பொது அறிவு
Published:Updated:

விகடன் உருவாக்கிய ‘விகடன்’ நான்!

விகடன் உருவாக்கிய ‘விகடன்’ நான்!
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் உருவாக்கிய ‘விகடன்’ நான்!

ஜெ.முருகன் - படங்கள்: அ.குரூஸ்தனம்

விகடன் உருவாக்கிய ‘விகடன்’ நான்!

குழந்தைகளுக்கான உலகில் நீண்ட நெடுங்காலமாகத் தன்னை இணைத்துக்கொண்டவர் வேலு சரவணன். 2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருதினை குழந்தைகள் இலக்கியத்தில் தொடர்ந்து பங்களித்து வருவதற்காகப் பெற்றிருக்கிறார். நாடகங்கள் மற்றும் கதைகளின் மூலம் குழந்தைகளுக்கான பாடங்களை எப்படி நடத்துவது என்பது குறித்த பயிற்சிகளைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அளித்துவருகிறார். இந்தப் பயிற்சிகளின் மூலம் ஆயிரக் கணக்கில் திறமையான ஆசிரியர்களை உருவாக்கியிருக்கிறார் இந்தக் குழந்தைகளின் கோமாளி. குழந்தைகளுக்கான தேர்ந்த கதைசொல்லியான அவரை நம் சுட்டிகளுக்காக புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.        

விகடன் உருவாக்கிய ‘விகடன்’ நான்!

‘உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.’

“புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தினுள் இயங்கிவரும் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக என் அன்புக் கூட்டாளிகளான குழந்தைகளுக்கு நான் ஒரு செல்லக்கோமாளி. குழந்தைகளின் மகிழ்ச்சிக் கொண்டாட்டமே என் உலகம். இந்த விருது கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. பொதுவாக எங்களைப் போன்ற நாடகக் கலைஞர்களுக்கு ‘சங்கீத் நாடக அகாடமி’ போன்ற விருதுகள்தான் கொடுப்பார்கள். அப்படி இருக்கும்போது படைப்பு இலக்கியத்துக்காக இந்தப் பரிசு கிடைத்திருப்பது நாடகத் துறைக்கும் எனக்கும் மட்டுமல்ல குழந்தைகள் உலகத்துக்கும் பெருமையான ஒன்று. குழந்தைகளின் உலகத்தில் நான் பயணிக்க ‘சுட்டி விகடன்’ ஒரு முக்கியக் காரணம். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் விகடன் உருவாக்கிய ‘விகடன்’ நான்.

என் இத்தனை வருடப் பயணத்தில் குழந்தைகளைத் தவிர வேறு யாரையும் எனக்குத் தெரியாது. எனது பள்ளி, கல்லூரிப் பருவங்கள்கூட எனக்கு மறந்துவிட்டது. குழந்தைகளை மகிழ்விப்பதைவிட உலகத்தில் வேறு பெரிய விஷயம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நான் விடப் போவதில்லை. உண்மையில் இந்த விருது என் கூட்டாளிகளான குழந்தைகளுக்கானது” என்றார் சந்தோஷம் பொங்க.