Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப் கான்

மை டியர் ஜீபா !

ஹாசிப் கான்

Published:Updated:
##~##
'கழுதைப் புலி’ மனிதர்களைப் போலவே சிரிக்குமாமே... உண்மையா ஜீபா?

- ஏ.சரத்குமார், மயிலாடுதுறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இல்லை சரத். கழுதைப் புலி கொட்டாவி விடும்போது, அதன் முகம் சுருங்கி, கண்கள் இடுங்கி, பார்ப்பதற்கு சிரிப்பதைப் போன்ற தோற்றம் தரும். அதைத்தான் தவறாகச் சொல்கிறார்கள். எல்லா விலங்குகளைப் போல இதுவும் ஓவியர்களின் கார்ட்டூனில் தான் சிரிக்க முடியும். அதே சமயம், அதற்கு வேறு சில சிறப்புகள் உண்டு. கனைப்பது, ஊளை இடுவது, குரைப்பது, முனகுவது, தும்மல், விக்கல் இவை அனைத்தையும் மனிதனுக்கு அடுத்தபடியாக செய்யக் கூடிய ஒரே விலங்கு கழுதைப் புலிதான். அது மட்டுமா? ஓர் இரையைக் குறிவைத்து விட்டால், அது எவ்வளவு தூரம் ஓடினாலும் கழுதைப் புலி விடாமல் துரத்திச் சென்று அதை வீழ்த்திச் சாப்பிடும் இயல்புடையது. சிங்கம், புலி சாப்பிட்ட மிச்சத்தைச் சாப்பிடும் என்று சொல்லப்படுவது எல்லாம் சும்மா!

ஹாய் ஜீபா... இந்த விடுகதைக்கு விடை சொல்லு பார்க்கலாம்... 'ஆடத் தயாராய் சட்டை போடுவான்; ஆடும் முன்பே அவிழ்த்துவிடுவான்- அவன் யார்?

     -ஜி.கல்யாணி, சிதம்பரம்.

'நாட்டி’ பையனா இருப்பானோ?  ஆனாலும் அவனை எல்லோரும் தங்களோட வட்டத்தில் 'பிட்’டாக்கப் பார்ப்பாங்க. சிலர் உள்ளங்கையில் தாங்கி ஆட்டத்தை ரசிப்பாங்க. அட... உன்னோட ஊர் பெயரிலேயே விடை ஒளிஞ்சு இருக்கு கல்யாணி. 'சித’ என்கிற இரண்டு எழுத்தை எடுத்துட்டு வேற ஒரு எழுத்தைப் போடணும். ஹேய் டண்டணக்கா டணக்கு டக்கா!

மை டியர் ஜீபா !

படுத்துக்கிட்டே படிச்சா என்ன தப்பு ஜீபா?

   - அ.பிரதிக்ஷா, கோயம்புத்தூர்.

அதானே! இதே கேள்வியை ஒரு டாக்டர்கிட்டே கேட்டேன். 'நாம் படுக்கையில் படுத்துட்டு இருக்கும்போது, உடலில் முக்கியமான தசைப் பகுதிகள் ஓய்வில் இருக்கும். அப்போது, அங்கே லாக்டிக் என்ற அமிலம் சுரக்கும். அந்த அமிலம் ரத்தத்துடன் கலக்கும். அதனால், ரத்தத்தில் பிராண வாயு என்ற ஆக்சிஜன் குறையும். இந்த நிலையில் நாம் மூளைக்கு வேலை தரும் விதமாகப் படிப்பதால், அங்கே ரத்தம் அதிகம் தேவைப்படும். அதைப் பூர்த்தி செய்ய ஆக்ஸிஜன் குறைவான இந்த ரத்தம் அங்கே செல்லும். வேறு வழி இல்லாமல் அதை ஏற்று வேலை செய்யவேண்டிய கட்டாயம் மூளைக்கு ஏற்படும். அதாவது, எனர்ஜி குறைவான உணவைச் சாப்பிட்டுட்டு ஓட்டப் பந்தயத்தில் ஓடுற மாதிரி. படுத்துக்கிட்டே படிச்சா சரியா, தப்பானு இனி நீயே முடிவு செய்துக்க ஜீபா!’னு அந்த டாக்டர் சொன்னார். என்ன செய்யலாம் பிரதிக்ஷா? மூளையை இப்படி 'படு’த்தறதுக்குப் பதிலா... ஃப்ரெஷ்ஷா உட்கார்ந்தே படிப்போமே!

ஹாய் ஜீபா... கப்பல்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கத்தைக் கண்டுபிடிச்சது யாரு?

         -ஆர். கார்த்திக், சென்னை-33.

எகிப்தியர்கள்தான் அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்கள். சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முன்னால், நைல் நதிக்குள் மரக்கலங்கள் பயன்படுத்  தப்பட்டன. அவற்றுக்கு வழிகாட்ட, கலங்கரை விளக்கம் உருவாக்கப்பட்டது. பெரிய பெரிய கற்களை கோபுரம்போல் அடுக்கி மேடையை உருவாக்குவார்கள். இரவில் அதன் உச்சியில் விறகுகளைக் குவித்து எரியவிடுவார்கள். அந்த வெளிச்சம் பார்த்து, மரக்கலங்கள் வரும். காலையில் எல்லா விறகுகளும் எரிந்து முடிந்து புகை வரும். பகலில் அதை அடையாளமாக வைத்து வருவார்கள். எகிப்தின் பாரோஸ் தீவில் அமைக்கப் பட்ட அலெக்ஸாண்ட்ரா கலங்கரை விளக்கம் 120 முதல் 140 மீட்டர் உயரத்தில் இருந்து. இதுதான் உலகின் முதல் உயரமான கலங்கரை விளக்கம். பழங்கால ஏழு உலக அதிசயங்களில் அதுவும் ஒன்றாக இருந்தது. நாகரிகம் வளர வளர, கலங்கரை விளக்கமும் வளர்ந்தது. விறகுக்குப் பிறகு, மண்எண்ணெய் வந்தது. இப்போது மின்சார விளக்குகள் மையமாக எரிய, அதைச் சுற்றி பெரிய பெரிய லென்ஸ்கள் பொருத்தப்பட்ட சிலிண்டர் சுழன்று வெளிச்சம் காட்டுகிறது.