Published:Updated:

செய்திதாள்

இரா. நடராசன் கே.ராஜசேகரன்

செய்திதாள்

இரா. நடராசன் கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

ஹலோ... நான் பேசுறது கேட்குதா? நான்தான் நீங்கள் தினமும் ஆர்வத்துடன் படிக்கும் நியூஸ் பேப்பர். நான் எப்படி எல்லாம் உருவாகி வந்தேன் தெரியுமா?

ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கிட்ட ரெண்டு பேர் நாங்க. நியூஸ்... பேப்பர்னு ரெண்டு பேரு. மரத்தில் பட்டையோடு பட்டையாக இருந்த நான், அங்கே இருந்து முதலில் பேப்பர் மில்லுக்குப் போனேன். மூங்கில் மரம்தான் பெரும்பாலும் நான் பிறக்கும் இடம் என்றாலும்... சமயத்தில் ஓக், நெல்லின்னு மற்ற மரங்களில் இருந்தும் பிறப்பேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மரக்கூழாக என்னை ஆக்கி, அச்சுகளில் ஏற்றி, பிரஸ் மூலம் அழுத்தி செதில்செதிலா இயந்திரங்கள் வைத்துச் சீவுறாங்க. ரொம்ப ஒஸ்தியான பேப்பரை எல்லாம்  நோட்டுப் புத்தகம், பரீட்சைப் பேப்பர், ரெக்கார்டு நோட்டுகள் செய்ய அனுப்பிடுறாங்க. மறு சுழற்சி மற்றும் கழிவுகளில் இருந்து தயாரான நியூஸ் பிரின்ட் எனும் ரகமாக கடைசியில் மாறினேன். என்னை, டன் எடைக்குப் பெரிய பண்டலாக்கிச் சுத்தினாங்க. இங்கே எனக்கு ரீல்னு பேரு. இங்கே இருந்து நான் செய்தித்தாள் அச்சிடும் ஆஃபீஸுக்கு லாரியில் போய்ச் சேர்ந்தேன். சாதாரண பேப்பரா இருந்தவன், இங்கே நியூஸ் பேப்பரா மாற ஆரம்பிச்சேன். எப்படித் தெரியுமா?

செய்திதாள்

முதலில் பல ஊர்களில் இருந்து, செய்தி சேகரிப்பாளர்கள் செய்திகளை மின்னஞ்சலில் டைப் செய்து இந்த ஆபீஸுக்கு அனுப்புறாங்க. 1970 வரை லைனோ டைப் செட்டிங் எனும் முறைப்படி, தொழிலாளர்கள் கையால் எழுத்து அச்சுகளை விடிய விடியக் கோத்து ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. இந்த அச்சுக்கோக்கும் முறையைக் கண்டுபிடித்தது ஓட்மார் மெக்ரென்தாலர்னு ஒரு ஜெர்மனிக்காரர். 1884-ல் பல நாடுகளில் இந்த அச்சுக்கோப்பு முறை அறிமுகம் ஆனது.

இது ரொம்பக் கஷ்டமா இருந்தது. தப்பைத் திருத்தணும்னா, திரும்ப அச்சு எழுத்துகளை மாத்தணும். நல்லவேளை விரைவில் கணினி முறையில் டைப் செய்ய முடிந்தது. பிறகு, பிழைத் திருத்தும் செக்ஷனுக்கு அது போகிறது. அங்கே மொழியியலில் கில்லாடிகளாய் இருக்கும் பிழைத் திருத்த வல்லுனர்கள் பிரதியைப் படித்து, அதில் தவறுகளை அழித்து... ஃபைனல் காப்பி எடுப்பாங்க. அதற்கு ஆசிரியர் இலாகா இறுதி வடிவம் தருவாங்க.

அடுத்த கட்டம்... வடிவமைப்பு. இங்கு செய்திகளையும் படங்களையும் வைத்து பக்கங்களை வடிவமைப்பார்கள். அடுத்து வடிவமைத்த பக்கங்களை கணினி மூலம் 'ஃபிலிம்’களில் ஏற்றுவார்கள். இறுதியாய் ஒருமுறை இதழ் ஆசிரியர்கள் வாசித்து, புகைப்படங்களைத் தனியே 'ஸ்கேன்’ செய்து ஃபிலிம்களில் ஏற்றிவிடுவார்கள்.

செய்திதாள்

மாவட்டவாரியாகவும், பிரதான மாநில, தேசிய அளவிலும் பக்கங்களைப் பிரித்து அடுக்கும் வேலை ஃபிலிம்களில் முடிவானதும்... ஸ்டிரிப்பர் எனப்படும் நாடாக்களாக அதை உருமாற்றுகிறார்கள். பிறகு, பிளேட் செய்யும் துறைக்கு அனுப்பப்படுகின்றன. அலுமினியத் தட்டுகளில் ஒரு சமயத்துக்கு இரு பக்கம் எனும் அடிப்படையில் பக்கங்கள் அச்சுகளில் ஏறும்.

பிறகுதான் மணிக்கணக்கில் காத்திருக்கும் என்னிடம் வருகிறார்கள். அதாவது, பேப்பர் பிரின்டிங் செக்ஷன். இது இரண்டு மாடி உயரம்கொண்ட பிரமாண்டமான மெஷின். மேலிருந்து கீழ்நோக்கி நான் வேகமாகப் பாய்ந்தபடியே என் உடம்பில் செய்திகளை ஏற்றிக்கொள்கிறேன். மூன்று ரீல் ஸ்டாண்டு மேலே இருக்கும் அடுத்தடுத்து உருளையில் என்னை இடைவெளி விடாமல் கொடுக்கவேண்டும். ஏராளமான தொழிலாளர்கள் இங்கே வேலை செய்வார்கள். பயங்கரமாக சப்தம் வரும். காதில் ஓலி கேட்கா கருவிகளான பிளக் அணிந்திருப்பார்கள்.

அலுமினியம் தட்டு சிலிண்டர்களில் இருந்து செய்திகளை என் உடம்பில் அச்சேற்றிக்கொண்டு, நான் அடுத்து செல்லும் இடம் ஃபோல்டர் எனப்படும் 'மடிப்பு’ப் பகுதி. அங்கேதான் என்னை இயந்திரங்கள் கொண்டு சரியாக மடித்து, தனித்தனி 'பேப்பர்’ பிரதியாக்கி, பண்டல் (கட்டுக் கட்டும்) பகுதிக்கு அனுப்புவாங்க.

செய்திதாள்

ஒரு மணியில் 60,000 பிரதிகள், 24 கொண்ட கட்டுகள். காலையில் நீ தூங்கி எழுந்து கண் கசக்கியபடியே வாசலில் வந்து நிற்பதற்குள்... ரயில், வேன், லாரியில் பல இடங்கள் கடந்து, பேப்பர் போடும் சைக்கிள்காரர் மூலமாக நான் வந்து சேருகிறேன்.

எனக்குப் பின்னால் எத்தனை பேருடைய உழைப்பு இருக்கிறது பார்த்தாயா... அவர்களுக்கு எல்லாம் ஒரு சல்யூட்!