ஸ்பெஷல்
Published:Updated:

மின்சார அகிலன் !

ப.பிரகாஷ் தி.விஜய்

மின்சாரம் !

##~##
மின்சார அகிலன் !

நாட்டின் முக்கியப் பிரச்னைகளில் இதுவும் ஒன்று. மின்சாரத்தைச் சேமிப்பதும், மின்சார உற்பத்திக்கு புதிய வழிமுறைகளைக் கண்டறிவதும் காலத்தின் கட்டாயம்.

இந்த நிலையில், சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த ஒரு சிறுவன், மின்சாரத்தைத் தயாரிக்க ஒரு புதிய வழிமுறையைக் கண்டுபிடித்து இருக்கிறார். எல்லோரும் மின்சார அகிலன் என்றே அவரை செல்லமாக அழைக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சித்தராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கிறார் அகிலன்.

''என் அம்மா தனியார் பள்ளியில் தோட்ட வேலை செய்யுறாங்க. இரவில், வீட்டில் தையல் வேலை செய்வாங்க. அடிக்கடி கரன்ட் போயிடும். அம்மா கஷ்டப்படுவாங்க. இதுக்கு நாமே தீர்வு கண்டால் என்னன்னு நினைச்சேன்...'' என்கிறார்.

மின்சார அகிலன் !

அம்மாவின் தையல் மிஷினே அகிலனுக்கு கை கொடுத்து இருக்கிறது. ''தையல் மிஷின் பெடலை மிதிக்கும் போது சக்கரம் சுழலும். அவற்றில் டைனமோ செட் செய்தால் மின்சாரம் கிடைக்குமானு யோசிச்சேன். அதை மாதிரியாக வைத்துக்கொண்டு படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் உற்பத்தி ஆகும் முறையைக் கண்டுபிடிச்சேன்'' என்கிறார்.

ஸ்கொயர் பைப், சைக்கிள் ஷாஃப்ட், செயின், டைனமோ, கியர் வீல்ஸ், பேரிங்ஸ் ஆகியவற்றைக் கொண்டு இந்த மாதிரியை வடிவமைத்து இருக்கிறார் அகிலன்.

மின்சார அகிலன் !

அடுக்குமாடிக் குடியிருப்புகள், மலைக் கோயில்கள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் மக்கள் தினமும் படிக்கட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். அங்கே எல்லாம் இந்த முறையைப் பயன்படுத்தினால், நிறைய மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்பது அகிலனின் ஐடியா.

மின்சார அகிலன் !

மத்திய அரசு, இன்ஸ்பயர் விருதுக்கான அறிவியல் கண்காட்சிக்கு மாதிரிகளை உருவாக்க, பள்ளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. அகிலனின் தலைமை ஆசிரியர் தேவ.கனகராஜன் அந்தத் தொகையை அகிலனுக்குக் கொடுத்து ஊக்கப்படுத்தி இருக்கிறார்.

மின்சார அகிலன் !

''அகிலனைப் போல் விஞ்ஞானிகள் நிறையப் பேர் கிராமங்களில் இருந்து உருவாக வேண்டும். அதற்கு, அகிலன் ஒரு தொடக்கமாக இருப்பது எங்கள் பள்ளிக்குக் கிடைத்த பெருமை'' என்கிறார் கனகராஜன்.

மின்சார அகிலன் !