்டிகள் வந்தாலும் பதற மாட்டாள். அந்த அளவுக்குத் தன்னம்பிக்கையாக இருப்பாள்'' என்கிறார் ஓர் ஆசிரியர்.

கேத்ரீனாவின் தாய் சுஜிமா ''அவளோட மிகப் பெரிய கனவு செஸ்ல கிராண்ட் மாஸ்டர் ஆவது. அவளுடைய சாதனைகளில் பள்ளிக்கும் முக்கிய பங்கு இருக்கு'' என்றார்.

சரி, கேத்ரீனாவைப் பற்றி அவள் வகுப்புநண்பர்கள்என்ன சொல்றாங்க?

''கேத்ரீனா எந்த வேலை செய்தாலும் பெர்பெக்ட்டா இருப்பாள். அடுத்த வருடம் காமன்வெல்த் போட்டியில கேத்ரீனா வெற்றி பெறுவதற்காக நாங்கள் எல்லோரும் உதவிசெய்யக் காத்துட்டு இருக்கோம். அதில் வெற்றி அடைந்தால், அடுத்த வேர்ல்டு லெவல் செஸ் சாம்பியன் அவள்தான். வீ வில் ப்ரே ஃபார் ஹெர்.'' என்று கோரஸாக சொன்னார்கள்.

தன் உயர்வுக்கான விஷயமாக கேத்ரீனா சொல்லும் டிப்ஸ்... ''சூரியனுக்கு முன்னாடி யார் ஒருத்தர் எழுந்துக்கறாங்களோ... அவங்க அந்த சூரியன் உயரத்தைத் தொட முடியும்!''

பெயர்:
மிச்சலி கேத்ரீனா
படிப்பு:
10-ஆம் வகுப்பு
பள்ளி:
குட் ஷெப்பர்ட் கான்வென்ட், சென்னை.
சாதனை:
தேசிய அளவில்
சப் ஜூனியர்
நம்பர் ஒன்.