Published:Updated:

பென் டிரைவ்

பென் டிரைவ்

பென் டிரைவ்

பென் டிரைவ்

Published:Updated:
பென் டிரைவ்
பென் டிரைவ்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஸ்திரேலியாவின் மோட்டார் சைக்கிளிஸ்ட் ராபின் மேடிசன். உயிருக்கே ஆபத்தான சாகசங்கள் செய்வதுதான் இவரின் பொழுதுபோக்கு. சமீபத்தில் க்ரீஸ் நாட்டில் உள்ள கொரிந்த் கால்வாயை (Corinth Canal) மோட்டார் சைக்கிளில் அலேக்காகத் தாவி இருக்கிறார். 279 அடி அகலம்கொண்ட இந்தக் கால்வாயைத் தாண்டும்போது, கொஞ்சமே கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும்... போச்சு. ஆனால், சோதனைகளைக் கடந்து உலக சாதனை புரிந்து இருக்கிறார் ராபின். இவர் தாண்டிய உயரம், கால்வாயின் மட்டத்தில் இருந்து பார்த்தால்... 311 அடி தூரம். அம்மாடி!

பென் டிரைவ்

 ரசனையும் திறமையும் புதுமையும் கூட்டணி போட்டால்... கொண்டாட்டம்தான். அந்த வரிசையில்... அகமதாபாத்தைச் சேர்ந்த  ஷேக் சலீம்பாய், தீக்குச்சிகளை உபயோகித்து தாஜ்மஹாலை எழுப்பி இருக்கிறார். சின்னச் சின்ன தீக்குச்சிகளைக்கொண்டு தாஜ்மஹாலை உருவாக்குவது மிகவும் கடினம். ஆனாலும், இதனை சவாலாக எடுத்துக்கொண்டார் சலீம்பாய். ஓர் ஆண்டு கடின உழைப்பும், 75,000 தீக்குச்சிகளும், இந்த அழகான தாஜ்மஹால் ஆகி இருக்கிறது. வெல்டன் சலீம்!

பென் டிரைவ்

சமீபத்தில், டெல்லி 'இந்தியா கேட்’ அருகே நடந்த 'காற்றாடித் திருவிழா’வை சுட்டிகளின் திருவிழா என்று சொல்லலாம். தமிழகம், உத்திரப்பிரதேசம், குஜராத், சண்டிகர் எனப் பல மாநிலங்களில் இருந்தும் காற்றாடிப் பிரியர்கள் விதவிதமான பட்டங்களைப் பறக்கவிட்டு பார்வையாளர்களை மகிழ்வித்தனர். காற்றாடிகள்... கலாசார நடனங்கள், மேஜிக் ஷோக்கள் என வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் வசீகரித்தது இந்தத் திருவிழா. பட்டம் பற பற!

பென் டிரைவ்

 குழந்தைகள் தினத்தன்று மின்னிய கூகுளின் டூடுலை டிசைன் செய்தது நொய்டாவைச் சேர்ந்த வர்ஷா. நவம்பர் 14-ஆம் தேதிக்கான Doodle 4 Google போட்டியில் இந்தியாவில் இருந்து போட்டியிட்ட ஆயிரக்கணக்கான சுட்டிகளில்... வர்ஷா வரைந்த இசைக் கருவிகளால் அமைந்த டிசைனுக்குத்தான் முதல் பரிசு. 'வெவ்வேறு கலாசாரங்களைக்கொண்ட இந்தியா, உலகத்துக்கு நிறைய இசைக் கருவிகளை வழங்கி இருக்கிறது. அதைப் பிரதிபலிக்கும் வகையில்தான் இந்த டூடுலை வடிவமைத்தேன்!' என்கிறார் வர்ஷா. கிளாப்ஸ் பண்ணலாமே வர்ஷாவுக்கு!  

பென் டிரைவ்

வறுமையில் வாடும் மாணவர்களுக்கு இலவசமாகப் புத்தகங்களை வழங்கும் 'அவீவா வால் ஆஃப் எஜூகேஷன்’ திட்டத்தைப் பிரபலப்படுத்த உறுதுணையாக இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 7.5 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. 'எனது மகள் டாக்டர் ஆக விரும்புகிறார். அவரால் படித்து டாக்டராக முடியும் என்கிறபோது, நம் நாட்டில் ஏழ்மையில் வாடும் அனைத்து மாணவர்களுமே தாங்கள் விரும்பும் படிப்பைப் படித்து சாதிக்க முடியும். இதற்கு, என்னால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்வேன்!' என்று சொல்லி இருக்கிறார். புத்தக நன்கொடை பற்றிய தகவல்களுக்கு www.prathambooks.org க்ளிக்கலாம்... படிக்கலாம்... சாதிக்கலாம்!

பென் டிரைவ்

 சில்ரன்ஸ் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியா (CFSI) தலைவரான நடிகை-இயக்குனர் நந்திதா தாஸ், 'மான்சூன் தமால்’ என்ற திட்டத்தை அறிவித்து இருக்கிறார். இதன்படி, சிஎஃப்எஸ்ஐ அமைப்பு ஆண்டுக்கு 10 திரைப்படங்களைத் தயாரிக்கும். அந்தப் படங்கள், நாட்டின் 10 நகரங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்காகத் திரையிடப்படும். மாணவர்கள் ரசித்து மகிழ்வதோடு, உபயோகமான விஷயங்களைத் தெரிந்துகொள்ளச் செய்யும் சுவாரசியமான படங்களைத் தயாரிப்பதே நோக்கம். இந்த அமைப்பின் பல்வேறு சிறுவர் நலச் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள http://cfsindia.org தளத்துக்குச் செல்லலாம். டின்டின் மாதிரி நிறையப் படங்கள் எடுங்க!

பென் டிரைவ்

 குஜராத்தில் மாணவர்களுடன் உற்சாகமாக உரையாடிக்கொண்டு இருந்தார் அப்துல் கலாம். அப்போது, 'இந்தியாவில் லஞ்சம் ஊழலை ஒழிக்க என்னதான் வழி?’ என்று அவரிடம் கேட்டார்கள். உடனே, 'ஊழலை ஒழிக்க சுட்டிகள்தான் சரியான தூதர்கள்!’ என்றார் கலாம். அதை ஆமோதித்த சுட்டிகள் அனைவரையும், 'எங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஊழலுக்குத் துணைபோகாத வகையில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!’ என்று உறுதிமொழி எடுக்கவைத்தார் கலாம். சலாம் தாத்தா!

பென் டிரைவ்

ஜப்பானில் 'கனஜாவா’ நகரில் உள்ள கான்டெம்பரரி ஆர்ட் மியூசியத்தில் இருக்கும் ஒரு நீச்சல் குளம் உங்களை ஆச்சரியப்படுத்தும். காரணம், தண்ணீருக்குள் மனிதர்கள் ஜாலியாக நடமாடுவதுதான். விஷயம் சிம்பிள்... நீச்சல் குளத்தின் மேலாக கனமான கண்ணாடியைப் பொருத்தி, அதன் மேல் ஓர் அளவு வரை தண்ணீரை நிரப்பி இருப்பார்கள். கண்ணாடிக்குக் கீழே காலி இடமாக இருக்கும். அங்கு செல்ல தனி வழியும் இருக்கும். கண்ணாடிக்குக் கீழே நிற்பவர்களை மேலே இருந்து பார்த்தால், அவர்கள் தண்ணீருக்குள் நிற்பது போலவே தெரியும். நனையாமலே நீச்சல் குளத்துக்குள் ஒரு ட்ரிப் அடிக்கலாம்!